Sunday, November 20, 2016

துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்



36 . துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்


فضائل الأوقات - (1 / 311)‏
‏ 149 - أنبأنا أبو عبد الله الحافظ أجازة أن أبا عبد الله محمد بن علي الصنعاني أخبرهم حدثنا إسحاق بن إبراهيم حدثنا عبد الرزاق قال أخبرني من سمع ‏ابن البيلماني يحدث عن [ 54
 أ ] أبيه عن ابن عمر بن الخطاب قال خمس ليالي لا يرد فيهن الدعاء ليلة الجمعة وأول ليلة من رجب وليلة النصف من ‏شعبان وليلتا العيد

ஐந்து இரவுகளில் கேட்கப்படும் துஆக்கள் மறுக்கப்படுவதில்லை. 1. ஜும்ஆ இரவு, 2. ரஜப் மாத்தின் இரவு, 3. ஷஅபானின் பாதி (15வது) இரவு, 4,5. இரு பெருநாட்களின் இரவுகள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி),
நூல் : ஃபாலாயிலுல் அவ்காத், பாகம்: 1, பக்கம்: 311.
இந்தச் செய்தி நபிகளாரின் கூற்று அல்ல. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. மேலும் இச் செய்தியில் இடம்பெறும் இப்னுல் பைலமானீ என்பவர் பலவீனமானவராவார்.
المجروحين - (1 / 318)‏ لان ابن البيلمانى ليس في الحديث بشئ
இப்னுல் பைலமானீ என்பவர் தீஸ் துறையில் எந்த மதிப்பும் இல்லாதவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் கூறுகிறார்கள்.
நூல் : அல்மஜ்ரூீன், பாகம்: 1, பக்கம்: 318.

الكامل في ضعفاء الرجال - (7 / 384)‏
قال البخاري مُحَمد بن عَبد الرحمن بن البيلماني ، عن أبيه منكر الحديث وكان الحميدي يتكلم فيه.وقال النسائي مُحَمد بن عَبد الرحمن بن البيلماني ، عن ‏أبيه منكر الحديث

இப்னுல் பைலமானீ என்பவர் தம் தந்தை வழியாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பவர் என்று புகாரி மற்றும் நஸாயீ ஆகியோர் கூறுகிறார்கள். மேலும் ஹுமைதீ அவர்கள் இவரை விமர்சித்துள்ளதாகவும் புகாரி அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: அல்காமில், பாகம்: 7, பக்கம்: 384.

No comments:

Post a Comment