37 . பெருநாள் தொழுகைக்குப் பிறகு சுன்னத் தொழுதல்
1283حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو الرَّقِّيِّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي قَبْلَ الْعِيدِ شَيْئًا فَإِذَا رَجَعَ إِلَى مَنْزِلِهِ صَلَّى رَكْعَتَيْنِ رواه ابن ماجة
பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) எதையும் தொழ மாட்டார்கள். (தொழுது) வீட்டிற்கு திரும்பிய பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : இப்னுமாஜா (1283).
இந்தச் செய்தியில் இடம்பெறும் அப்துல்லாஹ் பின் முஹ்ம்மத் பின் அகீல் என்பவர் பலவீனமானவராவார்.
تهذيب التهذيب ـ محقق - (6 / 13)
عن أحمد منكر الحديث وقال الدوري عن ابن معين ابن عقيل لا يحتج بحديثه (1) وقال معاوية بن صالح عن ابن معين ضعيف الحديث وقال محمد بن عثمان بن أبي شيبة عن ابن المديني كان ضعيفا ال الجوزجاني أتوقف عنه عامة ما يرويه غريب. وقال أبو حاتم لين الحديث ليس بالقوي ولا ممن يحتج بحديثه قال النسائي ضعيف وقال ابن خزيمة لا أحتج به لسوء حفظه
இப்னு மயீன், இப்னுல் மதீனீ, அபூாத்திம், நஸாயீ ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று அ்மத் அவர்கள் கூறுகிறார்கள். இவருடைய செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று இப்னு மயீன் அவர்கள் கூறுகிறார்கள். இவருடைய செய்தியை நான் நிறுத்தி வைத்து விடுவேன். ஏனெனில் இவருடைய பெரும்பாலான செய்தி புதுமையானதாக உள்ளது என்று ஜவ்ஸஜானீ அவர்கள் கூறுகிறார்கள். இவர் நினைவாற்றல் குறைவுடையவர் எனவே இவருடைய செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இப்னு ஹுஸைமா அவர்கள் கூறுகிறார்கள்.
நூல் : தஹ்தீப்பு தஹ்தீப் , பாகம்: 6, பக்கம் : 13.
No comments:
Post a Comment