Sunday, November 20, 2016

தனித்து பயணம் செய்யலாமா ?



38 . தனித்து பயணம் செய்யலாமா ?



سنن الترمذى - مكنز (6/ 440، بترقيم الشاملة آليا)
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِىُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « الرَّاكِبُ شَيْطَانٌ وَالرَّاكِبَانِ شَيْطَانَانِ وَالثَّلاَثَةُ رَكْبٌ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ عَاصِمٍ وَهُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو حَدِيثٌ حَسَنٌ.

"வாகனத்தில் தனியாகப் பயணம் செய்யும் ஒரு வாகனப் பயணி ஷைத்தான் ஆவார். இரு வாகனப் பயணிகள் இரு ஷைத்தான்களாவர். மூன்று பயணிகளே பயணிகள் ஆவர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஷுஐப் (ரலி)
 நூல் :திர்மிதி 1595, அபூதாவூத் 2243, முஸ்னத் அஹ்மத் 6572, 6831, ஹாகிம் 2426, அஸ்ஸுனனுல் குப்ரா (நஸஈ) 8527, அஸ்ஸுனனுல் குப்ரா (பைஹகி) 9590.

மேற்கண்ட அனைத்து நூல்களிலும் உள்ள அறிவிப்பாளர் தொடரில் அப்துர்ரஹ்மான் இப்னு ஹர்மலா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

تهذيب التهذيب - ابن حجر (6/ 146)
 330 - م 4 مسلم والأربعة عبد الرحمن بن حرملة بن عمرو بن سنة الأسلمي أبو حرملة  قال يحيى بن سعيد عنه كنت سيء الحفظ فرخص لي سعيد في الكتابة قال يحيى بن سعيد محمد بن عمر وأحب إلي من بن حرملة وكان بن حرملة يلقن وقال بن خلاد الباهلي سألت القطان عنه فضعفه ولم يدفعه وقال إسحاق عن بن معين صالحوقال أبو حاتم يكتب حديثه ولا يحتج به قال النسائي ليس به بأس وذكره بن حبان في الثقات وقال يخطىء وقال بن سعد توفي سنة خمس وأربعين ومائة قال محمد بن عمرو كان ثقة كثير الحديث روى له مسلم حديثا واحدا متابعة في القنوت قلت وقال الساجي صدوق يهم في الحديث وقال بن عدي لم أر في حديثه حديثا منكرا ونقل بن خلفون عن بن نمير أنه وثقه وقال الطحاوي لا يعرف له سماع من أبي علي الهمداني

இவரைப் பற்றி  இப்னு அதீ அவர்கள், "இவர் உறுதியானவர் அல்ல" என்றும், அபூ ஜஅஃபர் மற்றும் யஹ்யா பின் ஸஈத் அல்கத்தான் ஆகியோர் இவரை 'பலவீனமானவர்' என்றும், அபூ ஹாத்தம் அர்ராஸி அவர்கள், 'இவர் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படத் தக்கவர் அல்ல' என்றும் விமர்சித்துள்ளனர். எனவே இந்த ஹதீஸ் ஏற்கத் தக்கது அல்ல.
 (தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 6, பக்கம்: 146

No comments:

Post a Comment