Monday, November 7, 2016

தூய்மையான உழைப்பு

6. தூய்மையான உழைப்பு

عن أبي هريرة رضي الله عنه قال  قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب ولا يقبل الله إلا الطيب وإن الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبه كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்.'

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல் : புஹாரி ( 1410 ) முஸ்லிம் ( 1842 ) திர்மிதீ ( 661 ) இப்னு மாஜா ( 1842 ) அஹ்மத் (7578 ) முஅத்தா மாலிக் ( 1874 ) தாரமீ ( 1675 )

விளக்கம் :

றுமையில் வெற்றி பெறுவதற்கு, தர்மம் செய்வது முக்கியமானதாகும் அந்தத் தர்மம் நல் உழைப்பின் மூலம் வந்த பொருளாக இருக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் நல்வழியில் உழைத்து அதன் மூலம் செய்யும் தர்மத்தை மட்டுமே ஏற்றுக் கொள்வான்.


ஹாராமான மார்க்கம் தடுத்த வழியில் சம்பாதித்துக் கொடுக்கும் தர்மம் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான்.



அதே நேரத்தில் ஹலாலான மார்க்கம் அனுமதித்த வழியில் சம்பாதித்த பொருள் மிக மிகச் சிறியதாக இருந்தாலும் அதை அல்லாஹ் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டு அதற்கு ஏராளமான நன்மைகளைப் பதிவு செய்கிறான். எனவே மார்க்கம் அனுமதித்த வழியில் மட்டும் உழைத்து தர்மம் செய்து மறுமையில் வெற்றியடைவோம்.

No comments:

Post a Comment