Monday, November 7, 2016

உயர்ந்த கை

7. உயர்ந்த கை

عن حكيم بن حزام رضي الله عنه  عن النبي صلى الله عليه وسلم قال اليد العليا خير من اليد السفلى وابدأ بمن  - ص 519 - تعول وخير الصدقة عن ظهر غنى ومن يستعفف يعفه الله ومن يستغن يغنه الله


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.'

ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.

 நூல் : புஹாரி ( 1428 ) முஸ்லிம் ( 1034 ) நஸாயீ (2531 ) அபூதாவூத் (1676) அஹ்மத் (9330) தாரமீ (1650)

விளக்கம் :

இவ்வுலகில் சிலர் செல்வந்தராகவும் , பலர் ஏழையாகவும் உள்ளனர். ஏழைகளாக இருக்கும் பல அடுத்தவர்களிடம் சென்று உதவிகளைப் பெறுபவர்களாக இருக்கின்றனர். 

இந்நிலையில் உள்ளவர்கள் “ நாமும் அடுத்தவர்களுக்கு வாரி வழங்க வேண்டும் எப்போதும் அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலையில் இருக்கக் கூடாது “ என்ற எண்ணமும் அதற்கான முயற்சியும் எடுக்க வேண்டும்.


சுய மரியாதை உள்ளவர்களாக இருப்பதற்கும் ஆசைப்பட வேண்டும் அதற்கான முயற்சிகளையும் செய்ய வேண்டும் இவ்வாறு செய்பவர்களை அல்லாஹ் சுய மரியாதை உள்ளவர்களாகவும் தன்னிறைவு அடைந்தவர்களாகவும் மாற்றுவான்.


மேலும் தர்மம் செய்யும் முன்னர் தம் அடிப்படைத் தேவைகளையும் தம் குடும்பத் தேவைகளையும் நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

தர்மம் செய்யும் போது நமது இரத்த சொந்தங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் அவர்களின் தேவையை நிறைவேற்றிய பின்னர் மற்றவர்களுக்கு உதவிட வேண்டும்.

No comments:

Post a Comment