Monday, November 7, 2016

கருமியாக இருக்காதே !

8. கருமியாக இருக்காதே !

عن أبي هريرة قال  قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا تلفا

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், 'அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!' என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!' என்று கூறுவார்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல் : புஹாரி ( 1442 ) முஸ்லிம் ( 1836 )

விளக்கம் :

மனிதனிடம் இருக்கும் செல்வம், படைத்தவனின் அருளால் கிடைத்ததாகும் . இதை நல்வழியில் செலவழிப்பவதும் . இல்லாதவர்களுக்கு வழங்குவதும் செல்வந்தவர்களின் மீது கடமையாகும். ஆனால் பண வசதி நிறைந்த பலர். இன்னும் சேர்க்க வேண்டும் என்பதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு சதவிகிதம் கூட ஏழைகளுக்காகச் செலவழிப்பதில் காட்டுவதில்லை.

மற்றவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் தன்னைப் பற்றி நினைப்பவர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்காது. இம்மையிலும் மறுமையிலும் அவருக்கு நஷ்டம் ஏற்படுத்துமாறு வானவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.

” தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்” என்ற திருக்குர் ஆன் வசனமும் மறுமை வெற்றிக்கு தாராள மனம் அவசியம் என்பதை உணர்த்துகிறது நபியவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து அல்லாஹ்விடம் தாமும் பாதுகாவல் தேடி மற்றவர்களையும் பாதுகாவல் தேட வலியுறுத்தியுள்ளனர்.( புஹாரி 6365 )


எனவே கஞ்சத்தனத்திலிருந்து நம்மைப் பாதுகாத்து இறையருளைப் பெற முயற்ச்சிப்போம்.

No comments:

Post a Comment