9. கணக்கில்லாமல் தர்மம்
செய் !
، عَنْ أَسْمَاءَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
" أَنْفِقِي وَلاَ
تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ، وَلاَ تُوعِي فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ
".
நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்;
செலவழி கணக்கிட்டு (செலவழித்து)க் கொண்டிருக்காதே! (அப்படிக்
கணக்கிட்டு நீ செலவழித்தால்) அல்லாஹ்வும் உனக்கு (தரும் போது) கணக்கிட்டு (தந்து) விடுவான்.
கஞ்சத்தனமாகப் பையில் (சேர்த்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும்
உன்னிடம் கஞ்சத்தனமாக நடந்து கொள்வான். இதை அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புஹாரி
( 2591 ) முஸ்லிம் ( 1029 )
விளக்கம் :
அவசியம் ஏற்படும் போது நல்வழியில்
செலவழிப்பது கடமையாகும். ஆனால் பலர், குறிப்பிட்ட சதவிகிதத்தை மட்டுமே நாங்கள் செலவழிப்போம்
என்று கூறி குறைந்தளவு செல்வத்தைச் செலவிடுகின்றனர்.
முக்கியமான தேவைக்காக ஒருவர்
உதவி கோரினால் நாங்கள் இதற்கு இவ்வளவு செலவிட்டு விட்டோம் இதற்கு மேல் கொடுக்க முடியாது
என்று கூறுகின்றனர். வருடத்திற்கு இவ்வளவு தான் செலவழிக்க வேண்டும் என்று வரையறுத்துக்
கொள்கிறார்கள்.
இவ்வாறு செய்வது இறையருளிலிருந்து
நம்மை தூரப்படுத்தி விடும். தேவைக்கேற்ப முடிந்தளவு கிணறு தான் ஊறும் என்ற பழமொழியைப்
போன்று நாம் நல்வழியில் செலவு செய்யும் போதெல்லாம் அதற்கேற்ப இறையருள் நமக்கு வந்து
கொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment