Thursday, November 24, 2016

உம்மு சுலைம் ( ரழி ) யின் வீரம்



3 .  உம்மு சுலைம் ( ரழி ) யின் வீரம்



صحيح مسلم (5/ 196)
4783 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ أُمَّ سُلَيْمٍ اتَّخَذَتْ يَوْمَ حُنَيْنٍ خِنْجَرًا فَكَانَ مَعَهَا فَرَآهَا أَبُو طَلْحَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ أُمُّ سُلَيْمٍ مَعَهَا خَنْجَرٌ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-  مَا هَذَا الْخَنْجَرُ . قَالَتِ اتَّخَذْتُهُ إِنْ دَنَا مِنِّى أَحَدٌ مِنَ الْمُشْرِكِينَ بَقَرْتُ بِهِ بَطْنَهُ. فَجَعَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَضْحَكُ 

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஹுனைன் போர் தினத்தன்று பிச்சுவாக் கத்தி ஒன்றை எடுத்து, தம்முடன் வைத்திருந்தார். அதைப் பார்த்த (என் தாயாரின் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று), "அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் தம் முடன் பிச்சுவாக் கத்தி ஒன்றை வைத்திருக் கிறார்'' என்று கூறினார்கள்.
அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தப் பிச்சுவாக் கத்தி எதற்கு?'' என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற் காகத்தான் அதை வைத்துள்ளேன்'' என்று கூறினார். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரிக்கலானார்கள்.
நூல் : முஸ்லிம் (3697)

مسند أحمد بن حنبل (3/ 198)
13065 - حدثنا عبد الله حدثني أبي ثنا حماد بن أسامة عن سليمان بن المغيرة عن ثابت عن أنس قال : جاء أبو طلحة يوم حنين يضحك رسول الله صلى الله عليه و سلم من أم سليم قال يا رسول الله ألم تر إلى أم سليم متقلدة خنجرا فقال لها رسول الله صلى الله عليه و سلم ما تصنعين به يا أم سليم قالت أردت ان دنا مني أحد منهم طعنته به
تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم

ஹூனைன் யுத்தத்தின்போது அபூ தல்ஹா (ரலி) அவர்கள் சிரித்தவர்களாக நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நீங்கள் பிச்சுவாக்கத்தியை தொங்கவிட்டுக் கொண்டு நிற்கும் உம்மு சுலைமைப் பார்க்கவில்லையா! என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) உம்மு சுலைமிடம் உம்மு சுலைமே இதைக் கொண்டு நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார்கள். என்னை யாராவாது நெருங்கினால் இதைக் கொண்டு அவனை பிளந்து விட நான் விரும்புகிறேன்என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் ; அஹ்மத் (13065)

No comments:

Post a Comment