ஹுனைன் போர்
ஹுனைன் என்பது மக்காவிற்கும் தாயிஃபிற்கும் இடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கின் பெயராகும்.
இங்கு ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டில் கி.பி. 630 ஷவ்வால் மாதம் இஸ்லாமியர்களுக்கும்
ஹவாஸின் என்னும் குலத்தவர்களுக்கும் இடையே நடந்த போரே ஹுனைன் போர் என்று சொல்லப்படுகிறது.
இப்போருக்குரிய காரணம்
ஹவாஸின் குலத்தார் முஸ்லிம்களைத் தாக்குவதற்காக மாலிக் பின் அவ்ஃப் என்பவரின் தலைமையில்
தயாரானார்கள் என்றும் அவர்களுக்கு ஸகஃபி குலத்தவர்களின் ஆதரவும் உண்டு என்றும் நபி
(ஸல்) அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக, நபி(ஸல்) அவர்கள் சார்பாக 12 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இப்போரில் பத்தாயிரம் பேர் மக்கா வெற்றிக்காக வந்தவர்கள்.
மீதமுள்ள இரண்டாயிரம் பேர் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள். இதனால், முஸ்லிம்கள் எண்ணிக்கையில்
அதிகமாக இருப்பதை கவனித்து நமக்குத்தான் வெற்றி என்ற மிதப்பில் ஆழ்ந்தனர். அல்லாஹ்வை
மறந்தனர். எனவே போரில் எதிரிகளின் தாக்குதலை தாங்க முடியாமல் சிதறினர்.
இறுதியில் நபி(ஸல்)
அவர்களுடன் சில தோழர்கள் மட்டுமே உறுதியுடன் நின்று வெற்றி பெற்றனர். இதைப் பற்றி இறைவன்
தன் திருமறையில் கூறும்போது,
பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில்
உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு
அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள். பின்னர் அல்லாஹ் தனது அமைதியைத்
தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும்
அருளினான்.
நீங்கள் பார்க்காத படைகளையும் அவன் இறக்கினான். (தன்னை) மறுத்தோரைத் தண்டித்தான்.
இது மறுப்போருக்குரிய தண்டனை. பின்னர், தான் நாடியோரை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 9:25....27)
(ஆதாரம் ஃபத்ஹுல் பாரீ)
இதைப்பற்றி அதிக விபரமறிய பார்க்க (புகாரீ 4315, 4316, 4317,4321, 4323, 4326, 3327, 923,
4328, 4336, 4318, 4319)
No comments:
Post a Comment