45 . ஜூம் ஆ ஏழைகளின் ஹஜ்ஜாகும்
مسند الشهاب القضاعي - (1 / 128) عن الضحاك ، عن ابن عباس ، قال :
قال رسول الله صلى الله عليه وسلم : « الجمعة حج الفقراء
ஜூம்ஆ
ஏழைகளின் ஹஜ்ஜாகும் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
அறிவிப்பவர்
: அனஸ் (ரலி),
நூல்
: முஸ்னது ஷிஹாப் பாகம் 1 பக்கம் 128 ( ஹதீஸ் எண் : 76 )
இந்தச்
செய்தி, அக்பாரு உஸ்பஹான் ( 1967 )
போன்ற இன்னும் சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அனைத்து
அறிவிப்புகளிலும் ஈஸா பின் இப்றாஹீம் அல் ஹாஷிமி என்பவர் இடம் பெறுகிறார். இவர்
ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் புகாரி, நஸாயீ
ஆகியோரும் ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர் என்று இப்னு மயீன் அவர்களும் ஹதீஸ்
துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என இமாம் ராஸி அவர்களும் விமர்சனம்
செய்துள்ளனர்.
அல்லுஆஃபாஉ
வல் மத்ரூகீன் பாகம் 2 பக்கம் 238
மேலும்
இதே செய்தி இதில் இடம் பெறும் ளஹ்ஹாக் பின் முஸாஹிம் என்பவருடயை கூற்றாக அக்பாரு
மக்கா எனும் நூலில் (பாகம் 1 பக்கம் 378ல்) இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment