Wednesday, November 16, 2016

பெரு நாள் அன்று ஜுமுஆ வந்தால் என்ற ஹதீஸ் ( ஒர் ஆய்வு பார்வை )


பெரு நாள் அன்று ஜுமுஆ வந்தால் என்ற ஹதீஸ் 


سنن أبي داود ـ محقق وبتعليق الألباني - (1 / 417(
1075 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى وَعُمَرُ بْنُ حَفْصٍ الْوَصَّابِىُّ - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا بَقِيَّةُ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْمُغِيرَةِ الضَّبِّىِّ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « قَدِ اجْتَمَعَ فِى يَوْمِكُمْ هَذَا عِيدَانِ فَمَنْ شَاءَ أَجْزَأَهُ مِنَ الْجُمُعَةِ وَإِنَّا مُجَمِّعُونَ யு.

உங்களுடைய இந்த நாளில் இரண்டு பெருநாட்கள் இணைந்து வந்துள்ளன. யார்  நாடுகிறாரோ அவர் ஜுமுஆ தொழுது கொள்ளலாம். நாம் ஜுமுஆ தொழுவிப்போம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத் (1075)
இதே செய்தி பைஹகீ, பஸ்ஸார், ஹாகிம் ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

السنن الكبرى للبيهقي - (3 / 444(
6288 - وَحَدَّثَنَا أَبُو سَعْدٍ عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي عُثْمَانَ الزَّاهِدُ إِمْلَاءً , أنبأ أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ بُنْدَارِ بْنِ الْحُسَيْنِ , ثنا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى الْأَهْوَازِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى، ح وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو عَلِيٍّ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ الْحَافِظُ، ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ كَثِيرٍ الْحِمْصِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى، ثنا بَقِيَّةُ، ثنا شُعْبَةُ، عَنِ الْمُغِيرَةِ بْنِ مِقْسَمٍ الضَّبِّيِّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: " قَدْ اجْتَمَعَ فِي يَوْمِكُمْ هَذَا عِيدَانِ فَمَنْ شَاءَ أَجْزَأَهُ مِنَ الْجُمُعَةِ , وَإِنَّا مُجَمِّعُونَ ". رَوَاهُ أَيْضًا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُنِيبٍ الْمَرْوَزِيُّ عَنْ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ , ثنا أَبُو حَمْزَةَ عَنْ عَبْدِ الْعَزِيزِ مَوْصُولًا وَهُوَ فِي التَّارِيخِ , وَرَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ عَبْدِ الْعَزِيزِ فَأَرْسَلَهُ

مسند البزار 18 مجلد كاملا - (15 / 386(
8996- وحَدَّثناه الحسن بن قزعة ، قَال : حَدَّثنا زياد بن عَبد الله ، عَن عَبد العزيز بن رفيع عن أبي صالح ، عَن أبي هُرَيرة ، قال : اجتمع عيدان على عهد رسول الله صَلَّى الله عَلَيه وَسَلَّم في يوم واحد فقال رسول الله صَلَّى الله عَلَيه وَسَلَّم : اجتمع في يومكم هذا عيدان فمن شاء منكم أجزأه من الجمعة وإنا مجمعون إن شاء الله.
المستدرك 405 - (1 / 288(
1064- حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَافِظُ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ كَثِيرٍ الْحِمْصِيُّ ، حَدَّثَنَا أَبُو عَبْدِ اللهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الصَّفَّارُ حَدَّثَنَا بَقِيَّةُ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنِ الْمُغِيرَةِ بْنِ مِقْسَمٍ الضَّبِّيِّ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : قَدِ اجْتَمَعَ فِي يَوْمِكُمْ هَذَا عِيدَانِ ، فَمَنْ شَاءَ أَجْزَأَهُ مِنَ الْجُمُعَةِ ، وَإِنَّا مُجَمِّعُونَ.
هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ فَإِنَّ بَقِيَّةَ بْنَ الْوَلِيدِ لَمْ يُخْتَلَفْ فِي صِدْقِهِ إِذَا رَوَى عَنِ الْمَشْهُورِينَ.
وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ شُعْبَةَ وَالْمُغِيرَةِ وَعَبْدِ الْعَزِيزِ ، وَكُلُّهُمْ مِمَّنْ يُجْمَعُ حَدِيثُهُ.

இந்தச் செய்தியில் இடம்பெறும் பக்கிய்யா என்பவரை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
அந்த விமர்சனங்கள் காண்போம்.

تهذيب التهذيب ـ محقق - (1 / 416)
وقال ابن أبي خيثمة سئل يحيى عن بقية فقال إذا حدث عن الثقات مثل صفوان بن عمرو وغيره فاقبلوه اما إذا حدث عن اولئك المجهولين فلا وإذا كنى الرجل ولم يسمعه فليس يساوي شيئا

ஸப்வான் பின் அம்ர் மேலும் இவரைப் போன்ற நம்பகமானவர் வழியாக பக்கிய்யா அறிவித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். அறிப்படாதவர் வழியாக அறிவித்தால் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அவர் புனைப்பெயருடன் ஒருவரைக் குறிப்பிட்டால் அவரிடம் அவர் செவியுறவில்லை. எனவே அவை எந்த மதிப்பும் இல்லாதது என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 416.

قال يعقوب بقية ثقه حسن الحديث إذا حدث عن المعروفين.

அறியப்பட்ட நபரிடமிருந்து பக்கிய்யா அறிவித்தால் அவர்கள் நம்பகமானவராவார் என்று யஃகூப் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 416.

وقال ابن سعد كان ثقة في روايته عن الثقات ضعيفا في روايته عن غير الثقات

நம்பகமானவர்களிடமிருந்து பக்கிய்யா அறிவித்தால் அவர் அறிவிக்கும் செய்தி நம்பகமானதாகக் கருதப்படும். நம்பகத்தன்மையற்றவர்களிடமிருந்து அறிவித்தால் அவர் அறிவிக்கும் செய்தி பலவீனமாகக் கருதப்படும் என்று இப்னு ஸஅத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 416.

وقال العجلي ثقة فيما يروي عن المعروفين وما روى عن المجهولين فليس بشئ

அறியப்பட்டவரிடமிருந்து அவர் அறிவித்தால் நம்பகத்தன்மை உள்ளதாகும். அறியப்படாதவரிடமிருந்து அறிவித்தால் அந்தச் செய்தி எந்த மதிப்பற்றதாகும் என்று இஜ்லீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 416.

وقال أبو زرعة بقية عجب إذا روى عن الثقات فهو ثقة وقالي النسائي إذا قال حدثنا وأخبرنا فهو ثقة وإذا قال عن فلان فلا يؤخذ عنه لانه لا يدرى عمن أخذه

நம்பகமானவர்களிடமிருந்து அவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராக கருதப்படுவார் என்று அபூஸுர்ஆ அவர்களும், ஹத்தஸனா, அக்பரனா என்று அவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராகக் கருதப்படுவார். அன் என்ற சொல்லை குறிப்பிட்டு அறிவித்தால் அவரிடமிருந்து (எதுவும்) எடுக்கப்படாது. ஏனெனில் அந்தச் செய்தியை யாரிடமிருந்து எடுத்தார் என்று தெரியாது என்று நஸாயீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 416.
பக்கிய்யா என்ற அறிவிப்பாளர் தொடர்பாக அறிஞர்களின் கருத்தை நாம் கவனித்தால் அவர் தத்லீஸ் செய்பவர் என்பது தெளிவாகிறது.
ஹதீஸ் துறையில் தத்லீஸ் என்பது ஒருவர் தன் ஆசிரியரிடமிருந்து சில செய்திகளைக் கேட்டிருப்பார், சில செய்திகளை அவரிடம் நேரடியாக கேட்டிருக்க மாட்டார். இந்நிலையில் தான் நேரடியாகக் கேட்டிராத ஒருவரிடம் நேரடியாக கேட்டிருப்பதற்கும் கேட்காமலிருப்பதற்கும் வாய்ப்புள்ள வாசகத்தை பயன்படுத்தி சொல்லுவார்.
இப்படி அறிவிக்கும் பழக்கமுள்ள ஒருவர் அறிவித்தால் அவர் நேடியாக கேட்டேன் என்று தெளிவான வாசகத்தில் அறிவித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஹதீஸ் கலை வல்லுநர்களின் முடிவாகும்.
இந்தச் செய்தியில் பக்கிய்யா என்பவர்  ஷுஅபா என்ற அறிவிப்பாளரிடமிருந்து நேரடியாகக் கேட்டேன் என்பதை விளக்கும் வகையில் ஹத்தஸனா என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.
ஷுஅபா அவர்கள் ஹதீஸ் துறையில் முஃமின்களின் தலைவர் என்று போற்றப்பட்டவர். மிகவும் பிரபலமான அறிஞர்.
நம்பகமான, அறியப்பட்டவர் வழியாக அறிவித்தால் அந்தச் செய்தி நம்பகமானது என்ற அறிஞர்களின் கூற்றுப்படி இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாகும்.
எனவே அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி நம்பகமானது என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment