Wednesday, November 16, 2016

ஹஜ்ஜை கடமையாக்குவது எது ?



20 . ஹஜ்ஜை கடமையாக்குவது எது ?




813 - حدثنا يوسف بن عيسى حدثنا وكيع حدثنا إبراهيم بن يزيد عن محمد بن عباد بن جعفر عن ابن عمر قال : جاء رجل إلى النبي صلى الله عليه و سلم فقال يا رسول الله ! ما يوجب الحج ؟ قال الزاد والراحلة

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே ஹஜ்ஜைக் கடமையாக்குவது எது? என்று வினவினார். அதற்கு நபி ஸல் அவர்கள் கட்டுச்சாதமும் (உணவு) வாகனமும் ஆகும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் இப்னு உமர் ரலி
இந்தச் செய்தி திர்மிதி741, தாரகுத்னீ  இப்னுமாஜா 2887 முஸன்னப் இப்னு அபீஷைபா 15946, பைஹகீ 8892  உள்ளிட்ட இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் இது பலவீனமான செய்தியாகும்.
மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள்  அதன் கீழே இக்கருத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதில் இடம்பெறும் இப்றாஹீம் பின் யஸீத் என்பவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.
இவர் ஹதீஸ் துறையில் மிக மோசமானவர் என்று இமாம் அபுதாவூத் அவர்களும் இவர் நம்பகமானவர் அல்ல என்று இப்னு மயீன் அவர்களும், ஹதீஸ் துறை அறிஞர்கள் இவரது ஹதீஸை ஆதாரமாக கொள்ள மாட்டார்கள் என்று இமாம் புகாரி அவர்களும், ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று இமாம் நஸாயீ அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.
பார்க்க முக்தஸர் அல்காமில் பில்லுஅஃபா பாகம் 1 பக்கம் 120
எனவே அறிஞர்களால் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்ட இப்றாஹீம் பின் யஸீத் இடம் பெறும் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

No comments:

Post a Comment