அகழ்ப்போர்
இப்போர் ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம்
யூத எதிரிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்தபோர். எதிரிகளின் தாக்குதலை
முறியடிக்க மதீனாவைச் சுற்றிக் குழி தோண்டப்பட்டது. இதனால்தான் இதற்கு ஹன்தக் (அகழ்ப்)
போர் என்று பெயர் வந்தது. குறைஷிகள், ஃகத்ஃபான்கள் மற்றும் யூதர்கள் என பல குழுக்களும் ஒன்றிணைந்து இத்தாக்குதலைத் தொடுத்ததால்
இப்போருக்கு அஹ்ஸôப் (பல அணியனர்) போர் என்ற
பெயரும் உண்டு. இப்போர் பற்றி திருக்குர்ஆனில் அல்அஹ்ஸப் (33வது) அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.
அகழ்ப்போர் ஏற்படக் காரணம்
மதீனாவில் உள்ள பனூநளீர் என்ற யூதக்குலத்தார் தாங்கள் செய்த துரோகங்களின் காரணமாக
நபி(ஸல்) அவர்களால் நாடு கடத்தப்பட்டார்கள். இதனால் அக்குலத்தின் தலைவரான ஹுயய் பின்
அக்தப் மக்கா சென்றான். அங்கு குரைஷிகளை நபி
(ஸல்) அவர்கள் மீது போர்தொடுக்குமாறு தூண்டினான்.
அக்குலத்தின் மற்றொரு தலைவரான கினானா பின்
ரஃபீஉ, பனூ ஃகத்ஃபான் குலத்தாரை நபி(ஸல்) அவர்கள் மீது போர்தொடுக்குமாறு
தூண்டினான். இதற்கிடையில் அபூசுஃப்யான் பின் ஹர்ப் குரைஷிகளை நபி (ஸல்) அவர்கள் மீது போர்தொடுக்குமாறு அழைத்துச்சென்றார்.
இறுதியாக மர்ருழ் ழஹ்ரான் என்ற இடத்தை அடைந்தனர்.
இந்த இடத்தை நோக்கி மதீனாவில் உள்ள
பனூநளீர் என்ற யூதக்குலத்தாரும் பனூ ஃகத்ஃபான்
குலத்தாரும் மர்ருழ் ழஹ்ரானை அடைந்தனர். இவர்களுக்கு உதவியாக பனூ சுலைம் குலத்தாரும்
வந்தனர். ஆக மொத்தம் 1000 பேர் மதீனாவைத் தாக்க திட்டமிட்டு
வந்தனர்.
இதையறிந்த நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். அப்பொழுது
சல்மான் அல்ஃபாரிஸி(ரலி) அவர்கள் மதீனாவைச் சுற்றி ஆழமான அகழ் தோண்டினால் என்ன? என்று கேட்டதற்கிணங்க நபி
(ஸல்) அவர்கள் மதீனாவைச் சுற்றி ஆழமான அகழ் தோண்டக் கட்டளையிட்டார்கள்.
ஆனால் போர் நடக்காமல் போனது. கல்லெறிவதும்.
அம்பு எய்வதுமே நடந்தது. இப்போர் 20 நாட்கள் வரை நீடித்தது. இறுதியில் எதிரிகள் பின்வாங்கிவிட்டனர். இப்போரில் இருதரப்பிலும்
மிக சொற்பமானவர்களே உயிரிழந்தனர்.
(ஆதாரம் : தப்ரானி, ஃபத்ஹுல்பாரி)
அகழ்ப்போர் சம்பந்தப்பட்ட விளக்கங்களை மேற்கொண்டு அறிய பார்க்க (புகாரீ 1035, 3720, 3719,
4099, 4100, 4106,
4104, 4102, 4101,
4111, 4112, 4115,
4114,)
No comments:
Post a Comment