ஹுதைபிய்யா உடன்படிக்கை
ஹுதைபிய்யா என்பது மக்காவிலிரிருந்து சற்று தூரத்திலுள்ள ஓரிடத்திற்குப் பெயராகும்.
ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு (கி.பி 628) துல்கஅதா மாதம் நபி (ஸல்)
அவர்கள் உம்ரா செய்வதற்காக சுமார் 1500 முஸ்லிம்களுடன் மக்காவிற்குச் சென்றார்கள். அப்போது தனது நோக்கத்தை மக்காவாசிகளிடம்
தெரிவித்து வருமாறு உஸ்மான்(ரலி) அவர்களை மக்காவிற்கு அனுப்பினார்கள்.
உஸ்மான்(ரலி) அவர்களை மக்கா காஃபிர்கள் கொன்றுவிட்டார்கள் என்ற ஒரு தவறான செய்தி
வந்தது. தூதுவராக அனுப்பட்ட ஒருவரை கொலை செய்வது மாபெரும் அநியாயம் என்பதால் அவர்களிடம்
போர் செய்ய வேண்டுமென எண்ணி நபி(ஸல்) அவர்கள் நபித்தோழர்கள் அனைவரிடமும் ஒரு மரத்தின்
கீழ் உடன்படிக்கை எடுத்தார்கள்.
இதை அல்லாஹ்
அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ்
பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை
அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான். (48:18) வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.
முஸ்லிம்கள் போருக்கு தயாராகியுள்ளனர் என்பதையறிந்த மக்கா காஃபிர்கள் சமாதானம்
செய்துகொள்ள முன்வந்தனர். நபி(ஸல்) அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். எனவே முஸ்லிம்களுக்கும்
மக்கா காஃபிர்களுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. முஸ்லிம்கள் சார்பாக நபி(ஸல்)
அவர்களும் மக்கா குறைஷிகள் சார்பாக ஸýஹைல் பின் அம்ர் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு முஸ்லிம்கள் திரும்பிச் சென்றுவிட வேண்டும். அடுத்த ஆண்டு வந்து மூன்று
நாட்கள் தங்கி உம்ரா செய்து கொள்ளலாம். வரும்போது
வாள், வில் போன்ற ஆயுதங்களை உறையிலிட்டுக்
கொண்டுதான் உள்ளே நுழையவேண்டும். இணைவைப்பவர்கள் யாரேனும் மக்காவிலிருந்து இஸ்லாத்தை
ஏற்று மதீனா வந்தால் மக்காவாசிகளிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகள்
அதில் குறிபிடப்பட்டிருந்தது.
இது பற்றிய விளக்கம் விரிவாக அறிய பார்க்க
(புகாரீ 2700, 4181,
4180, 4152, 4155, 2958, 4179, 4178, 4169, 4167, 2958, 4147, 2698, 3182, 4163,
4190, 4191, 4154, 4172, 4177)
No comments:
Post a Comment