Wednesday, November 23, 2016

உஹுதுப்போர்



உஹுதுப்போர்


                உஹுது  என்பது மதீனாவிலுள்ள ஒரு மலையின் பெயராகும். இங்குதான்  ஹிஜ்ரி 3ஆம் ஆண்டு (கி.பி 625) ஷவ்வால் மாதம், மக்கா இணைவைப்பவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்தது. உஹுத் என்ற இடத்தில் இப்போர் நடந்ததால் இதற்கு உஹுதுப் போர் என்று குறிப்பிடப்படுகிறது.


உஹுதுப்போர் வரக் காரணம்   


ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டில் நடந்த  பத்ருப்போரில் ஏற்பட்ட இழப்பின் காரணமாக காஃபிர்கள், நபி(ஸல்) அவர்களுடன் போர் தொடுக்க முற்பட்டனர். இதனால் 3000 காஃபிர்கள் கொண்ட படை சகலவிதமான போர் ஏற்பாடுகளுடன் உஹுது மலைக்கு அருகில் முகாமிட்டது.  தகவல் அறிந்த நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். அந்த ஆலோசனையில் பலரும் போர்க்களத்தில் எதிரிகளை சந்தித்தே ஆகவேண்டும் என வலியுறுத்தினர். இதன் காரணமாக ஆயிரம் பேர் கொண்ட முஸ்லிம் படை புறப்பட்டது. 

அப்போது நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை என்பவனும் அவனுடைய ஆதரவாளர்கள் 300 பேரும் பின் வாங்கிவிட்டனர். எனவே 700 முஸ்லிம்களே எஞ்சினர். அவர்களில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) தலைமையில் 50 பேர் கொண்ட அம்பு எய்யும் வீரர்கள் உஹுது மலையின் மீது நின்று எதிரிகளைத் தாக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். எந்த காரணத்தைக் கொண்டும் அந்த 50 பேரும் அம்மலையிலிருந்து இறங்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். இதனடிப்படையில் போர் துவங்கியது. ஆரம்பத்தில் எதிரிகள் விரண்டோடினர். முஸ்லிம்களே வெற்றியை கண்டனர்.


எதிரிகள் விட்டு சென்ற பொருள்களை அங்கே களத்தில் நின்ற முஸ்லிம்கள் எடுக்க ஆரம்பித்தனர். இதைப் பார்த்த மலை மேல் நின்ற 50 பேர் கொண்ட குழுவில் பலர் நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றமாக மலையிலிருந்து இறங்கினர். அதைப் பார்த்த அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரலி) அவர்கள் எவ்வளவோ தடுத்தும் கூட முஸ்லிம்கள் கேட்கவில்லை.


இந்த வாய்ப்பினை பயன்படுத்திய எதிரிகள் மீண்டும் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இந்த திடீர் தாக்குதலில் முஸ்லிம்கள் நிலை குலைந்தனர். ஆங்காங்கே சிதறி ஓடத் துவங்கினர். நபி(ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பாக நின்ற நபித்தோழர்களில் பலர் ஓடத் துவங்கனர். இப்போரில் எதிரிகளில் ஓருவன் விடுத்த அம்பின் காரணத்தால் நபி(ஸல்) அவர்களில் கடைவாய்ப்பல் உடைக்கப்பட்டது. முகத்தில் இரத்தம் கசிந்தது இப்போரில் பிரசித்திபெற்ற  நபித்தோழர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். அவர்களில் ஹம்ஸô(ரலி), முஸ்அப் இப்னு உமைர்(ரலி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.  இப்போரில்  முஸ்லிம்களில் 70பேர்  வீரமரணமடைந்தனர்.  எதிரணியில்  23 பேர் மட்டுமே உயிரழந்தனர்.  மொத்தத்தில் இப்போர் இஸ்லாமியர்களுக்கு தோல்வியைக் கொடுக்காவிடிலும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கவில்லை என்பதே எதார்த்தம். (ஃபத்ஹுல்பாரி)



உஹுதுப்போர் சம்பந்தப்பட்ட விளக்கங்களை மேற்கொண்டு அறிய பார்க்க (புகாரீ 1244, 1351, 1344, 1352, 3039, 3596, 3811, 3725, 3811, 3914,  3897, 4041, 4042,  4043,  4044, 4045,  4046,  4047,  4048,  4050,  4081,  4051,  4097, 4071,  4075,  4065, 4202,  4054, 4085,  4068,  4071, 4042,  6590,  6426,)

No comments:

Post a Comment