5. பொறுமையை வேண்டி
رَبَّنَا أَفْرِغْ
عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِيْنَ
(ரப்பனா அஃப்ரிஃ அலைனா ஸப்ரன் வ தவஃப்பனா முஸ்லிமீன்)
""எங்கள் இறைவா! எங்களுக்கு
பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!'' (அல்குர்ஆன் 7:126)
( நபி மூஸா(அலை) அவர்கள் காலத்தில் ஃபிர்அவ்னின்
ஏற்பாட்டில் வந்த சூனியக் காரர்கள் நபி மூஸா (அலை) அவர்கள் காட்டியது உண்மையில் அற்புதமே, இதை சூனியக்காரர்களால் செய்யமுடியாது
என்பதை உணர்ந்து, மூஸா நபியை ஏற்றனர். அதற்காக அவர்களை மாறுகால்
மாறுகை வெட்டுவேன் என்று ஃபிர்அவ்ன் கூறிய போது சூனியக் காரர்கள் கேட்ட பிரார்த்தனை)
رَبَّنَا أَفْرِغْ
عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
(ரப்பனா அஃப்ரிஃ அலைனா ஸப்ரன் வஸப்பித் அக்தாமனா வன்ஸýர்னா அலல் கவ்மில் காஃபிரீன்)
""எங்கள் இறைவா! எங்கள் மீது
சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும்
கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! (அல்குர்ஆன் 2:250)
(நபி மூஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் பனூஇஸ்ராயில்களில்
உள்ள ஒரு கூட்டத் தினரில் இருந்த நல்லவர்கள் தாலூத் அவர்கள் தலைமையில் ஜாலூத் படையினரை
போர்க் களத்தில் சந்தித்த போது கேட்ட பிரார்த்தனை)
No comments:
Post a Comment