Wednesday, November 23, 2016

பனூ முஸ்தலிரிக் போர்


பனூ முஸ்தலிரிக் போர்

இப்போர் பனூ முஸ்தலிரிக் கூட்டத்தவர்களுக்கும் நபியவர்களுக்கும் இடையே ஹிஜ்ரி 5 அல்லது 6 ஆம் ஆண்டில் நடைபெற்றது. ஆகையால், இதற்கு பனூ முஸ்தலிரிக் போர் என்று பெயர் வந்தது. இப்போர் முரைசீஉ என்ற இடத்தில் நடந்ததால் இதற்கு முரைசீஉ போர் என்றும் கூறப்படுகிறது.

ஹாரிஸ் பின் அபீ ளிரார் என்பவரின் தலைமையில் பனூமுஸ்தலிக் கூட்டத்தினர் முஸ்லிம்களைத் தாக்க சுமார் 700 பேர் படைதிரண்டுள்ளனர் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. அவர்களைத் தடுக்கும் நோக்கத்தில் தம் தோழர்களுடன் புறப்பட்டு முரைசீஉ என்ற இடத்திற்கு சென்றார்கள்.

 (முரைசீஉ என்பது மதீனாவுக்கருகே கரையோரத்தில் உள்ள தண்ணீர்த்துறைக்குப் பெயராகும்.)  இப்போரில் எதிரிகள் தோற்றக்கடிக்கப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர், பலர் கைது செய்யப்பட்டனர்.


இப்போர் முடிந்து வரும் போதுதான் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் மீது அவதூறு கூறப்பட்டது. இது நபி(ஸல்) அவர்களிடம் பெரும் வேதனை ஏற்படுத்தியது. 

முஸ்லிம்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் இது அவதூறு செய்தி என்று இறைவன் அறிவித்து முற்றுப் புள்ளி வைத்தான். இதுபற்றி விரிவான செய்தி அறிய பார்க்க (புகாரீ 4141) பனூ முஸ்தலிக் போரைப்பற்றி மேலும் அறிய பார்க்க  (புகாரீ  2229, 2542, 4138)

No comments:

Post a Comment