Wednesday, November 16, 2016

ஹஜ் சென்று வர சக்தி என்பது எது ?



21 . ஹஜ் சென்று வர சக்தி என்பது எது ?


2417- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْجَرَّاحِ الضَّرَّابُ ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ ، حَدَّثَنَا بُهْلُولُ بْنُ عُبَيْدٍ عَنْ حَمَّادِ بْنِ أَبِي سُلَيْمَانَ ، عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي قَوْلِهِ {وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً} قَالَ قِيلَ يَا رَسُولَ اللهِ مَا السَّبِيلُ قَالَ الزَّادُ وَالرَّاحِلَةُ

அந்த ஆலயத்தில் ஹஜ் செய்வது சென்று வர சக்தி பெற்றவர்களுக்கு கடமை எனும் (3 97) வசனத்தில் இடம் பெற்றிருக்கும் சென்று வர (சக்தி) என்பது எதைக் குறிக்கும் என நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் கட்டுச்சாதமும் வாகனமும் தான் என்று பதிலளித்தார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலி அறிவிப்பு
இது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலி அவர்களின் அறிவிப்பாக தாரகுத்னீ 2417ல் இடம் பெற்றுள்ளது.
இதில் புஹ்லூல் பின் உபைத் எனும் பலவீனமானவர் இடம் பெற்றுள்ளார்.
அபூஹாதம் இவரைப் பலவீனமானவர், ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர் என்றும், இவர் மறுக்கப்பட வேண்டியவர் என்று அபூஸுர்ஆ அவர்களும் குறை கூறியுள்ளனர்.
அல்ஜரஹ் வத்தஃதீல் 2 429
இவர் ஹதீஸ்களைத் திருடுபவர் இவரை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று இப்னு ஹிப்பான் அவர்கள் விமர்சித்துள்ளார்.
அல்லுஅஃபாஉ வல்மத்ரூகீன் லி இப்னுல் ஜவ்சீ 1 153
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
மேற்கண்ட செய்தி அப்துல்லாஹ் பின் அம்ர் ரலி அறிவிப்பாக தாரகுத்னீ 2414ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியில் இப்னு லஹீஆ இடம் பெற்றுள்ளார். 
இவரும் பலவீனமானவர் ஆவார்.

No comments:

Post a Comment