40 . அல்லாஹ் கோபப்படுகின்றான்?
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ عَنْ أَبِي الْمَلِيحِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَسْأَلْ اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ (رواه الترمدي 3295)
யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபப்படுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 3295
மேற்கண்ட செய்தி இப்னு மாஜா, அஹ்மத், ஹாகிம் போன்ற கிரந்தங்களிலும் இதே அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் ”அபூ ஸாலிஹ் அல்ஹவ்சிய்யு” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.
تهذيب التهذيب (12/ 131) 613- "بخ ت ق - أبو صالح" الخوزي عن أبي هريرة حديث من لا يسأل الله تعالى يغضب عليه وعنه أبو المليح الفارسي الخراط قال ابن الدورقي عن ابن معين ضعيف قلت وقال أبو زرعة لا بأس به.
இவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு மயீன் அவர்களும், இவரிடம் பிரச்சினையில்லை என்று இமாம் அபூ சுர்ஆ அவர்களும் கூறியுள்ளார்கள்.
(தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 12 பக்கம் 131)
تقريب التهذيب (ص: 649)
8172- أبو صالح الخوزي لين الحديث من الثالثة بخ ت ق
இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் இப்னு ஹஜர் விமர்சித்துள்ளார்கள்.
(தக்ரீபுத் தஹ்தீப் பக்கம் 649)
இந்த அபூஸாலிஹ் என்பாருக்கு இந்த ஒரு அறிவிப்பைத் தவிர வேறு எந்த அறிவிப்புகளும் கிடையாது.
மேலும் இவரை இமாம் இப்னு மயீன் பலவீனப்படுத்தியுள்ளார்கள். எனவே இவர் யாரென்றே அறியப்படாதவர் என்ற நிலையில் உள்ளவராவார். இதன் அடிப்படையிலும் இது மேலும் பலவீனமாகிறது.
No comments:
Post a Comment