Monday, November 14, 2016

தொழுகைக்கு வெளியே தனியாக ஸஜ்தா செய்து பிரார்த்தனை செய்யலாமா?




6 . தொழுகைக்கு வெளியே தனியாக ஸஜ்தா செய்து பிரார்த்தனை செய்யலாமா?

ஸஜ்தாவில் அதிகமாகப் பிரார்த்தனை செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் 

ஆர்வமூட்டியுள்ளார்கள். இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை நன்கு 

கவனித்தால் தொழுகைக்கு உள்ளே உள்ள ஸஜ்தாவில் பிரார்த்தனை செய்வதைத் 

தான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைத் தெளிவாக அறியலாம்.

عن أبي هريرة  أن رسول الله صلى الله عليه وسلم قال أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثروا الدعاء


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் 

நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் ஸஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே,

நீங்கள் (ஸஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (832) நஸாயீ (1137)  அபூதாவூத் (875)  அஹ்மத் (9165)

இறைவனிடம் இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது ஸஜ்தா என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். தொழுகைக்கு உள்ளே தான் கியாம் (நிற்பது) ருகூவு (குனிதல்) போன்ற நிலைகள் இருக்கின்றன. எனவே தொழுகையில் நாம் செய்யும் ஸஜ்தாவைப் பற்றித் தான் நபி (ஸல்) அவர்கள் இங்கே குறிப்பிடுகிறார்கள். வேறொரு ஹதீஸில் தொழுகையில் உள்ள ஸஜ்தாவில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

عن ابن عباس قال  كشف رسول الله صلى الله عليه وسلم الستارة والناس صفوف خلف أبي بكر فقال أيها الناس إنه لم يبق من مبشرات النبوة إلا الرؤيا الصالحة يراها المسلم أو ترى له ألا وإني نهيت أن أقرأ القرآن راكعا أو ساجدا فأما الركوع فعظموا فيه الرب عز وجل وأما السجود فاجتهدوا في الدعاء فقمن أن يستجاب لكم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ருகூஉவில் வலிவும் மாண்பும் 

உடைய இறைவனை மகிமைப்படுத்துங்கள். ஸஜ்தாவில் முனைந்து 

பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும்'' 

என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (824 )   நஸாயீ ( 1045 ) அபூதாவூத் ( 876 ) இப்னு மாஜா ( 3899 ) 

அஹ்மத் ( 1903 ) தாரமீ ( 1325 ) முஅத்தா மாலிக் ( 1326 )

நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு வெளியே தனியாக ஸஜ்தா செய்து பிரார்த்தித்தாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக தொழுகைக்கு உள்ளே உள்ள ஸஜ்தாவில் பிரார்த்தனை செய்ததாகத் தான் ஆதாரங்கள் இருக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ருகூவிலிருந்து) நிமிர்ந்ததும், "அல்லாஹும்ம 

ரப்பனா லக்கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி வ மில்அ மா 

பைனஹுமா வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது'' (இறைவா! வானங்கள் 

நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்கிடையே இருப்பவை நிரம்ப, இதன் பின்னர் நீ 

நாடியவை நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள்.

وإذا سجد قال اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره تبارك الله أحسن  - ص 536 - الخالقين ثم يكون من آخر ما يقول بين التشهد والتسليم اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت

அவர்கள் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்யும் போது, "அல்லாஹும்ம லக்க ஸஜத்து. வ 

பிக்க ஆமன்த்து. வ லக்க அஸ்லம்து. ஸஜத வஜ்ஹீ லில்லதீ கலக்கஹு வ 

ஸவ்வரஹு, வ ஷக்க சம்அஹு வ பஸரஹு. தபாரக்கல்லாஹு அஹ்சனுல் 

காலிக்கீன்'' (இறைவா! உனக்கே சிரம் பணிந்தேன். உன்மீதே நம்பிக்கை 

கொண்டேன். உனக்கே கட்டுப்பட்டேன். என் முகத்தைப் படைத்து வடிவமைத்து 

அதில் காதையும் கண்ணையும் திறந்து வைத்த (இறை)வனுக்கு முன் என் முகம் 

பணிந்தது. படைப்பாளர்களில் மிக மேலானவனான அல்லாஹ் சுபிட்சம் மிக்கவன்) 

என்று கூறுவார்கள்.

நூல்: முஸ்லிம் (1419)  திர்மிதீ ( 266 ) நஸாயீ ( 897 ) அபூதாவூத் ( 1509 ) இப்னு மாஜா (1054 ) 

அஹ்மத் ( 805 ) தாரமீ ( 1238 )

எனவே தொழுகைக்கு உள்ளே ஸஜ்தாவில் அதிகமாகப் பிரார்த்தனை செய்து 

கொள்ளலாம். ஸஜ்தாவை மட்டும் தனியாகச் செய்து பிரார்த்தனை செய்வதற்கு 

எந்த ஆதாரமும் இல்லை.


No comments:

Post a Comment