Monday, November 14, 2016

கப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா? அந்தப் பள்ளிவாசலில் சென்று தொழலாமா?




 7 . கப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா? அந்தப் பள்ளிவாசலில் சென்று தொழலாமா?


கப்ருக்கு மேல் பள்ளிவாசல் கட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ قَاتَلَ اللَّهُ الْيَهُودَ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ ‏

"அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையி-ருந்து அப்புறப்படுத்துவானாக! தம் இறைத் தூதர்கüன் மண்ணறைகளை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்'' என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி (437 ) முஸ்லிம் ( 533 ) அபூதாவூத் ( 3227 ) நஸாயீ (2047 ) அஹ்மத் ( 10337) இப்னு ஹிப்பான் ( 2326 )

عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالْحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ

உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின்போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப்படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்கüடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்கüடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள்தாம் மறுமை  நாளில் அல்லாஹ்விடம் மக்கலேயே மிக மோசமானவர்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி (427 ) முஸ்லிம் ( 528 ) நஸாயீ ( 704 ) அஹ்மத் ( 23731)

கப்ரு உள்ள இடத்தில் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ، وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகüல் சிலவற்றை உங்களுடைய இல்லங்கலிலும் நிறைவேற்றுங்கள். உங்களுடைய இல்லங்களை (தொழுகை நிறைவேற்றப்படாத) கப்று (சவக்குழி)களாக ஆக்கிவிடாதீர்கள்.

நூல்: புகாரி (432 )  முஸ்லிம் ( 777 ) திர்மிதீ ( 451 ) நஸாயீ ( 1598 ) அபூதாவூத் ( 1448 ) இப்னு மாஜா ( 1377) அஹ்மத் ( 4497 )

கப்ருகளுக்கு மேல் பள்ளி மட்டுமல்ல! பொதுவாக எந்த ஒரு கட்டடத்தையும் கட்டுவது கூடாது.

عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ

கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் (1765 ) திர்மிதீ ( 1052 ) நஸாயீ ( 2027 ) அபூதாவூத் ( 3225) இப்னு மாஜா ( 1562 )

மஸ்ஜிது நபவீ பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்பு அந்த இடத்தில் இணை வைப்பாளர்களின் மண்ணறைகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அந்த மண்ணறைகளைத் தோண்டி அதை அப்புறப்படுத்திய பிறகே அதன் மேல் பள்ளிவாசலைக் கட்டினார்கள்.

எனவே கப்ரும் பள்ளியும் சேர்ந்துள்ள இடங்கள் தொழுவதற்குத் தடுக்கப்பட்டவை. கப்ரஸ்தான் இருந்த இடம் உரிய முறைகள் பண்படுத்தப்பட்டு அவை ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு பள்ளிவாசல்களாக மாற்றப்பட்டால் அப்போது தான் அது பள்ளி என்ற அந்தஸ்தைப் பெறுகின்றது.

عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ فَأَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ ‏ "‏ يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي ‏"‏‏.‏ فَقَالُوا لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلاَّ إِلَى اللَّهِ‏.‏ فَأَمَرَ بِقُبُورِ الْمُشْرِكِينَ، فَنُبِشَتْ، ثُمَّ بِالْخِرَبِ فَسُوِّيَتْ، وَبِالنَّخْلِ فَقُطِعَ، فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளையிட்டார்கள்; "பனூ நஜ்ஜார் குலத்தினரே! (உங்கள் இடத்தை) என்னிடம் விலை கூறுங்கள்!'' என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தினர் "இதற்குரிய விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்!'' என்றனர். (அவ்விடத்திலிருந்த) இணைவைப்பவர்களின் சவக்குழிகளைத் தோண்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அவை தோண்டப்பட்டன. அவர்களின் கட்டளைப்படியே பாழடைந்த இடங்கள் சீர் செய்யப்பட்டன; பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன; பள்ளிவாலிசலின் கிப்லா திசையில் (வெட்டப்பட்ட) பேரீச்ச மரங்களை வரிசையாக (நபித்தோழர்கள்) நட்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (1868 )


கப்ருகள் மீது பள்ளிவாசலைக் கட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளதால் அவ்வாறு கட்டப்பட்ட கட்டடங்கள் பள்ளிவாசலின் அந்தஸ்தைப் பெறாது. அங்கு சென்று தொழுவதும் கூடாது.

No comments:

Post a Comment