மதீனா வாழ்க்கை
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் அனுபவித்த நோவினைகளுக்குப் பகரமாக மதீனா வாழ்க்கையில்
நிம்மதியைப் பெற்றார்கள். அங்கே அன்ஸரித்தோழர்களின் ஆதரவும் உபகாரங்களும்
கிடைத்தன. ‘நபி (ஸல்) அவர்கள் மதீனாவில்
10ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.
( புகாரீ 3547)
மக்காவிலிருந்து வெறும் கையுடன் மதீனாவிற்கு வந்த நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களின்
தோழர்களுக்கும் மதீனாவாசிகள் மனநிறைவான உதவிகளை வழங்கினார்கள். இதனால் அவர்கள் அன்ஸôரிகள் (உதவியாளர்கள்) என்று
அழைக்கப்பட்டனர்.
அன்ஸôரிகள், தங்களுடைய தோட்டங்களை மக்காவிலிருந்து
நாடு துறந்து வந்த முஹாஜிர்களிடம் கொடுத்து அதை பயன்படுத்தி அதில் வரும் லாபத்தை எடுத்துக்
கொள்ளுமாறு கூறினர். (பார்க்க புகாரீ 2630)
சில அன்ஸரிகள் தன் சொத்தில் பாதியை
முஹாஜிர்களுக்கு கொடுக்க முன்வந்தனர்.
(பார்க்க புகாரீ 2048)
மதீனாவிற்கு சென்ற நபி(ஸல்) அங்கு ஒரு பேரித்தம் தோட்டத்தை விலைக்கு வாங்கி இறை
இல்லம் ஒன்றை கட்டடினார்கள். அப்பள்ளி கட்டும் போது நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களுடன்
கற்களை சுமந்து கட்டினார்கள். இப்பள்ளிதான் மஸ்ஜிதுன் நபவி என்று போற்றப்படுகிறது.
(பார்க்க புகாரீ 3932)
நபி (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையைப்
பற்றி விரிவாக அறிய பார்க்க (புகாரீ. 446. 447, 889, 2292, 2294, 3918 3932. 3652, 3938, 39261, 4586, 6083, 6747, 7038, 7039, 7040, 7340, முஸ்லிம் 2053. )
No comments:
Post a Comment