Wednesday, November 9, 2016

புகையிலை


2.             புகையிலை

புகையிலை குடிப்பது, போடுவது சிலர் பொழுது போக்காக கருதுகிறர்கள் இன்னும் சிலர் ஸ்டைலாக கருதுகிறார்கள். இந்த காலத்தில் வாழ்கின்ற இளசுகளை எடுத்து கொண்டால், ஒரு பெண் நம்மை பார்க்கிறாள் என்று எண்ணிக்கொண்டு அவளிடத்தில் அவனுடைய தோரணை காட்டுகிறான். இன்னும் சிலர் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி அதாவது வயது முதியோரை பார்த்தால் இதை விடமுடியாமல் கஷ்டபடுகிறார்கள்.  

இரவு முழுவதும் அவரும் தூக்காமலும், வீட்டில் உள்ளவர்களை தூங்க விடாமலும் கஷ்டப்படுத்துகிறார்கள். இதன் தீமைகளை மனிதன் அறிந்து இருந்தால் கண்டிப்பாக இதன் பக்கம் செல்லமாட்டானன். புகையிலை குடிக்க கூடியவர்கள் இதன் தீமையை அறிந்துயிருக்கிறார்களா? யாரும் அறிந்தது கிடையாது. புகையிலையால் மனிதனுக்கு இருதய நோய் வருகிறது. இன்னும் புற்று நோய் வருகிறது. யாராவது இருதய நோய் வரும் என்று கருதியிருப்பார்களா? நாம் என்னியிருக்க மாட்டோம். புகையிலை குடிக்கும் போது அருகில் யார் நிற்கிறார்களே அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பெண்மனிகளே உங்கள் கணவர் புகையிலை குடிப்பவராக இருந்தால் அவர்களை நீங்கள் தடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த பழக்கத்தால் உங்களுடைய பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள். 

உங்கள் பிள்ளைகள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்றால் முதலில் உங்கள் கணவன்மார்களை திருத்துங்கள். அல்லது நீங்கள் திருமணம் முடிக்கும் பெண்களாக இருந்தால் தனது மாப்பிளைக்கு புகையிலை பழக்கம் உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள். இப்படிபட்டவர்களை திருமணம் முடிப்பதற்கு நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள். 

இவர்களால் உங்களுக்கும் தீங்கு ஏற்படுகிறது. 
தமிழ் நாட்டின் பிரபலியமான ஹாஸ்பிட்டான அப்பலோ ஹாஸ்பிட்டல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. புகையிலையால் நமக்கு புற்று நோய் வர அதிகம் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது

1.             பீடி குடித்தால்  98% வாய்ப்புள்ளது.
2.             சிஸர் குடித்தால் 89% வாய்ப்புள்ளது.
3.             வீல்ஸ் குடித்தால் 68.3% வாய்ப்புள்ளது
4.             கோல்ட் ஃபில்ட்ரர் குடித்தால் 42% வாய்ப்புள்ளது.
5.             கிங்ஸ் குடித்தால் 23% வாய்ப்புள்ளது. என்று கூறியுள்ளது.

இஸ்லாம் கூறும் வழிமுறைகளை பார்க்க வேண்டும்.


وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ 

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!  நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (2:195)

இருதய நோய் வர காரணங்கள்

மாரடைப்பு நோயால் 17.5 மில்லியன் மரணம் அடைகிறார்கள்.

1) இரத்தில் அதிகம் கொலஸ்ட்ரால்
 2) சிகெரட் புகை பிடித்தல்
 3) சர்க்கரை நோய் 
4) அதிக இரத்த அழுத்தம்
 5) வயிற்று பகுதியில் பருமன் (தொப்பை) 
6) உடல் உழப்பின்மை
 7) மன சேர்வு

நூல் : கடலூர் தினததந்தி 28. 9. 2008

புகையால் ஏற்படும் தீமைகள்

1) புற்று நோய் வருது என 1600 வருட முன்பு கண்டுபிடிக்கபட்டுள்ளது 

2) ஒரு சிகெரட்லில் 2 அல்லது 3 நிக்கோட்டின் உள்ளன. 

3) உடலில் 1 மில்லி கிராம் நிக்கோட்டின் செல்கிறது. 

4) அது மூக்கில் மெல்லிய சவ்வில் படிந்து நுரையிரலில் நுழைந்து சிறு ரத்த குழாயில் செல்கிறது. பிறகு ரத்தம் மூளைக்கு செல்கிறது பிறகு உடல் முழுவதும் செல்கிறது

. 5) பக்கத்தில் நின்று பாதிப்பவர் 1 வருடத்திற்கு 3 லட்சம் நபர் 


நூல் : ஜனவரி 2008 குமுதம்

No comments:

Post a Comment