3. சிசு(கரு)வை கொல்வதை தவிர்ப்போம்
திருமணம் நடந்த தம்பதிகளை பார்த்தால் தனது
கருவில் என்ன குழந்தைகள் இருக்கிறது என்று பார்ப்பதற்கு ஆசைபடுவார்கள். தனது
கருவில் பெண் குழந்தையாக இருந்தால் அதனை கலைத்துவிடுகிறார்கள். நமக்கு பெண்குழந்தை
பிறந்து விட்டால் அவளை திருமணம் முடித்துக் கொடுப்பதற்கு பயந்து தனது கருவிலே
குழந்தையை கலைத்துவிடுகிறார்கள். வருமையை பயந்து கொன்றுவிடுகிறார்கள். நாம் கருவை
கலைப்பதால் நமது மனைவிக்கு தான் ஆபத்து ஏற்படும். இதன் பின் விளைவை நாம்
யோசிக்காமல் கருவை கலைத்து விடுகிறறோம். இஸ்லாம் கூறும் வழிமுறைகளை பார்ப்போம்.
சிசுவை கொல்லுவது தடை
قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ
رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ
إِحْسَانًا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ
وَإِيَّاهُمْ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ
وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ ذَلِكُمْ
وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ (6:151)
வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை
செய்ததைக் கூறு கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, ""நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது'' என்பதே.
பெற்றோ ருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உண வளிக்கிறோம் (6:151)
வருமைக்கு பயந்து குழந்தையை கொல்ல கூடாது
وَلَا
تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ
إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْئًا كَبِيرًا (17:31)
வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக்
கொல்லாதீர்கள்! அவர்களுக்கும்,
உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக்
கொல்வது பெரிய குற்றமாகும் (17:31)
சிசுவை கொன்றால் நஷ்டவாளி
قَدْ
خَسِرَ الَّذِينَ قَتَلُوا أَوْلَادَهُمْ سَفَهًا بِغَيْرِ عِلْمٍ وَحَرَّمُوا مَا
رَزَقَهُمْ اللَّهُ افْتِرَاءً عَلَى اللَّهِ قَدْ ضَلُّوا وَمَا كَانُوا
مُهْتَدِينَ
(6:140)
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது
குழந்தைகளைக் கொன்ற வர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ்
அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர்; வழி
கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (6:140)
பெண்கள் கருவூ கலைத்தால் ஏற்படும் தீமைகள்
1 முகமலர்ச்சி குறைவு
2. சிடுசிடுப்பு (கோபம்)
3. தூக்கமின்மை
4. இதய பலவீனம்
5. குறைவான ரத்த போக்கு
6. கை, கால் சோர்வு
7. மாதவிடாய் (ரத்த போக்கு) ஒழுங்கின்மை
நூல் : மருத்துவர் டிசம்பர் 2007
1 வருடத்திற்க்கு 1 கோடி 10 லட்சம் குழந்தை கொல்லுகிறார்கள்
நூல் : தமிழ் சுடர்
மதுரை : உசிலம்பட்டி 1 வருடம்
600 குழந்தை கொல்லுகிறார்கள்
நூல் : மருத்துவர் 12. 2007, இந்தியாடுடே 2. 1. 2008
இது போன்ற தீமைகள் இருப்பதனால் தான் இஸ்லாம்
சிசுவை கொல்ல கூடாது என்று சொல்கிறது.
No comments:
Post a Comment