23 .தொழுகையில் சைகையால் பிறருக்கு செய்தியை சொல்லுவது
பதில் : இஸ்லாத்தில் முக்கியமான கடமைகளில் ஒன்று தொழுகை இத்தொழுகையைப் பற்றி நபி
( ஸல் ) அவர்கள் பல ஒழுங்குகளை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
عَنْ أَنَسٍ، قَالَ
قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى يُنَاجِي
رَبَّهُ فَلاَ يَتْفِلَنَّ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى
" ஒருவர் தொழும்போது தம்
இறைவனிடம் தனிமையில் உரையாடுகிறார் " என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்
( நூல் : புகாரி 531 )
زَيْدُ بْنُ أَرْقَمَ
إِنْ كُنَّا لَنَتَكَلَّمُ فِي الصَّلاَةِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم،
يُكَلِّمُ أَحَدُنَا صَاحِبَهُ بِحَاجَتِهِ حَتَّى نَزَلَتْ {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ}
الآيَةَ، فَأُمِرْنَا بِالسُّكُوتِ.
"நபி ( ஸல் ) அவர்கள் காலத்தில்
நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டுருந்தோம் . எங்களில் ஒருவர் தம் தோழரிடம் ( சொந்தத்
) தேவை குறித்துப் பேசுவார். இந் நிலையில் ' தொழுகையில் உள்ளச்சத்துடன் இருங்கள்' என்ற ( 2 : 238 ) வசனம் இறங்கியது . அதன்
பின் பேசக் கூடாது என்று கட்டளையிடப்பட்டோம். ( நூல் : புகாரி 1200 )
عَنْ عَبْدِ اللَّهِ
ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نُسَلِّمُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ
فِي الصَّلاَةِ فَيَرُدُّ عَلَيْنَا، فَلَمَّا رَجَعْنَا مِنْ عِنْدِ النَّجَاشِيِّ
سَلَّمْنَا عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْنَا وَقَالَ " إِنَّ فِي الصَّلاَةِ
شُغْلاً ".
"( ஆரம்ப காலத்தில் ) நபி
( ஸல் ) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் ஸலாம் கூறுவோம் . அவர்கள் எங்களுக்கு
பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் ( அபீஸீனியாவின் மன்னர் ) நஜ்ஜாஷியிடமிருந்து திரும்பிய
போது அவர்களுக்கு ஸலாம் கூறினோம். எங்களுக்கு பதில் ஸலாம் கூறவில்லை. ( தொழுது முடிந்ததும்
) ,' நிச்சயமாக தொழுகைக்கு என்று
சில அலுவல்கள் உள்ளன ' என்று கூறினார்கள் ( நூல்
: புகாரி 1199 )
عَنْ عَائِشَةَ،
قَالَتْ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ الاِلْتِفَاتِ فِي الصَّلاَةِ
فَقَالَ " هُوَ اخْتِلاَسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلاَةِ الْعَبْدِ
".
தொழையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி ( ஸல் ) அவர்களிடம் நான் கேட்டேன். ' ஒரு அடியானுடைய தொழுகையை
ஷைத்தான் அதன் மூலம் பறித்து செல்கிறான் என்று நபி ( ஸல் ) கூறினார்கள்( நூல் : புகாரி 751 )
عَنْ عَائِشَةَ،
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ فَقَالَ
" شَغَلَتْنِي أَعْلاَمُ هَذِهِ، اذْهَبُوا بِهَا إِلَى أَبِي جَهْمٍ وَأْتُونِي
بِأَنْبِجَانِيَّةٍ "
கோடுகள் போடப்பட்ட ஒரு மேலாடையை அணிந்து நபி ( ஸல் ) அவர்கள் தொழுதார்கள் ,' இதன் கோடுகள் என் கவனத்தைத்
தருப்பிவிட்டன. இதை அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு
மற்றொரு ஆடையைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள் . ( நூல் : புகாரி 752 )
தொழுபவர் தம் இறைவனிடம் உரையாடுகிறார் என்ற எண்ணத்துடன் கவனம் சிதறாமல் , சிதறுகின்ற வேலைகளில் , ஈடுபடால் தொழ வேண்டுமென
மேற்கூறப்பட்ட நபிமொழிகள் நமக்கு தெரிவிக்கின்றன . எனினும் அவசியம் ஏற்படின் தொழுகையின்
போது சைகையால் சுட்டிக் காட்டுவதை நபி ( ஸல் ) அவர்கள் அனுமதித்தார்கள்.
عَنْ نَابِلٍ صَاحِبِ الْعَبَاءِ عَنْ ابْنِ
عُمَرَ عَنْ صُهَيْبٍ قَالَ مَرَرْتُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
وَهُوَ يُصَلِّي فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ إِلَيَّ إِشَارَةً وَقَالَ لَا أَعْلَمُ
إِلَّا أَنَّهُ قَالَ إِشَارَةً بِإِصْبَعِهِ قَالَ وَفِي الْبَاب عَنْ بِلَالٍ وَأَبِي
هُرَيْرَةَ وَأَنَسٍ وَعَائِشَةَ
" நபி ( ஸல் ) அவர்கள் தொழுது
கொண்டிருந்தபோது அவர்களருகில் சென்று நான் ஸலாம் கூறினேன் . சைகையால் எனக்கு பதிலளித்தார்கள்
" ( நூல் : திர்மிதீ 335
)
عَنْ عَائِشَةَ
أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
فِي بَيْتِهِ وَهْوَ شَاكٍ، فَصَلَّى جَالِسًا وَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا،
فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا، فَلَمَّا انْصَرَفَ قَالَ " إِنَّمَا
جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا،
وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا "
நபி ( ஸல் ) அவர்கள் நோயுற்ற போது தங்கள் வீட்டிவாறே உட்கார்ந்து தொழுதார்கள்
. அவர்களின் பின்னால் சிலர் நின்றவாறே தொழுதார்கள். அப்போது நபி ( ஸல் ) அவர்கள், அவர்களை அமரும்படி சைகை
செய்தார்கள் . அவர்கள் தொழுது முடித்த பின்னர் , ' இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்படுள்ளார் . அவர்
ருகூவு செய்தால் , நீங்கள் ருகூவு செய்யுங்கள்
அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள் , அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் எனக் கூறினார்கள்.(
நூல் : புகாரி 688)
عَنْ أَسْمَاءَ،
قَالَتْ دَخَلْتُ عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ وَهِيَ تُصَلِّي قَائِمَةً وَالنَّاسُ
قِيَامٌ فَقُلْتُ مَا شَأْنُ النَّاسِ فَأَشَارَتْ بِرَأْسِهَا إِلَى السَّمَاءِ.
فَقُلْتُ آيَةٌ. فَقَالَتْ بِرَأْسِهَا أَىْ نَعَمْ
நான் ஆயிஷா ( ரழி ) அவர்களிடம் சென்ற போது மக்களோடு அவர் நின்று தொழுது கொண்டிருப்பதைப்
பார்த்தேன். நான் அவரிடம் '
மக்களுக்கு என்னவாயிற்று ? " எனக் கேட்டேன்.
ஆயிஷா ( ரழி ) தம் தலையால் வானத்தின் பக்கம் சைகை செய்தார் . நான் ( இதை ) அத்தாட்சியா
?" எனக் கேட்டதற்கு ' ஆம் " எனத் தம் தலையால்
சைகை செய்தார்"
( நூல் : புகாரி 1235 , 1286 )
மேற்கூறிய நபிமொழிகள் மூலம் தொழுபவர் அவசியம் ஏற்படும் போது சைகையால் உணர்த்தலாம்
என்பதை விளங்கலாம்.
No comments:
Post a Comment