40 . யாருக்கு அடிமை ?
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَعِسَ عَبْدُ الدِّينَارِ وَالدِّرْهَمِ
وَالْقَطِيفَةِ وَالْخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ
يَرْضَ "
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு
(செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி
( 6435 ) இப்னு மாஜா (4135 )
விளக்கம்
:
செல்வம் வாழ்வதற்குத்
தேவை தான். அதைத் தேடுவதும் கடமை தான். ஆனால் செல்வமே வாழ்க்கை என்று அதற்கு அடிமைப்பட்டுக்
கிடக்கக் கூடாது.
பணம் கிடக்கும்
என்றால் எதையும் செய்ய முனைவது முற்றிலும் தவறானதாகும்.
இன்று பெரும்பாலும்
ஆடம்பர ஆடைகள் அணிகலன்கள் , வீட்டுப் பொருட்கள் என்று மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதும்
அதற்கு அடிமையாகி விடுவதையும் காண்கிறோம். இது போன்ற பொருட்கள் இருந்தால் மகிழ்ச்சியடைவதும்
இல்லையென்றால் கவலைப்படுவதுமாக இருப்பது முற்றிலும் தவறாகும். பணம் இருந்தால் படைத்தவன்
சொன்ன முறைப்படி வாழ்வதற்கும் இல்லையென்றால் பொறுமையை கடைப்பிடிப்பதற்கும் பழகிக் கொள்ள
வேண்டும்.
பணத்திற்காகவும்
ஆடம்பர வாழ்க்கைக்காகவும் படைத்தவனை மறந்து விட்டு அவனுக்கு அடிமையாவதை விட்டுவிடக்
கூடாது.
No comments:
Post a Comment