47 . தொப்புளுக்குக் கீழே கை கட்டுதல்
حدثنا محمد بن محبوب حدثنا حفص بن غياث عن عبد الرحمن بن إسحق عن
زياد بن زيد عن أبي جحيفة أن عليا رضي الله عنه قال من السنة وضع الكف على الكف في
الصلاة تحت السرة
தொழுகையில் (இடது) முன் கை
மீது (வலது) முன் கையை வைத்து இரண்டையும் தொப்புளுக்குக் கீழே வைப்பது நபிவழியாகும்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: அபூதாவூத் 645
இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள
இமாம் அபூதாவூத் அவர்கள், இதற்கு இரண்டு ஹதீஸ்களுக்குப்
பின்னர் (அபூதாவூத் 647ல்) இவரைப் பற்றி விமர்சிக்கும்
போது, கூஃபாவைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர்
பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறியதை
நான் செவிமடுத்துள்ளேன் என்று கூறியுள்ளனர்.
حدثنا مسدد حدثنا عبد الواحد بن زياد عن عبد الرحمن بن إسحق الكوفي
عن سيار أبي الحكم عن أبي وائل قال قال أبو هريرة أخذ الأكف على الأكف في الصلاة
تحت السرة قال أبو داود سمعت أحمد بن حنبل يضعف عبد الرحمن بن إسحق الكوفي
இந்த ஹதீஸ் அபூதாவூதில் மட்டுமின்றி
அஹ்மத் 998, பைஹகீ 2170, 2171,
தாரகுத்னீ 9 (பாகம்: 1, பக்கம்: 286), தாரகுத்னீ 10 (பாகம்: 1, பக்கம்: 286) ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூல்கள் அனைத்திலுமே
அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர்
வழியாக மட்டுமே இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
تهذيب التهذيب - ابن حجر - (ج 6 / ص 124)
284 - د ت أبي داود والترمذي عبد الرحمن بن إسحاق بن سعد بن الحارث أبو
شيبة الواسطي الأنصاري ويقال الكوفي بن أخت النعمان بن سعد روى عن أبيه وخاله
والقاسم بن عبد الرحمن بن عبد الله بن مسعود وسيار بن الحكم وزياد بن زيد الأعسم
والشعبي وحفصة بنت أبي كثير وغيرهم وعنه حفص بن غياث وعبد الواحد بن زياد وأبو
معاوية ومحمد بن فضيل وهشيم وعلي بن مسهر ويحيى ويحيى بن أبي زائدة وغيرهم قال أبو
داود سمعت أحمد يضعفه وقال أبو طالب عن أحمد ليس بشيء منكر الحديث وقال الدوري عن
بن معين ضعيف ليس بشيء وقال بن سعد ويعقوب بن سفيان وأبو داود والنسائي وابن حبان
ضعيف وقال النسائي ليس بذاك وقال البخاري فيه نظر وقال أبو زرعة ليس بقوي وقال أبو
حاتم ضعيف منكر الحديث يكتب حديثه ولا يحتج به وقال بن خزيمة لا يحتج بحديثه قلت
وقال بن أبي خيثمة عن بن معين ليس بذاك القوي وقال عبد الله بن أحمد عن أبيه ليس
بذاك وهو الذي يحدث عن النعمان بن سعد أحاديث مناكير والمدني أعجب إلى من الواسطي
وقال البزار ليس حديثه حديث حافظ وذكره يعقوب بن سفيان في باب من يرغب عن الرواية
عنهم وقال بن عدي وفي بعض ما يرويه لا يتابعه الثقات عليه وقال العقيلي ضعيف
الحديث وقال الساجي كوفي أصله واسطي أحاديثه مناكير وقال العجلي ضعيف جائز الحديث
يكتب حديثه
அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் பலவீனமானவர் என்றும், நம்பகமான ஹதீஸ்களுக்கு முரணாக அறிவிப்பவர் என்றும்
அஹ்மத் பின் ஹம்பல், இப்னு மயீன், இப்னு சஅத், யஃகூப் பின் சுஃப்யான், அபூதாவூத், நஸயீ, இப்னு ஹிப்பான்,புகாரி, அபூ ஸுர்ஆ, அபூ ஹாத்தம், இப்னு குஸைமா, பஸ்ஸார், இப்னு அதீ, உகைலீ, சாஜீ, அஜலீ ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர்.
(ஹாஃபிழ் இப்னு ஹஜரின்) தஹ்தீபுத்
தஹ்தீப்
No comments:
Post a Comment