9. சாப்பிடுவதின் ஒழுக்கங்கள் ( பகுதி 02 )
இடக்கரத்தால் ஷைத்தானே சாப்பிடுகிறான்
صحيح مسلم (3 / 1598):
عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ
جَدِّهِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ، وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ
فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ، وَيَشْرَبُ بِشِمَالِهِ»
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் சாப்பிடும் போது தனது வலக்கரத்தால் சாப்பிட்ட்டும் குடிக்கும் போதும் தனது வலக்கரத்தால் குடிக்கட்டும் நிச்சயமாக ஷைத்தான் தனது இடக்கரத்தால் சாப்பிடுகிறான் தனது இடக்கரத்தால் குடிக்கின்றான் .
அறிவிப்பவர் : இப்னு உமர் ( ரழி )
நூல் : முஸ்லிம் ( 4108 ) அபூதாவூத் ( 3776 ) திர்மிதீ ( 1799 ) முஅத்தா
மாலிக் ( 06 )
கீழ் விழுந்த உணவு
صحيح
مسلم (3 / 1607):
عَنْ
أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَكَلَ طَعَامًا
لَعِقَ أَصَابِعَهُ الثَّلَاثَ، قَالَ: وَقَالَ: «إِذَا سَقَطَتْ لُقْمَةُ أَحَدِكُمْ
فَلْيُمِطْ عَنْهَا الْأَذَى وَلْيَأْكُلْهَا، وَلَا يَدَعْهَا لِلشَّيْطَانِ» ، وَأَمَرَنَا
أَنْ نَسْلُتَ الْقَصْعَةَ، قَالَ: «فَإِنَّكُمْ لَا تَدْرُونَ فِي أَيِّ طَعَامِكُمُ
الْبَرَكَةُ »
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவருக்கு ( சாப்பிடும் போது ) ஒர் வாய் உணவு கீழ் விழுந்து விட்டால் அதனுடைய அசுத்தங்களை நீக்கி அவர் அதை சாப்பிடட்டும் அதை ஷைத்தானிற்காக ( வீணாக ) விட்டு விட வேண்டாம்.
அறிவிப்பாளர் : அனஸ் ( ரழி )
நூல் : முஸ்லிம் ( 4139 ) திர்மிதீ ( 1803 ) அஹ்மத் ( 12815 )
சாய்ந்து கொண்டு சாப்பிடுதல்
صحيح
البخاري (7 / 72):
سَمِعْتُ
أَبَا جُحَيْفَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لاَ آكُلُ مُتَّكِئًا»
நபி ஸல் அவர்கள் நான் சாய்ந்து கொண்டு சாப்பிட மாட்டேன்
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுஜைஃபா
( ரழி )
நூல் : புஹாரி (5398 )
அபூதாவூத் ( 3769 ) திர்மிதீ ( 1830 ) இப்னு மாஜா ( 3262 )
நின்று கொண்டு குடிப்பதற்க்குத்
தடை
صحيح
مسلم (3 / 1600):
عَنْ
أَنَسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَجَرَ عَنِ الشُّرْبِ
قَائِمًا»
நபி ஸல் அவர்கள் நின்று கொண்டு குடிப்பதை வெறுத்தார்கள்
.
அறிவிப்பவர் : அனஸ் ( ரழி
)
நூல் : முஸ்லிம் (
4115 ) அபூதாவூத் ( 3717 ) இப்னு மாஜா ( 3424 )
ஸம் ஸம் தண்ணீரை நின்று
கொண்டு குடித்தல்
صحيح
البخاري (2 / 156):
أَنَّ
ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا حَدَّثَهُ قَالَ: «سَقَيْتُ رَسُولَ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ زَمْزَمَ، فَشَرِبَ وَهُوَ قَائِمٌ» قَالَ عَاصِمٌ:
فَحَلَفَ عِكْرِمَةُ مَا كَانَ يَوْمَئِذٍ إِلَّا عَلَى بَعِيرٍ
நபி ஸல் அவர்கள் ஸம் ஸம் தண்ணீரை நின்றவர்களாக குடித்தார்கள்
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்
( ரழி )
நூல் : புஹாரி ( 1637
) முஸ்லிம் ( 2027 ) திர்மிதீ ( 1882 ) நஸாயீ
( 2964 )
நிர்பந்த்த்தில் நின்று கொண்டு குடிப்பதற்கு அனுமதியுண்டு
نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ
قَالَ كُنَّا نَأْكُلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَمْشِي وَنَشْرَبُ وَنَحْنُ قِيَامٌ
நாங்கள் நபி ஸல் அவர்களுடைய காலத்தில் நடந்தவர்களாக
சாப்பிடுவோம் நின்றவர்களாக குடிப்போம் .
அறிவிப்பவர் : இப்னு உமர் ( ரழி
) நூல் : திர்மிதீ ( 1802 )
No comments:
Post a Comment