Friday, April 21, 2017

உணவு ஒரு இஸ்லாமிய பார்வை




உணவு ஒரு இஸ்லாமிய பார்வை

அறிமுகம் :

உணவைப் பற்றிய செய்திகளை ஒரு சிறு கட்டுரையில் சிறைபிடிக்க நினைப்பது சாத்தியமற்ற ஒன்று. ஏனெனில் உணவைப் பற்றி எழுதுவது ஒரு விதத்தில் மனித குல வரலாற்றையேஎழுதுவதற்கு சமம் எனலாம்.

முதல் மனிதன் பூமியில் தேடிய முதல் தேடலே வயிற்றின் பசி போக்கும் உணவுத் தேடலாகத் தான் இருந்திருக்க வேண்டும் . அன்று முதல் இன்று வரை மனிதன் தனது சிறு மதியின்
துணை கொண்டு எதை சாப்பிடலாம் ? எதை சாப்பிடக் கூடாது ? எந்த உணவில் ஆரோக்கியம் இருக்கிறது ? அறுசுவை எதிலிருக்கிறது ? அவற்றை உண்ணும் முறை என்ன ?
என்றெல்லாம் பக்கம் பக்கமாக படித்திருந்தாலும் அதில் தெளிவற்ற நிலையே இன்னும் தொடர்கிறது.

அது குறித்து தீர்க்கமான முடியுக்கு வருவதாக இருந்தால் முக்காலமும் அறிந்த முதலோளின் வார்த்தைகளே அதற்கு முழுமையான வழிகாட்டும் ஆதி மனிதனின் காலம் தொட்டு இறைவனும் . இதை நினைவூட்டிக் கொண்டே வருகிறான்.

என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்


 ( அல்குர் ஆன் 2 : 38 )

இது மனித குலத்தின் ஆதிப் பெற்றோருக்கு இறைவன் கூறிய வார்த்தைகளாகும் . அந்தப் பேரறிவை முதலாய்க் கொண்டு நான் அறிந்த சில விஷயங்களை இங்கே தருகிறேன்...

இன்ஷா அல்லாஹ்

( ஆசிரியர் : எம் .ஏ. பக்கீர் முஹம்மது அல்தாஃபி )

 சாப்பிடுவதின் ஒழுங்குகள்

தூய்மையானதை சாப்பிடுதல் :

{يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللَّهُ فَكُلُوا مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ (4)} [المائدة: 4]

தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை ? என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் . தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறுவீராக ! 

 ( அல்குர் ஆன் 5 : 4 )
{كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَلَا تَطْغَوْا فِيهِ فَيَحِلَّ عَلَيْكُمْ غَضَبِي وَمَنْ يَحْلِلْ عَلَيْهِ غَضَبِي فَقَدْ هَوَى (81)} [طه: 81]

நான் உங்களுக்கு வழங்கியவற்றில் . தூய்மையானதை உண்ணுங்கள் ! இங்கே வரம்பு மீறாதீர்கள் ! ( வரம்பு மீறினால் ) எனது கோபம் உங்கள் மீது இறங்கும் . எவன் மீது எனது கோபம் இறங்கி விட்டதோ அவன் வீழ்ந்து விட்டான் . 

 ( அல்குர் ஆன் 20 : 81 )

கீழ்காணும் வசனங்களிலும் இக்கருத்தைக் காணலாம் :

16 : 114 , 2 : 57 , 2 : 168 , 1 : 172 , 5 : 87 , 5 : 88 , 6 : 142 , 7 : 157 , 7 : 160 , 8 : 69 , 16 : 72 , 17 : 70


தூய்மையற்றதை சாப்பிட்டால் :       

و حَدَّثَنِي أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنْ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ وَقَالَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ


நபி ( ஸல் ) அவர்கள் ஒரு மனிதரைப் பற்றி நினைவு கூர்ந்தார்கள் . ( உடல் முழுவதும் ) அழுக் கடைந்து. ஆடையெல்லாம் புழுதி படர்ந்த நிலையில் வானத்தின் பக்கம் உயர்த்தி.
என் இறைவா ! என் இறைவா ! ( என்கிறார் ). அவரது உணவு ஹராம் உடையும் ஹராம், அவரது பானமும் ஹராம் . இவ்வாறு ஹராமிலே மூழ்கியிருப்பவருக்கு எவ்வாறு
பதிலளிக்கப்படும் ? எனக் கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ( ரலி )
நூல்கள் : முஸ்லிம் 1686, திர்மிதி 2915 , அஹமது 7998

தூய்மையான உணவு என்பது இரண்டு வகைகளில் அமையும் ஒன்று வெளிப்படையான அசுத்தத்தை விட்டு நீங்கி இருக்க வேண்டும் . இரண்டு இறைவனால் தடுக்கப்பட்ட ஹராமை
விட்டும் நீங்கி இருக்க வேண்டும்.

ஹராம் எனும் அடுத்தத்தை சாப்பிட்டு விட்டால் நமது பிரார்த்தணைகள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

உணவு விரிப்பு :

சுப்ரா என்ற பெயரில் விரிப்பு ஒன்றை விரித்து அதன்மீது உணவுப் பாத்திரத்தை வைத்து சாப்பிடுவது சுன்னத்தான வழிமுறை என்று சிலர் கடைபிடித்து வருகின்றனர்.

நபி ( ஸல் ) அவர்கள் உணவு விரிப்பு ஒன்றை வைத்திருந்தார்கள் என்பது உண்மை. ஆனால் அந்த விரிப்பு நேரடியாக அதிலேயே உணவைக் கொட்டி சாப்பிடும் வகையில் இருந்தது.

உணவுத் தட்டுக்கு கீழே விரிக்கும் விரிப்பாக அது இருக்கவில்லை . நபி ( ஸல் ) அவர்களிடமிருந்த விரிப்பை பற்றி அனஸ் ( ரலி ) அவர்கள் கூறுகிறார்கள் .

حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي حُمَيْدٌ أَنَّهُ سَمِعَ أَنَسًا يَقُولُ قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْنِي بِصَفِيَّةَ فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ أَمَرَ 
بِالْأَنْطَاعِ فَبُسِطَتْ فَأُلْقِيَ عَلَيْهَا التَّمْرُ وَالْأَقِطُ وَالسَّمْنُ وَقَالَ عَمْرٌو عَنْ أَنَسٍ بَنَى بِهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ صَنَعَ حَيْسًا فِي نِطَعٍ

நபி ( ஸல் ) அவர்கள் சபிய்யா ( ரலி ) அவர்களைத் திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட்டார்கள். அவர்களின் வலீமாவுக்காக முஸ்லீம்களை நான் அழைத்தேன். தோலால்
ஆன உணவு விரிப்பை விரிக்குமாறு கட்டளையிட்டார்கள் அது விரிக்கப்பட்டது. அதில் பேரீத்தம் பழம் , பாலாடைக்கட்டி, நேய் ஆகியவை போடப்பட்டது.

அறிவிப்பவர் : அனஸ் ( ரலி )

நூல் : புகாரி 5387  முஸ்லிம் 2395 திர்மிதீ 1015  நஸாயீ 544 அபூதாவூத்  1758

உணவுத் தட்டின் கீழ் சுத்தமான விரிப்பு ஒன்றை விரித்து கொண்டால் கீழே சிந்தும் பருக்கையை எடுத்து சாப்பிட வசதியாக இருக்கும் என்பன போன்ற காரணங்களுக்காக விரிப்புவைத்துக் கொள்வதில் தவறில்லை சுன்னத் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்ய இயலாது.
 

மேலும் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களும் வஹீயின் அடிப்படையில் விரிப்பைத் தேர்ந்தெடுக்கவில்லை . அவர்கள் வாழும் காலத்தில் உள்ள சமூகப்பழக்கத்தின் அடிப்படையில் தான் இதை செய்து வந்துள்ளார்கள் . எனவே இதை மார்க்க அனுஷ்டானமாகவும் கருத முடியாது...

No comments:

Post a Comment