Sunday, April 23, 2017

மார்க்க விளக்க கேள்வி-பதில் ( 36 முதல் 40 வரை )



📚மார்க்க விளக்க கேள்வி-பதில்


36. எந்த இரண்டு விஷயங்களின் மூலம் உதவி தேடுமாறு அல்லாஹ் கூறுகிறான்?

பதில்: பொறுமை மற்றும் தொழுகை

📒ஆதாரம்: திருக்குர்ஆன் 2:45

37. முந்தைய சமுதாயத்திற்கு நோன்பு கடமையாக்கப்பட்டதா?

பதில்: கடமையாக்கப்பட்டுள்ளது.

📒ஆதாரம்: திருக்குர்ஆன் 2:183

38. இப்றாஹிம் நபி தன்னுடைய பிள்ளைகளுக்கு செய்த உபதேசம் என்ன?

பதில்: "என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது" என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.

📒ஆதாரம்: திருக்குர்ஆன் 2:132

39. நம்முடைய உள்ளத்தில் எந்த அளவு பெருமை இருந்தாலும் சுவனம் செல்ல முடியாது என நபிகள் நாயகம் கூறினார்கள்?

பதில்: கடுகளவு (அல்லது) அணுவளவு

📒ஆதாரம்: முஸ்லிம் 148,149

40. எது சீர்ப்பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர்ப்பெற்று விடும் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்?

பதில்: இதயம்(உள்ளம்)


📒ஆதாரம்: முஸ்லிம் 52

No comments:

Post a Comment