📚மார்க்க விளக்க கேள்வி-பதில்
31. பழிக்குப் பழி வாங்குவது தொடர்பாக
வரும் வசனத்தை எழுதுக?
✏பதில்: நம்பிக்கை கொண்டோரே! (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்காக
(கொலைசெய்த) சுதந்திரமானவன், (கொல்லப்பட்ட) அடிமைக்காக (கொலைசெய்த) அடிமை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்காக
(கொலைசெய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது
உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது
(கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில்
அவனிடம் (இழப்பீடு) வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன்
பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
📒 ஆதாரம்: திருக்குர்ஆன் 2:178
32. அல்லாஹ் இறந்தவர்களை எவ்வாறு உயிர்பிக்கிறான்
என்பதை பற்றி இப்றாஹிம் நபி அறிந்த நிகழ்ச்சியை
எழுதுக?
✏பதில்: "என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய்
என்பதை எனக்குக் காட்டுவாயாக!' என்று இப்ராஹீம் வேண்டிய போது, "நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?' என்று (இறைவன்) கேட்டான்.
அதற்கவர் "அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே.'
என்றார். "நான்கு பறவைகளைப்
பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர்
அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக!
அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக' என்று (இறைவன்) கூறினான்.
📒ஆதாரம்: திருக்குர்ஆன் 2:260
33. இம்ரானின் மனைவி அல்லாஹ்வுக்காக செய்த
நேர்ச்சை என்ன?
✏பதில்: "இறைவா!
என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக)
முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' என்று இம்ரானின் மனைவி
கூறியதை நினைவூட்டுவீராக!
📒ஆதாரம்: திருக்குர்ஆன் 3:35
34. நன்மை மற்றும் தீமைப் பற்றி நபிகள்
நாயகம் கூறியது என்ன?
✏பதில்: நான் அல்லாஹ்வின் தூதரிடம் நன்மை மற்றும் தீமைப் பற்றிக்
கேட்டேன். அதற்கு அவர்கள், " நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச்
செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துக்கொள்வதை வெறுப்பாயோ அதுவாகும்"
என்று விடையளித்தார்கள்.
📒ஆதாரம் : முஸ்லிம் 4632
35. நயவஞ்சகனின் அடையாளமாக நபிகள் நாயகம்
கூறுவது என்னென்ன?
✏பதில்: “நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம்
செய்வான்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
📒ஆதாரம்: புகாரி 33
No comments:
Post a Comment