9. சாப்பிடுவதின் ஒழுக்கங்கள்
தூய்மையானவற்றையே உண்ண வேண்டும்
يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ
طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ
2:172. நம்பிக்கை கொண்டோரே! நாம்
உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால்
அவனுக்கே நன்றி செலுத்துங்கள்!
சாப்பிடும் முன் இரு கைகளையும் கழுவுதல்
عَنْ عَائِشَةَ
رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنّ رَسُولَ اللَّهِ كَانَ " إِذَا أَرَادَ أَنْ يَنَامَ
وَهُوَ جُنُبٌ تَوَضَّأَ، وَإِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ غَسَلَ يَدَيْهِ "
நபி ஸல் அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் போது தூங்க நாடினால் உளூச் செய்வார்கள்.
சாப்பிட நாடினால் சாப்பிடுவதற்கு முன்னால் தனது இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி ) நூல் : நஸாயீ ( 256 )
வலது கரத்தால் அருகிலிருப்பதை சாப்பிடுதல்
سَمِعَ عُمَرَ
بْنَ أَبِي سَلَمَةَ، يَقُولُ كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صلى الله
عليه وسلم وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم " يَا غُلاَمُ سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا
يَلِيكَ ". فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ
(நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு
மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு
முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் என்னிடம், 'சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச்
சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும்
எடுத்துச் சாப்பிடு!' என்று கூறினார்கள். அதன்
பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
நூல் : புஹாரி 5376
சாப்பிடும் முன் பிஸ்மில்லாஹ் கூறுதல்
عَنْ حُذَيْفَةَ،
عَنِ النَّبِيِّ قَالَ: " إِنَّ الشَّيْطَانَ يَسْتَحِلُّ الطَّعَامَ، إِذَا لَمْ
يَذْكُرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ
"
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
: அல்லாஹ்வின் பெயர் சொல்லி உண்ணாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறேன்.
அறி : ஹுதைஃபா ( ரழி ) நூல் : முஸ்லிம்
( 3768 ) , அஹ்மத் ( 22643 )
சாப்பிடும் முன் பிஸ்மில்லாஹ் கூற மறந்தால்
سنن الترمذي ت
شاكر (4 / 288):
عَنْ عَائِشَةَ
قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا أَكَلَ
أَحَدُكُمْ طَعَامًا فَلْيَقُلْ: بِسْمِ اللَّهِ، فَإِنْ نَسِيَ فِي أَوَّلِهِ فَلْيَقُلْ:
بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ "
__________
[حكم الألباني] : صحيح
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்
: உங்களில் ஒருவர் உணவு சாப்பிட ( ஆரம்பிக்கும் ) போது “ பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும் “ ஆரம்பத்தில் ( பிஸ்மில்லாஹ் ) கூறமறந்து விட்டால் “ பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி “ என்று கூறட்டும்
பொருள் : ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி ) நூல் : திர்மீதீ
( 1781 )
No comments:
Post a Comment