📚மார்க்க விளக்க கேள்வி-பதில்
41.
ஜக்கரிய்யா நபியவர்களிடம் உங்களுக்கு ஓர் குழந்தைப் பிறக்க உள்ளது என்ற நற்செய்தியை கூறும் போது ஏன் ஜக்கரிய்யா நபி
ஆச்சரியப்பட்டர்கள்? அதற்கு அல்லாஹ் கூறியது என்ன?
قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَقَدْ بَلَغَنِيَ
الْكِبَرُ وَامْرَأَتِي عَاقِرٌ ۖ قَالَ كَذَٰلِكَ اللَّـهُ يَفْعَلُ مَا يَشَاءُ
﴿٤٠﴾
✏பதில்: "என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள
நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?'' என்று அவர் கேட்டார். "தான் நாடியதை அல்லாஹ்
இப்படித்தான் செய்வான்'' என்று (இறைவன்) கூறினான்.
📒ஆதாரம்: திருக்குர்ஆன் 3:40
42. திருக்குர்ஆன் எந்த மாதத்தில் அருளப்பட்டது?
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ
وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ
فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ
أُخَرَ ۗ يُرِيدُ اللَّـهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّـهَ عَلَىٰ مَا هَدَاكُمْ
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ ﴿١٨٥﴾
✏பதில்:ரமலான்
📒ஆதாரம்: திருக்குர்ஆன் 2:185
43. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை
எவ்வாறு கூறக்கூடாது?
وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّـهِ أَمْوَاتٌ ۚ
بَلْ أَحْيَاءٌ وَلَـٰكِن لَّا تَشْعُرُونَ ﴿١٥٤﴾
✏பதில்: இறந்தோர் என கூறக்கூடாது.
📒ஆதாரம்: திருக்குர்ஆன் 2:154
44. பொது இடத்திலோ அல்லது கடைவீதியிலோ
அம்பை எடுத்துச் சென்றால் எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும்?
عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا، يَقُولُ مَرَّ رَجُلٌ فِي
الْمَسْجِدِ بِسِهَامٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمْسِكْ بِنِصَالِهَا
" .
✏பதில்: அம்பின் முனைகளை பிடித்துக்கொள்ளட்டும்.
📒ஆதாரம்: முஸ்லிம் 2615
45. நபிகள் நாயகம் அவர்களுக்கு அண்டை
வீட்டாரைக் குறித்து எந்தளவிற்கு அறிவுறுத்தப் பட்டது?
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ
النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا زَالَ يُوصِينِي جِبْرِيلُ
بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ
أَنَّهُ سَيُوَرِّثُهُ ".
✏பதில்: அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும்
அளவிற்கு
📒ஆதாரம்: புகாரி 6014
No comments:
Post a Comment