Tuesday, May 23, 2017

புஹாரியில் இடம்பெற்ற ரத்தின சுருக்கமான நபிமொழிகள் ( பகுதி 03 )


                      புஹாரியில் இடம்பெற்ற ரத்தின சுருக்கமான நபிமொழிகள் ( பகுதி 03 )



11 . பல் துலக்கவேண்டும்

عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَامَ لِلتَّهَجُّدِ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ‏.‏

ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழும்போது பல் துலக்குவார்கள். ( புஹாரி 1136 )

12. ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுத பின் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வது.

عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى رَكْعَتَىِ الْفَجْرِ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ‏.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள். ( புஹாரி 1160 )

13. உபரியான தொழுகைகளை வீட்டில் தொழுவது

عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ اجْعَلُوا فى بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا ‏"‏‏.‏

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

'உங்களின் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள். அவற்றைக் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள்.'

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ( புஹாரி 1187 )

14. நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்திற்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதியின் சிறப்பு

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْمَازِنِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ ‏"‏‏.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்.'

என அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.( புஹாரி 1195 )

15. பொறுமை என்பது எப்போது !

قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى ‏"‏‏.‏

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட உடன் (கைக் கொள்வதே)'


அனஸ்(ரலி) அறிவித்தார். ( புஹாரி 1302 )

No comments:

Post a Comment