📚மார்க்க விளக்க கேள்வி-பதில்
46.🔍கேள்வி: எந்த நபி தொழுது கொண்டிருக்கும் போது அவருக்கு பிறக்க இருக்கும் குழந்தையைப் பற்றி அல்லாஹ் நற்செய்தி கூறினான்?
✏பதில்: ஜக்கரிய்யா (அலை)
📒ஆதாரம்: திருக்குர்ஆன் 3:38,39
47.🔍கேள்வி: அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்யப்படும் சபைகளை பற்றி அல்லாஹ் கூறுவது என்ன? அங்கே நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
✏பதில்: அல்லாஹ்வின்
வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே
ஆதாரம்: திருக்குர்ஆன் 4:140
48.🔎கேள்வி: கணவனின் சொல்லுக்கு மனைவி கட்டுபடாவிட்டால் கணவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்?
✏ பதில் : பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்!
📒ஆதாரம் : திருக்குர்ஆன் 4:34
49.🔎 கேள்வி :பொது இடத்திலோ அல்லது கடைவீதியிலோ அம்பை எடுத்துச் சென்றால் எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நபிகளார் கூறினார்கள்
✏ பதில் : அம்பின் முனைகளை பிடித்துக்கொள்ளட்டும் என்பதுதான் சரியான விடையாகும்
📒 ஆதாரம் : புகாரி ( 7075 )
50.🔎கேள்வி: முபாஹலா என்றால் என்ன?
✏ பதில் : யாரேனும் விதண்டாவாதம் செய்தால் "வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம் என்று அழைப்பது முபாஹலா என்று சொல்லப்படும்.
📒ஆதாரம் : திருக்குர்ஆன் 3:61
51.🔎கேள்வி: தீய சொல்லை பகிரங்கமாக பயன்படுத்துவதற்கு யாருக்கு அல்லாஹ் அனுமதி வழங்குகிறான்?
✏ பதில் : அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
📒ஆதாரம் : திருக்குர்ஆன் 4:148
52.🔎கேள்வி: மனித குலத்திற்காக தேர்வுசெய்யப்பட்ட சிறந்த எது? எதனால் சிறந்த சமுதாயம் என்று அழைக்கப்படுகிறது?
✏ பதில் : மனித குலத்திற்காக தேர்வுசெய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக நபிகள் நாயகம் சமுதாயத்தை தான் அல்லாஹ் கூறுகிறான். ஏனெனில் நன்மையை ஏவி தீமையை தடுப்பதால்.
📒ஆதாரம் : திருக்குர்ஆன் 3:110
53.🔎கேள்வி: ஈஸா நபியவர்கள் இறைவனிடமிருந்து கொண்டு வந்த சான்று என்ன?
✏ பதில் : உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்.
📒ஆதாரம் : திருக்குர்ஆன் 3:49
No comments:
Post a Comment