Sunday, May 28, 2017

நோன்பு திறக்கும் துஆ



57. நோன்பு திறக்கும் துஆ






حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ حُصَيْنٍ عَنْ مُعَاذِ بْنِ زُهْرَةَ أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து
( Allaahumma laka sumtu was ‘ala rizqika aftartu )

அபூதாவூத் (2358),
முஸனஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511,
பைஹகீ பாகம்: 4, பக்கம்: 239,
ஷுஅபுல் ஈமான்-பைஹகீ (3747),
அத்தஃவாத்துல் கபீர்-பைஹகீ (426),
அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக்-இப்னுல் முபாரக் (1388,1390),
அஸ்ஸுனனுஸ் ஸகீர்-பைஹகீ (1102),
பழாயிலுல் அவ்காத்-பைஹகீ (141),
அல்மராஸில்-அபூதாவூத் (95)
ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து நூல்களிலும் முஆத் பின் ஸஹ்ரா என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் அல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான எந்தச் செய்தியாக இருந்தாலும் அதை நேரடியாகப் பார்த்து அல்லது கேட்டு அறிவித்தால் மட்டுமே அது ஏற்றுக் கொள்ளப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாத ஒருவர் அறிவித்தால் அது பலவீனமான செய்தியாகும்.

மேலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. அறியப்படாததால் இச்செய்தி மேலும் பலவீனமடைகிறது.

அரபு மூலம் :

بن حبان:ذكره في طبقة التابعين من كتابه (الثقات) ، ثم أعاده في طبقة أتباع التابعين ، وقال : يروي المراسيل .
الذهبي:قال في الكاشف : تابعي أرسل
ابن حجر العسقلاني:قال في تقريب التهذيب : مقبول ، أرسل حديثا فوهم من ذكره في الصحابة .

المستغفري:وهم من زعم أن له صحبة .

 تهذيب الكمال (28/122) .
تهذيب التهذيب (4/99) .
تقريب التهذيب (صـ 951) .
التاريخ الكبير (1/227) رقم (711)،(7/364) رقم (1568) .
الجرح والتعديل (8/248) رقم (1126) .
الثقات لابن حبان (5/372)،(7/482) .
لسان الميزان (8/97) رقم (7805) .
بيان خطأ البخاري (صـ 8) .
الكاشف للذهبي (2/273) .

 

No comments:

Post a Comment