11 . உமாமா பின்த் ஜைனப் ( ரழி )
உமாமா , அபுல் ஆஸ் பின்
ரபீஃ என்பவருடைய மகள் ஆவார். உமாமாவின் அன்னையார் நபி ஸல் அவர்களின் மகளான ஜைனப் ஆவார்கள்.
நபி ஸல் அவர்கள் தங்கள் பேத்தியான உமாமாவை அதிகம் நேசித்து வந்தார்கள் எப்பொழுதுமே
தங்கள் சமூகத்திலேயே உமாமாவை வைத்துக்கொண்டு இருப்பார்கள். தொழப்போகும் நேரத்திலுங்கூட
உமாமாவை தனியே விட்டு விடுவதில்லை
அதைபின்வரும் செய்தி நமக்கு
தெளிவாக எடுத்துரைக்கிறது
عَنْ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله
عليه وسلم كَانَ يُصَلِّي وَهْوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ بِنْتِ
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلأَبِي الْعَاصِ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ
شَمْسٍ، فَإِذَا سَجَدَ وَضَعَهَا، وَإِذَا قَامَ حَمَلَهَا
அபூ கதாதா அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை 'உமாமா'வைத் (தோளில்) சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச்
செல்லும்போது இறக்கி விடுவார்கள். நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள்.
நூல் : புஹாரி ( 516 )
حَدَّثَنَا أَبُو قَتَادَةَ، قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صلى
الله عليه وسلم وَأُمَامَةُ بِنْتُ أَبِي الْعَاصِ عَلَى عَاتِقِهِ، فَصَلَّى
فَإِذَا رَكَعَ وَضَعَهَا، وَإِذَا رَفَعَ رَفَعَهَا.
அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோளின் மீது (சிறுமி) உமாமா பின்த் அபில் ஆஸை அமர்த்திய
வண்ணம் எங்களிடையே வந்து அப்படியே (எங்களுக்க இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்.
அவர்கள் ருகூஉ செய்யும்போது உமாமாவைக் கீழிறக்கிவிட்டார்கள். (சஜ்தாலிருந்து நிலைக்கு)
உயரும்போது அவரை மீண்டும் (தோளில்) ஏற்றினார்கள்
நூல் : புஹாரி ( 5996 )
நபி ஸல் சமூகத்தில் ஒரு சமயம் ஒரு சில பொருட்கள் அன்பளிப்பாக வந்து சேர்ந்த்து
அதில் தங்கமாலை ஒன்றும் இருந்தது அந்த நேரத்தில் உமாமா அவர்கள் ஒர் மூலையில் விளையாடிக்
கொண்டிருந்தார்கள் நபி ஸல் அவர்கள் அந்த தங்கமாலையை கையிலெடுத்துக் கொண்டு “ எனக்கு
அதிகப் பிரியமுள்ள ஒருவருக்கு இதை கொடுக்க போகின்றேன் “ என்று கூறினார்கள். உடனே இந்த
தங்கமாலை ஆயிஷாவிற்க்கு தான் கிடைக்கப் போகிறது என்று இதர மனைவியர் நினைத்தனர் ஆனால்
நடந்த்தோ வேறு நபி ஸல் அவர்கள் உமாமாவை அழைத்து தங்கள் கையில் இருந்த அந்த தங்கமாலையை
உமாமாவின் கழுத்தில் போட்டுவிட்டார்கள் இவ்தங்கமாலை அன்பளிப்பாக கொடுத்தது நஜ்ஜாஷி
( அபிஸீனியா மன்னர் ) ஆவார்.
நூல் : ஜர்கானீ ( பாகம் 3 பக்கம் 225 )
நபி ஸல் அவர்கள் இறந்தபோது உமாமா அவர்கள் பருவ வயதை அடைந்து இருந்தார்கள் எதற்க்கு
பிறகு நபி ஸல் அவர்கள் இறப்பிற்க்கு பிறகு 6 மாதங்கள் கழித்து அன்னை ஃபத்திமா ரழி அவர்கள்
மரணமடைந்தார்கள் . அந்த சமயத்தில் அலி ரழி அவர்கள் உமாமாவை திருமணம் முடித்து கொண்டார்கள்
இவ்சம்பவம் ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
ஹிஜ்ரி 40 ஆம் ஆண்டில் அலி ரழி அவர்கள் மரணமடைக்கிறார்கள் அப்போது முகீரா பின்
நவ்பல் ( அப்துல் முத்தலிபின் கொள்ளுப்பேரர் ) என்பவருக்கு உமாமாவை திருமணம் செய்து
கொடுத்துவிடவேண்டும் மென மரண உபதேசம் செய்து சென்றார்கள். எனவே முகீரா அலி ரழியின்
மரண உபதேசத்தின்படி உமாமாவை திருமணம் செய்து கொண்டார்கள்.
ஆனால் திருமணம் முடிவதற்கு முன்னே அமீர் மு ஆவியாவிடமிருந்து உமாமாவை பெண் கேட்டு
வந்த்து இச் செலவுக்காக மதீனாவில் தனது கவர்னராயிருந்த மர்வான் 5,000 தீர்ஹம் செலவழிக்க
வேண்டுமென ஆணைபிறப்பிக்கப்பட்டிருந்தார். எனினும் உமாமா பிரஸ்தாப விஷயத்தை முகீராவுக்குத்
தெரியப்படுத்த இமாம் ஹஸன் ரழி அவர்களுடைய அனுமதி பெற்று முகீராவே திருமணம் செய்து கொண்டார்கள்.
உமாமா அவர்கள் தங்கள் இறுதி காலம் மட்டும் முகீராவிடமே இருந்து மரணமடைந்தார்கள் உமாமா
முகீரா வுக்கும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்று எடுத்தார்கள். அந்த குழந்தையின் பெயர்
எஹ்யா என்பதாகும்.
நூல் : இஸாபா ( பாகம் 8 பக்கம் 16 )
No comments:
Post a Comment