Monday, June 12, 2017

நபிமொழி இயல் கலை பகுதி 2


                                           நபிமொழி இயல் கலை பகுதி 2


இரண்டாம் வகைப் பங்கீடு



ஒரு செய்தியானது அதன் பொருள் மற்றும் அறிவிப்பாளரின் தகுதியை பொறுத்து ஏற்கத் தக்கது ( மக்பூல் ) ஏற்கத் தகாதது ( மர்தூத் ) பொதுவானது ( முஷ்த்தரக்) என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.


மர்பூல்


ஏற்கத் தக்க ஹதீஸ் ஒரு செய்தியை அறிவித்தவர் உண்மைதான் அறிவித்தார் என்பதற்கு வலுவான சான்று இருந்தால் அது “ மக்பூல் “ ( ஏற்கத் தக்கது ) எனப்படும்.


இது இரு வகைப்படும்


அ. ஸஹீஹ் 


ஆ. ஹஸன்


இவை ஒவ்வொன்றும் சுயமானது ( லி தாத்திஹி ) புறக் காரணங்களால் ஆனது ( லி ஃகைரிஹி ) எனப் பிரியும் ஆக மொத்தம் “ மக்பூல் “ என்பது நான்கு வகைகளாகும்.


அ) ஸஹீஹ் லி தாத்திஹி ( சுயமாக ஆதாரபூர்வமானது )


இது ஜந்து அம்சங்கள் கொண்ட ஹதீஸே ஸஹீஹ் லி தாத்திஹி எனப்படும்.


1.   1. முறிவுறாத அறிவிப்பாளர் தொடர் ( அதாவத் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள ஒவ்வோர் அறிவிப்பாளரும் தமக்கு முன்னுள்ள அறிவிப்பாளரிடம் நேரடியாக ஹதீஸை கேட்டிருக்க வேண்டும்.


2.   2.அறிவிப்பாளரின் நாணயம் ( அதாவது ஒவ்வோர் அறிவிப்பாளரும் முஸ்லிமாக , பருவம் அடைந்தவராக , புத்தி சுவாதீனம் உள்ளவராக இருப்பதுடன் பாவம் செய்பவராகவோ ( பெரும் பாவம் ) ஒழுக்கம் தவறி நடந்துகொள்பவராகவோ இருக்கலாகாது.


3.   3.நினைவாற்றல் ( ஒவ்வோர் அறிவிப்பாளரும் மனனபூர்வமாகவோ எழுத்துபூர்வமாகவோ நிறைவான நினைவாற்றல் மிக்கவராக இருக்க வேண்டும்.


4.   4.ஹதீஸ் அசாதாரணமானதாக இருக்கலாகாது ( அதாவது மிகவும் வலுவானதோர் அறிவிப்பாளரின் அறிவிப்புக்கு மாற்றமானதாக அவரைவிட வலுக் குறைந்த அறிவிப்பாளரின் அறிவிப்பு இருக்கலாகாது. )


5.   5.ஹதீஸில் குறைபாடு ஏதும் இருக்கலாகாது ( அதாவது ஹதீஸின் நம்பகத் தன்மையைக் கெடுக்கும் மறைமுகமான எந்தக் குறைபாடும் பொருள் சிதைவும் இருக்கலாகாது )


இந்த நிபந்தனைகளில் ஒன்றுக்கு ஊறு நேர்ந்தாலும் அந்த ஹதீஸை ஸஹீஹ் என்று கூற முடியாது 7
  
ஆ) ஸஹீஹ் லி ஃகைரிஹி ( புறக் காரணங்களால் ஆதாரபூர்வமானது )
 
முந்தைய வகையில் காணப்படும் நிபந்தனைகளில் ஒன்றில் சிறிது குறைபாடு இருக்கும் . இருந்தாலும் இதைவிட வலுவான வேறோர் அறிவிப்பாளர் தொடரும் அந்த ஹதீஸுக்கு இருக்கும் ( உ + த , நினைவாற்றல் குறைவான அறிவிப்பாளர் ஒருவர் அதில் இருக்கலாம் எனினும் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் அந்த ஹதீஸ் வந்திருக்கும் .)

எனவே சுயமாக அதை ஆதாரபூர்வமானது என்று சொல்ல  முடியாவிட்டாலும் புறக் காரணத்தால் அது ஆதாரபூர்வமானதாக அமையும்8




---------------------------------------------------------




7 ஸஹீஹான ஹதீஸுக்கு எடுத்துகாட்டாக புஹாரியில் இடம்பெற்ற 765 ஹதீஸை கூறலாம் இதில் நபி ஸல் அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் “ வத்தூர் “ எனும் ( 52 ஆவது ) அத்தியாயத்தை ஓதினார்கள் என ஜுபைர் பின் முத் இம் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் அதன் ஸனத் பின்வரும் மாறு 






8 என் சமுதாயத்தாருக்குச் சிரம்ம் ஏற்படும் என்று நான் அஞ்சியிருக்காவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு அவர்களுக்கு நான் கட்டளையிடிருப்பேன் ( திர்மிதீ 22 ) என்ற ஹதீஸை இதற்கு உதாரணமாக கூறலாம் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா உண்மையிலும் நேர்மையிலும் பிரபலமானவர்தான் இருந்தாலும் நினைவாற்றல் குறைந்தவர் ஆவார் அதே நேரத்தில் இந்த ஹதீஸ் வேறு அறிப்பாளர் தொடரில் வந்திருப்பதால் ஆதாரபூர்வமானது என ஏற்கப்பட்டுள்ளது.


 

No comments:

Post a Comment