Sunday, June 11, 2017

மார்க்க விளக்க கேள்வி-பதில்( 54 முதல் 57 வரை )




                                                   📚மார்க்க விளக்க கேள்வி-பதில்


54.🔍கேள்வி: யூனுஸ் நபியின் தந்தைப் பெயர் என்ன?

பதில்மத்தா

📒ஆதாரம்:  புஹாரி 7539

55.🔍கேள்வி: முதலாவதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் மஸ்ஜிதுல் ஹராமிற்கும் இரண்டாவதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் பைத்துல் முகத்தஸ்ஸிற்கும் உள்ள இடைவேளை எவ்வளவு காலம்?

பதில்:  நாற்பது ஆண்டுகள்

📒ஆதாரம்:  புஹாரி 3366

56.🔍கேள்வி: அஹ்ஸாப் போரின் போது நாற்புறமும் பல்லாயிரக்கணக்கான எதிரிகளால் சுழப்பட்டிருந்த முஸ்லிம்களை எவ்வாறு காப்பாற்றியதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் ?

பதில்: நம்பிக்கை கொண்டோரே! உங்களிடம் கூட்டுப் படையினர் வந்த போது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்! அவர்களுக்கு எதிராகக் காற்றையும், நீங்கள் காணாத படையினரையும் அனுப்பினோம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவனாக488 இருக்கிறான்.

📒ஆதாரம்:திருக்குர்ஆன்  33:9

57.🔍கேள்வி: தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இனிய குரல் இவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

பதில்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)

📒ஆதாரம்: புகாரி 5048 


No comments:

Post a Comment