Sunday, June 11, 2017

நபிமொழி இயல் கலை






 நபிமொழி இயல் கலை




ஒவ்வொரு நபிமொழியையும் ‘ மத்தன் ‘ என்றும் ‘ சனத் ‘ என்றும் இரு கூறுகளாகப் பிரிக்கலாம் . நபி ஸல் அவர்களின் சொல் , செயல் , அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய செய்திக்கு ‘ மத்தன் ‘ என்றும் அந்த செய்தி நபி ஸல் அவர்களிடமிருந்து தொகுப்பாசிரியர் வரை வந்து சேர்ந்த அறிவிப்பாளர் வரிசைக்கு ‘ சனத்’ என்றும் கூறுவர்.





இருவகைப் பங்கீடு

 நபிமொழி சார்ந்த செய்திகளை இரண்டு முறைகளில் பிரிக்கலாம்.
  1.   செய்தியை அறிவித்த செய்தியாளரின் ( ராவீ ) எண்ணிக்கையைப் பொறுத்தது
   2.   செய்தி மற்றும் செய்தியாளரின் தகுதியைப் பொறுத்தது

முதல் வகைப் பங்கீடு 

செய்தி நம்வரை சேர்ந்த வழிமுறையை – அதாவது செய்தியாளரின் ( ராவீ ) எண்ணிக்கையைப் பொறுத்து செய்தி இரு வகைப்படும்

முத்தவாத்திர்

கணிசமானோர் அறிவித்த ஹதீஸ் ஒரு நபிமொழியை அல்லது செய்தியை ஒவ்வொரு காலகட்டத்திலும் கணிசமான எண்ணிக்கையினர் அறிவித்திருப்பர் அவர்கள் எல்லாரும் சேர்ந்து பொய் சொல்லியிருப்பர் என்று கருத முடியாது.

இது இரு வகைப்படும் . 

1.   சொல் சார்ந்தது ( அதாவது ஒரு நபிமொழியின் சொல்லும் பொருளும் கணிசமானோரால் அறிவிக்கப்படிருக்கும் 1)

2.   பொருள் சார்ந்தது அதாவது ஒரு நபிமொழியின் சொல் வேறுபட்டாலும் அதன் பொருளைக் கணிசமானோர் அறிவித்திருப்பர் 2

ஆஹாத்

சிலர் அறிவித்த ஹதீஸ் முத்தவாத்திரின் நிலையை எட்டாத வகையில் ஒரு சிலர் மட்டுமே அறிவித்துள்ள ஹதீஸ்

இது மூன்று வகைப்படும் 

1.   மஷ்ஹூர் ( பிரபலமானது , ஒவ்வொரு கால கட்டத்திலும் இரண்டுக்கும் மேற்பட்டோர் அறிவித்துள்ள ஹதீஸ் 3

2.   அஸீஸ் ( அரிதானது ) ஒவ்வொரு காலகட்டத்திலும் இருவரால் அறிவிக்கபட்ட ஹதீஸ் 4

3.   ஃகரீப் ( தனியானது ) ஒவ்வொரு கட்டத்திலும் அல்லது ஓரிரு கட்டங்களில் ஒரேயொருவரால் அறிவிக்கபட்ட ஹதீஸ்5

அடுத்து இந்த மூன்று வகைகளில் ஒவ்வொன்றும் ஏற்கத் தக்கது ( மக்பூல் ) ஏற்கத் தகாத்து ( மர்தூத் ) என இருவகைகளாகப் பிரியும் இதன்படி ‘ ஆஹாத் ‘ மொத்தம் ஆறு வகைப்படும்6.

---------------------------------------------------


1.என்னைப் பற்றி யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை  நரகத்தில் அமைத்துகொள்ளட்டும் என்ற நபிமொழியை இதற்கு உதாரணமாக்க் குறிப்பிடலாம் ( இதை 70க்கு மேற்பட்ட நபித்தோழர்கள் ஒரே மாதிரி அறிவித்துள்ளனர் )


2. பிரார்த்தனையின் போது நபி ஸல் அவர்கள் கைகளை உயர்த்தியது பற்றிய ஹதீஸை இதற்கு எடுத்துகாட்டாக்க் குறிப்பிடலாம் ( இது சுமார் 100 ஹதீஸ்களில் வந்துள்ளது ஆனால் அவை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடந்த நிகழ்வுகளாகும்

3. அல்லாஹ் மக்களிடமிருந்து கல்வியை ஒரேடியாகப் பறித்துகொள்ளமாட்டான் எனும் ஹதீஸ் இதற்கு உதாரணமாக சொல்லலாம்( பார்க்க புஹாரி 100,7307 முஸ்லிம் 5191 ,5192 )

4. உங்களில் ஒருவருக்கு அவருடைய பெற்றோர் குழந்தைகள் மற்ற மக்கள் அனைவரையும் விட நான் அதிகம் நேசத்துகுரியவனாக ஆகாத வரை அவர் இறை நம்பிக்கையாளர் ஆகமாட்டார் என்ற ஹதீஸ் இதற்கு உ+த கூறலாம் ( பார்க்க புஹாரி 15 முஸ்லிம் 70 )

5. செயல்களெல்லாம் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன என்ற ஹதீஸ் உ+த கூறலாம் ( பார்க்க புஹாரி 1,54,2529,3898,5070,6689,6953 முஸ்லிம் 3868 ) நபித்தோழர்களில் உமர் அவர்கள் மட்டுமே இதை அறிவிக்கிறார்கள்

6. 1.மஷ்ஹூர் மக்பூல், 2 மஷ்ஹூர் மர்தூத் ,3. அஸீஸ் மக்பூல் , 4 . அஸீஸ் மர்தூத் ,5. ஃகரீப் மக்பூல் ,6. ஃகரீப் மர்தூத்

  
 

No comments:

Post a Comment