அத்தியாயம்: 2 ( பகுதி 03 )
كتاب الإيمان
ஈமான் எனும் இறைநம்பிக்கை
(21)باب كُفْرَانِ
الْعَشِيرِ وَكُفْرٍ دُونَ كُفْرٍ
பாடம் : 21
கணவனின் உதவிகளுக்கு
நன்றி செய்யாமையும்; (இறை) நிராகரிப்பு என்பது ஏற்றத் தாழ்வுடையது என்பதும்.
فِيهِ عَنْ أَبِي
سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
இது குறித்து அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.
حَدَّثَنَا عَبْدُ
اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ
بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
" أُرِيتُ النَّارَ فَإِذَا أَكْثَرُ أَهْلِهَا النِّسَاءُ يَكْفُرْنَ
". قِيلَ أَيَكْفُرْنَ بِاللَّهِ قَالَ " يَكْفُرْنَ الْعَشِيرَ،
وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ ثُمَّ
رَأَتْ مِنْكَ شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ ".
29. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (நான் சூரிய கிரகணத்
தொழுகையில் இருந்தபோது) எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் அதிகம்பேர் நிராகரிக்கும்
பெண்களாகவே இருந்தனர் என்று கூறினார்கள். அப்போது இறைவனையா அவர்கள் நிராகரித்தார்கள்? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், கணவனை நிராகரிக்கிறார்கள்; (அதாவது அவன் செய்த) உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம்
முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் அவள் கண்டு விட்டாளானால் உன்னிடமிருந்து
ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை என்று பேசிவிடுவாள் என்றார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(22)باب
الْمَعَاصِي مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ
பாடம் : 22
பாவங்கள் (இஸ்லாத்திற்கு
முந்தைய) அறியாமைக் காலத்துச் செயல்களாகும்.
وَلاَ يُكَفَّرُ
صَاحِبُهَا بِارْتِكَابِهَا إِلاَّ بِالشِّرْكِ لِقَوْلِ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ». وَقَوْلِ
اللَّهِ تَعَالَى: {إِنَّ اللَّهَ لاَ يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا
دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ}.
அல்லாஹ்வுக்கு இணைவைப்பதைத் தவிர, மற்ற பாவங்களைச் செய்தால் ஒருவரை இறைமறுப்பாளர் (காஃபிர்) என்று
சொல்லி விடமுடியாது.
ஏனெனில், அபூதர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அறியாமைக் காலத்து
மூடப்பழக்கங்கள் குடிகொண்டிருக்கும் ஒரு மனிதர் நீங்கள் என்று சொன்னார்கள்.
மேலும் உயந்தோன் அல்லாஹ் தனக்கு இணை
கற்பிக்கப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அதைத் தவிர ஏனையவற்றை அவன்
நாடியவர்களுக்கு மன்னித்து விடுகின்றான் (4:48) என்று கூறுகின்றான்.
حَدَّثَنَا
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاصِلٍ الأَحْدَبِ،
عَنِ الْمَعْرُورِ، قَالَ لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ، وَعَلَيْهِ حُلَّةٌ،
وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ إِنِّي سَابَبْتُ
رَجُلاً، فَعَيَّرْتُهُ بِأُمِّهِ، فَقَالَ لِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم "
يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ،
إِخْوَانُكُمْ خَوَلُكُمْ، جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ
أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا
يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ
فَأَعِينُوهُمْ ".
30. மஉரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு
மூன்று மைல் தொலைவிலுள்ள) ரபதா எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர்மீது (பழையதும்
புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக்
கண்டேன். நான் (அடிமையும் எசமானரும் ஒரேபோல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக)
அதைப்பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:
நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில்
அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசிவிட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் அபூதர்!
அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்!
அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ்தான் அவர்களை
உங்கள் அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர்
தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத்
தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி
(அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்)
அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள் என்று கூறினார்கள்.
23)بَابُ: {وَإِنْ
طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا}
فَسَمَّاهُمُ الْمُؤْمِنِينَ
பாடம் : 23
முஃமின்களில் இரு சாரார்
தமக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவ்விருவருக்கும் இடையே சமரசம் செய்து வையுங்கள் எனும்
(49:9ஆவது) இறைவசனம்.
அப்படிச் சண்டையிட்டுக்
கொள்ளக் கூடியவர்களையும் அல்லாஹ் (இந்த வசனத்தில்) முஃமின்கள் (இறை நம்பிக்கையாளர்கள்)
என்றே குறிப்பிட்டிருக்கின்றான்.
حَدَّثَنَا عَبْدُ
الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا
أَيُّوبُ، وَيُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ
ذَهَبْتُ لأَنْصُرَ هَذَا الرَّجُلَ، فَلَقِيَنِي أَبُو بَكْرَةَ فَقَالَ أَيْنَ
تُرِيدُ قُلْتُ أَنْصُرُ هَذَا الرَّجُلَ. قَالَ ارْجِعْ فَإِنِّي سَمِعْتُ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا الْتَقَى
الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ ".
فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْقَاتِلُ فَمَا بَالُ الْمَقْتُولِ قَالَ
" إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ ".
31. அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஜமல் போரின் போது) இந்த மனிதருக்கு
(அலீ (ரலி) அவர்களுக்கு) உதவிசெய்வதற்காகப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா
(ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து எங்கே செல்கிறீர்? எனக் கேட்டார். நான் இந்த மனிதருக்கு உதவிசெய்திடச் செல்கிறேன் என்றேன். அதற்கு
அபூபக்ரா (ரலி) அவர்கள் நீர் திரும்பிச் சென்றுவிடும்; ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு முஸ்லிம்கள்
தமது வாட்களால் சண்டையிட்டுக் கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள் என்று
கூறுவதைக் கேட்டேன். உடனே நான் அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர்
ஏன் நரகம் செல்ல வேண்டும்)? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் அவர் தம் சகாவைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார் என்று
சொன்னார்கள் என்றார்கள்.
(24)باب
ظُلْمٌ دُونَ ظُلْمٍ
பாடம் : 24
அநீதிகளில் ஏற்றத்தாழ்வு
உண்டு.
حَدَّثَنَا أَبُو
الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، ح. قَالَ وَحَدَّثَنِي بِشْرٌ، قَالَ
حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ
عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا نَزَلَتِ {الَّذِينَ آمَنُوا
وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى
الله عليه وسلم أَيُّنَا لَمْ يَظْلِمْ فَأَنْزَلَ اللَّهُ {إِنَّ الشِّرْكَ
لَظُلْمٌ عَظِيمٌ}.
32. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
எவர் நம்பிக்கை (ஈமான்) கொண்டு பிறகு
தம் நம்பிக்கையில் அநீதியைக் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கு மட்டுமே அபயம் உண்டு. மேலும்
அவர்களே நேர்வழி பெற்றவர்களாவர் எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்கள்
எங்களில் (தமக்குத்தாமே) அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர்தாம் இருக்கிறார்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ், இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும் எனும் (31:13ஆவது) வசனத்தை அருளினான்.
(25)باب
عَلاَمَةِ الْمُنَافِقِ
பாடம் : 25
நயவஞ்சகனின் அடையாளங்கள்.
حَدَّثَنَا
سُلَيْمَانُ أَبُو الرَّبِيعِ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ،
قَالَ حَدَّثَنَا نَافِعُ بْنُ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ أَبُو سُهَيْلٍ، عَنْ
أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "
آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ،
وَإِذَا اؤْتُمِنَ خَانَ ".
33. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்.
அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ،
عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ
اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ
كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى
يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ وَإِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ،
وَإِذَا خَاصَمَ فَجَرَ ". تَابَعَهُ
شُعْبَةُ عَنِ الأَعْمَشِ.حَدَّثَنَا
قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو،
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ
كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ
فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ وَإِذَا
حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ ".
تَابَعَهُ شُعْبَةُ عَنِ الأَعْمَشِ.
34. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு குணங்கள் எவனிடம்
குடிகொண்டுள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு
குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம்
குடியிருக்கும். (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வதும், பேசும்போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்து கொண்டால் நம்பிக்கை
மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும்தான் அவை
(நான்கும்).
இதை அப்துல்லாஹ் பின்
அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(26)باب قِيَامُ
لَيْلَةِ الْقَدْرِ مِنَ الإِيمَانِ
பாடம்
: 26
லைலத்துல்
கத்ர் கண்ணியமிக்க இரவில் நின்றுவணங்குவது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا
شُعَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي
هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ يَقُمْ
لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ
ذَنْبِهِ ".
35. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கை கொண்டவராகவும்
நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் இரவில் நின்றுவணங்குகிறாரோ அவரது முந்தைய
பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(27)باب
الْجِهَادُ مِنَ الإِيمَانِ
பாடம்
: 27
அறப்போர்
புரிவதும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا
عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا عُمَارَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو زُرْعَةَ
بْنُ عَمْرِو بْنِ جَرِيرٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى
الله عليه وسلم قَالَ " انْتَدَبَ اللَّهُ لِمَنْ خَرَجَ فِي سَبِيلِهِ
لاَ يُخْرِجُهُ إِلاَّ إِيمَانٌ بِي وَتَصْدِيقٌ بِرُسُلِي أَنْ أُرْجِعَهُ بِمَا
نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ، أَوْ أُدْخِلَهُ الْجَنَّةَ، وَلَوْلاَ أَنْ
أَشُقَّ عَلَى أُمَّتِي مَا قَعَدْتُ خَلْفَ سَرِيَّةٍ، وَلَوَدِدْتُ أَنِّي
أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا، ثُمَّ
أُقْتَلُ ".
36. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவன் மீதும் இறைத்தூதர்கள்
மீதும் கொண்ட நம்பிக்கையானது, (இறைவழியில் அறப்போர் புரிய) ஒருவரை
புறப்படச் செய்ய, எவர் இறைவழியில் (அறப்போர் புரிய) புறப்பட்டுச்
செல்கின்றாரோ அவரை நன்மையைப் பெற்றவராகவோ போர் ஆதாயங்களைப் பெற்றவராகவோ திரும்பக் கொண்டு
சேர்க்க அல்லாஹ் முன்வந்து விட்டான். அல்லது அவரைச் சொர்க்கத்தில் நுழைவிக்க அல்லாஹ்
முன்வந்து விட்டான்.
என் சமுதாயத்திற்கு
சிரமம் ஏற்பட்டுவிடும் எனும் அச்சம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் (நான்) அனுப்பும்
எந்தப் படைப்பிரிவிற்குப் பின்னரும் (அதில் கலந்து கொள்ளாமல்) நான் அமர்ந்திருக்க மாட்டேன்.
நிச்சயமாக நான் இறைவழியில் (போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் (இறைவழியில்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, மீண்டும் (அவ்வழியில்) கொல்லப்பட (இவ்வாறே
மீண்டும் மீண்டும் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்ய) வேண்டும் என்று விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(28)باب تَطَوُّعُ
قِيَامِ رَمَضَانَ مِنَ الإِيمَانِ
பாடம்
: 28
ரமளான்
மாதத்தில் கூடுதல் தொழுகைகளை நின்றுவணங்குவதும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ،
عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي
هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ
قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
".
37. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கை கொண்டவராகவும்
நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய
பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி)
அறிவிக்கிறார்கள்.
(29)باب صَوْمُ رَمَضَانَ احْتِسَابًا مِنَ الإِيمَانِ
பாடம்
: 29
நன்மையை
எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது இறை நம்பிக்கையின் ஓரம்சமாகும்.
حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ
بْنُ فُضَيْلٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ
أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "
مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ
ذَنْبِهِ ".
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
38. எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய
பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
30)باب الدِّينُ يُسْرٌ
பாடம்
: 30
இந்த
(இஸ்லாமிய) மார்க்கம் எளிதானது.
وَقَوْلُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَحَبُّ الدِّينِ إِلَى اللَّهِ الْحَنِيفِيَّةُ السَّمْحَةُ».
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அசத்தியத்தை விட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கின்ற இலகுவான (இஸ்லாமிய) மார்க்கமே
அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான மார்க்கமாகும்.
حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ مُطَهَّرٍ، قَالَ
حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ مَعْنِ بْنِ مُحَمَّدٍ الْغِفَارِيِّ، عَنْ
سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ
النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الدِّينَ يُسْرٌ، وَلَنْ
يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلاَّ غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا،
وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَىْءٍ مِنَ الدُّلْجَةِ ".
39. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த மார்க்கம் எளிதானது.
இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே,
(கூடுதலான வணக்கங்கள் உட்பட அனைத்துக்
காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும்
நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக்
கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment