Tuesday, July 18, 2017

அத்தியாயம் : 3 கல்வியின் சிறப்பு ஹதீஸ்கள் 68 முதல் 79 வரை




                                            அத்தியாயம் : 3 ( பகுதி 02 )

                                                         كتاب العلم  

                                                கல்வியின் சிறப்பு




(11)باب مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَخَوَّلُهُمْ بِالْمَوْعِظَةِ وَالْعِلْمِ كَىْ لاَ يَنْفِرُوا
பாடம் : 11

மக்கள் சலிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) பக்குவமாகப் போதனை செய்ததும் கல்வி புகட்டியதும்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَخَوَّلُنَا بِالْمَوْعِظَةِ فِي الأَيَّامِ، كَرَاهَةَ السَّآمَةِ عَلَيْنَا‏.‏

68. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களுக்குச் சலிப்பேற்பட்டுவிடக் கூடும் என்று அஞ்சிப் பல்வேறு நாட்களிலும் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَبَشِّرُوا وَلاَ تُنَفِّرُوا ‏"‏‏.‏

69. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) சொல்லுங்கள், வெறுப்பேற்றிடாதீர்கள்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(12)باب مَنْ جَعَلَ لأَهْلِ الْعِلْمِ أَيَّامًا مَعْلُومَةً
பாடம் : 12

அறிவுரை வழங்குவதற்காகக் கற்றவர்களுக்கென்று சில குறிப்பிட்ட நாட்களை ஒதுக்குவது.

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ يُذَكِّرُ النَّاسَ فِي كُلِّ خَمِيسٍ، فَقَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ لَوَدِدْتُ أَنَّكَ ذَكَّرْتَنَا كُلَّ يَوْمٍ‏.‏ قَالَ أَمَا إِنَّهُ يَمْنَعُنِي مِنْ ذَلِكَ أَنِّي أَكْرَهُ أَنْ أُمِلَّكُمْ، وَإِنِّي أَتَخَوَّلُكُمْ بِالْمَوْعِظَةِ كَمَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَخَوَّلُنَا بِهَا، مَخَافَةَ السَّآمَةِ عَلَيْنَا‏.‏

70. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். (ஒரு நாள்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அபூ அப்திர்ரஹ்மான்! தாங்கள் தினமும் எங்களுக்கு அறிவுரைகூற வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன் என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் உங்களைச் சலிப்படையச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுவது தான் இதைச் செய்யவிடாமல் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள் என்றார்கள்.

(13)باب مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ
பாடம் : 13

அல்லாஹ் யாருக்கு (மிகப்பெரும்) நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான்.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ سَمِعْتُ مُعَاوِيَةَ، خَطِيبًا يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهُ يُعْطِي، وَلَنْ تَزَالَ هَذِهِ الأُمَّةُ قَائِمَةً عَلَى أَمْرِ اللَّهِ لاَ يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ ‏"‏‏.‏

71. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகின்றான். நான் விநியோகிப்பவன்தான். அல்லாஹ்வே வழங்குகிறான். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது.

இதை முஆவியா (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

(14)باب الْفَهْمِ فِي الْعِلْمِ
பாடம் : 14

கல்வியில் சமயோஜிதம்.


حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قَالَ لِي ابْنُ أَبِي نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ، قَالَ صَحِبْتُ ابْنَ عُمَرَ إِلَى الْمَدِينَةِ فَلَمْ أَسْمَعْهُ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ حَدِيثًا وَاحِدًا، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأُتِيَ بِجُمَّارٍ فَقَالَ ‏"‏ إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً مَثَلُهَا كَمَثَلِ الْمُسْلِمِ ‏"‏‏.‏ فَأَرَدْتُ أَنْ أَقُولَ هِيَ النَّخْلَةُ، فَإِذَا أَنَا أَصْغَرُ الْقَوْمِ فَسَكَتُّ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ هِيَ النَّخْلَةُ ‏"‏‏.
72. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் மதீனா வரை சென்றேன். (அப்பயணத்தில்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது எந்த ஹதீஸையும் அறிவித்ததை நான் கேட்கவில்லை. ஆனால், ஒரேயொரு ஹதீஸைத் தவிர! (அந்த ஹதீஸ் வருமாறு:)

(ஒரு சமயம்) நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்களிடம் பேரீச்சமரக் குருத்தொன்று கொண்டு வரப்பட்டது. அதைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் மரங்களில் ஒருவகை மரமுள்ளது; அது முஸ்லிமுக்கு உவமானமாகும் (அது என்ன மரம்?) என்று கேட்டார்கள். அது பேரீச்சமரம்தான் என்று நான் சொல்ல நினைத்தேன். ஆனால், அப்போது நான் அங்கிருந்தவர்களிலெல்லாம் வயதில் சிறியவனாயிருந்தேன். (மூத்தவர்கள் மௌனமாயிருக்க நான் கூறுவதா என்று எண்ணி) மௌனமாயிருந்து விட்டேன். அப்போது நபி(ஸல்) அது பேரீச்சமரம்! என்று கூறினார்கள்.

(15)باب الاِغْتِبَاطِ فِي الْعِلْمِ وَالْحِكْمَةِ وَقَالَ عُمَرُ تَفَقَّهُوا قَبْلَ أَنْ تُسَوَّدُوا
பாடம் : 15

கல்வியிலும் ஞானத்திலும் தாமும் பிறர் போல் சிறந்து விளங்க வேண்டுமென்று ஆர்வம் காட்டுவது.

وَقَالَ عُمَرُ تَفَقَّهُوا قَبْلَ أَنْ تُسَوَّدُوا.

உமர் (ரலி) அவர்கள், நீங்கள் தலைவர்களாவதற்கு முன்னர் இஸ்லாமியச் சட்ட ஞானங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்! என்று கூறினார்கள்.

حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَلَى غَيْرِ مَا حَدَّثَنَاهُ الزُّهْرِيُّ، قَالَ سَمِعْتُ قَيْسَ بْنَ أَبِي حَازِمٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الْحِكْمَةَ، فَهْوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا ‏"‏‏.

73. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக்கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்லவழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(16)باب مَا ذُكِرَ فِي ذَهَابِ مُوسَى صلى الله عليه وسلم فِي الْبَحْرِ إِلَى الْخَضِرِ
பாடம் : 16

ஹிழ்ர் (அலை) அவர்களைத் தேடி மூஸா (அலை) அவர்கள் கடலில் சென்றது தொடர்பாகக் கூறப்பட்டவை.

وَقَوْلِهِ تَعَالَى: {هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رُشْدًا}.

உங்களுக்கு கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தர நான் உங்களைப் பின்தொடர்ந்து வரலாமா? (18:66) என்று (ஹிழ்ர் (அலை) அவர்களிடம் மூஸா(அலை) அவர்கள் கேட்டதாக) அல்லாஹ் கூறுகின்றான்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ غُرَيْرٍ الزُّهْرِيُّ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَ أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ أَخْبَرَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ تَمَارَى هُوَ وَالْحُرُّ بْنُ قَيْسِ بْنِ حِصْنٍ الْفَزَارِيُّ فِي صَاحِبِ مُوسَى قَالَ ابْنُ عَبَّاسٍ هُوَ خَضِرٌ‏.‏ فَمَرَّ بِهِمَا أُبَىُّ بْنُ كَعْبٍ، فَدَعَاهُ ابْنُ عَبَّاسٍ فَقَالَ إِنِّي تَمَارَيْتُ أَنَا وَصَاحِبِي، هَذَا فِي صَاحِبِ مُوسَى الَّذِي سَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، هَلْ سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَذْكُرُ شَأْنَهُ قَالَ نَعَمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ بَيْنَمَا مُوسَى فِي مَلإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، جَاءَهُ رَجُلٌ فَقَالَ هَلْ تَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنْكَ قَالَ مُوسَى لاَ‏.‏ فَأَوْحَى اللَّهُ إِلَى مُوسَى بَلَى، عَبْدُنَا خَضِرٌ، فَسَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَيْهِ، فَجَعَلَ اللَّهُ لَهُ الْحُوتَ آيَةً، وَقِيلَ لَهُ إِذَا فَقَدْتَ الْحُوتَ فَارْجِعْ، فَإِنَّكَ سَتَلْقَاهُ، وَكَانَ يَتَّبِعُ أَثَرَ الْحُوتِ فِي الْبَحْرِ، فَقَالَ لِمُوسَى فَتَاهُ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ، وَمَا أَنْسَانِيهِ إِلاَّ الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ‏.‏ قَالَ ذَلِكَ مَا كُنَّا نَبْغِي، فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، فَوَجَدَا خَضِرًا‏.‏ فَكَانَ مِنْ شَأْنِهِمَا الَّذِي قَصَّ اللَّهُ ـ عَزَّ وَجَلَّ ـ فِي كِتَابِهِ ‏"‏‏.‏


74. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல்ஃபஸாரீ (ரலி) அவர்களுடன் (மூஸா (அலை) அவர்கள் ஓர் அடியாரைத் தேடிச் சென்றதாக அல்லாஹ் கூறும்) மூஸா அவர்களுடனிருந்த அடியார் யார்? எனும் விஷயத்தில் விவாதித்துக் கொண்டனர். அவர் ஹிழ்ர் (அலை) அவர்கள்தாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்கள் வேறொரு மனிதரைக் குறிப்பிட்டார்கள்.) அப்போது அவர்கள் இருவரையும் கடந்து உபை பின் கஅப் (ரலி) அவர்கள் சென்றார்கள். அவரை இப்னு அப்பாஸ் (ரலி) அழைத்து, நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூஸா (அலை) அவர்கள் தாம் சந்திக்கவிருப்பவரிடம் செல்லவேண்டிய பாதையை கேட்டார்களோ அந்தத் தோழர் விஷயத்தில் (அவர் யார்? என்று) விவாதித்துக் கொண்டோம். நபி (ஸல்) அவர்கள் அது விஷயமாக எதுவும் கூறக் கேட்டிருக்கிறீர்களா? என்று கேட்டார்கள்! அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் ஆம் என்று கூறிவிட்டுத் தொடர்ந்து கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் குலத்தாரின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒரு மனிதர் வந்து மூஸா (அலை) அவர்களிடம், உங்களைவிட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். அதற்கு மூஸா (அலை) அவர்கள் (அப்படி எவரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை என்றார்கள். அப்போது அல்லாஹ் அப்படியல்ல; நம் அடியார் ஹிழ்ர் உங்களைவிட அறிந்தவராயிரக்கிறார் என்று கூறினான். உடனே மூஸா (அலை) அவர்கள் அவரைச் சந்திக்கும் வழி என்னவென்று (இறைவனிடம்) கேட்டார்கள். அப்போது (ஹிழ்ர் அவர்களைச் சந்திக்கும் முனை வந்துவிட்டது என்பதை) மூஸா (அலை) அவர்கள் புரிந்துகொள்ள அல்லாஹ் (மீனை அவர்களுக்கொரு அடையாளமாக ஏற்படுத்தி,) அவர்களிடம் இந்த மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பிவிட வேண்டும்! அப்போது அவரை (அங்கு) நீர் சந்திப்பீர் என்று சொல்லப்பட்டது. (அதன்படி) அவர்கள் (தம்முடன் கொண்டு வந்த) மீன் கடலில் தொலைந்து போவதை எதிர்பார்த்தவர்களாகத் தமது பயணத்தைத் தொடர்ந்தார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களுடன் வந்த உதவியாளர் நாம் ஒரு பாறை ஓரமாக ஒதுங்கி ஓய்வெடுத்தபோது அந்த இடத்தில் மீனை நான் மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதைக் கூறவிடாமல் என்னை ஷைத்தான் தான் மறக்கடித்துவிட்டான் என்று கூறினார். மூஸா (அலை) அவர்கள், (அது நம்மைவிட்டு நழுவிச் செல்லும்) அந்த சந்தர்ப்பத்தைத் தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்று சொன்னார்கள். பிறகு இருவரும் தம் சுவடுகளின் வழியே பேசிக் கொண்டே திரும்பி வந்தார்கள். அங்கே ஹிழ்ர் (அலை) அவர்களைக் கண்டார்கள். பிறகு வல்லோன் அல்லாஹ் தனது வேதத்தில் எடுத்துரைத்துள்ள நிகழ்ச்சிகள் நடைபெற்றன

(17)باب قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏"‏ اللَّهُمَّ عَلِّمْهُ الْكِتَابَ ‏"‏
பாடம் : 17

இறைவா! இவருக்கு உன் வேதத்தைக் கற்றுத் தருவாயாக என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ضَمَّنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ ‏ "‏ اللَّهُمَّ عَلِّمْهُ الْكِتَابَ ‏"‏‏.‏


75. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை(த் தம் நெஞ்சோடு) அணைத்து இறைவா! இவருக்கு உன் வேத (ஞான)த்தைக் கற்றுத் தருவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

(18)باب مَتَى يَصِحُّ سَمَاعُ الصَّغِيرِ
பாடம் : 18

சிறுவர்கள் எந்த வயதில் செவியேற்ற செய்தி அங்கீகாரம் பெறும்?

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ، وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الاِحْتِلاَمَ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، فَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكَرْ ذَلِكَ عَلَىَّ‏.‏


76. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(விடைபெறும் ஹஜ்ஜின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் சுவர் (போன்ற தடுப்பு) எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்த வெளியில் மக்களுக்குத்) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி அவர்களை நோக்கிச் சென்றேன். அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். (தொழுது கொண்டிருந்தவர்களின்) வரிசையில் ஒரு பகுதியை நான் கடந்துசென்று கழுதையை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினூடே கடந்து சென்று (ஒரு வரிசையில்) நானும் நின்றுகொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை வரிசையை கடந்துசென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்கவில்லை.

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، قَالَ عَقَلْتُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم مَجَّةً مَجَّهَا فِي وَجْهِي وَأَنَا ابْنُ خَمْسِ سِنِينَ مِنْ دَلْوٍ‏.‏


77. மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஐந்து வயது சிறுவனாக இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் (கிணற்றிலிருந்து சேந்திய) ஒரு வாளியிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தமது வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை 
நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்.


(19)باب الْخُرُوجِ فِي طَلَبِ الْعِلْمِ


பாடம் : 19

கல்வியைத் தேடிப் புறப்படுவது.

وَرَحَلَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ مَسِيرَةَ شَهْرٍ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ فِي حَدِيثٍ وَاحِدٍ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரே ஒரு நபிமொழியைத் தெரிவதற்காக அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி ஒருமாதத் தொலை தூரத்திற்கு (ஷாம் நாட்டுக்கு) பயணமாகிச் சென்றார்கள்.

حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ، خَالِدُ بْنُ خَلِيٍّ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، قَالَ قَالَ الأَوْزَاعِيُّ أَخْبَرَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ تَمَارَى هُوَ وَالْحُرُّ بْنُ قَيْسِ بْنِ حِصْنٍ الْفَزَارِيُّ فِي صَاحِبِ مُوسَى، فَمَرَّ بِهِمَا أُبَىُّ بْنُ كَعْبٍ، فَدَعَاهُ ابْنُ عَبَّاسٍ فَقَالَ إِنِّي تَمَارَيْتُ أَنَا وَصَاحِبِي هَذَا فِي صَاحِبِ مُوسَى الَّذِي سَأَلَ السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَذْكُرُ شَأْنَهُ فَقَالَ أُبَىٌّ نَعَمْ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَذْكُرُ شَأْنَهُ يَقُولُ ‏ "‏ بَيْنَمَا مُوسَى فِي مَلإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ أَتَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنْكَ قَالَ مُوسَى لاَ‏.‏ فَأَوْحَى اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى مُوسَى بَلَى، عَبْدُنَا خَضِرٌ، فَسَأَلَ السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، فَجَعَلَ اللَّهُ لَهُ الْحُوتَ آيَةً، وَقِيلَ لَهُ إِذَا فَقَدْتَ الْحُوتَ فَارْجِعْ، فَإِنَّكَ سَتَلْقَاهُ، فَكَانَ مُوسَى صلى الله عليه وسلم يَتَّبِعُ أَثَرَ الْحُوتِ فِي الْبَحْرِ‏.‏ فَقَالَ فَتَى مُوسَى لِمُوسَى أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ، وَمَا أَنْسَانِيهِ إِلاَّ الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ‏.‏ قَالَ مُوسَى ذَلِكَ مَا كُنَّا نَبْغِي‏.‏ فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، فَوَجَدَا خَضِرًا، فَكَانَ مِنْ شَأْنِهِمَا مَا قَصَّ اللَّهُ فِي كِتَابِهِ ‏"‏‏.‏

78. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல்ஃபஸாரீ (ரலி) அவர்களுடன் மூஸா (அலை) அவர்கள் ஒரு அடியாரைத் தேடிச் சென்றதாக அல்லாஹ் கூறும் மூஸா அவர்களுடனிருந்த அடியார் யார்? எனும் விஷயத்தில் விவாதித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் இருவரையும் கடந்து உபை பின் கஅப் (ரலி) அவர்கள் சென்றார்கள். அவரை இப்னு அப்பாஸ் (ரலி) அழைத்து, நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூஸா (அலை) அவர்கள் தாம் சந்திக்கவிருப்பவரிடம் செல்லவேண்டிய பாதையை கேட்டார்களோ அந்தத் தோழர் விஷயத்தில் (அவர் யார்? என்று) விவாதித்துக் கொண்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றிக் கூறக் கேட்டிருக்கிறீர்களா? என்று கேட்டார்கள்! அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆம். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டுள்ளேன்:

பனூ இஸ்ராயீல் குலத்தாரின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒரு மனிதர் வந்து மூஸா (அலை) அவர்களிடம், உங்களைவிட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். மூஸா (அலை) அவர்கள் (அப்படி எவரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை என்றார்கள். அப்போது அல்லாஹ் அப்படியல்ல; நம் அடியார் ஹிழ்ர் (உங்களைவிட அறிந்தவராய்) இருக்கிறார் என்று கூறினான். உடனே மூஸா(அலை) அவர்கள் அவரைச் சந்திக்கும் வழி என்னவென்று (இறைவனிடம்) கேட்டார்கள். அப்போது (ஹிழ்ர் அவர்களைச் சந்திக்கும் முனை வந்துவிட்டது என்பதை) மூஸா (அலை) அவர்கள் புரிந்துகொள்ள அல்லாஹ் (மீனை அவர்களுக்கொரு அடையாளமாக ஏற்படுத்தி,) அவர்களிடம் இந்த மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பி விட வேண்டும்! அப்போது அவரை (அங்கு) நீர் சந்திப்பீர் என்று சொல்லப்பட்டது. (அதன்படி) அவர்கள் (தம்முடன் கொண்டு வந்த) மீன் கடலில் தொலைந்து போவதை எதிர்பார்த்தவர்களாகத் தமது பயணத்தைத் தொடர்ந்தார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களுடன் வந்த உதவியாளர் நாம் ஒரு பாறை ஓரமாக ஒதுங்கி ஓய்வெடுத்த போது அந்த இடத்தில் மீனை நான் மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதைக் கூறவிடாமல் என்னை ஷைத்தான்தான் மறக்கடித்து விட்டான் என்று கூறினார். மூஸா (அலை) அவர்கள், (அது நம்மைவிட்டு நழுவிச் செல்லும்) அந்த சந்தர்ப்பத்தைத் தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்று சொன்னார்கள். பிறகு இருவரும் தம் சுவடுகளின் வழியே பேசிக் கொண்டே திரும்பி வந்தார்கள். அங்கே ஹிழ்ர் (அலை) அவர்களைக் கண்டார்கள். பிறகு வல்லோன் அல்லாஹ் தனது வேதத்தில் எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன

(20)باب فَضْلِ مَنْ عَلِمَ وَعَلَّمَ
பாடம் : 20

கற்பவர் மற்றும் கற்பிப்பவரின் சிறப்பு.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَثَلُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ مِنَ الْهُدَى وَالْعِلْمِ كَمَثَلِ الْغَيْثِ الْكَثِيرِ أَصَابَ أَرْضًا، فَكَانَ مِنْهَا نَقِيَّةٌ قَبِلَتِ الْمَاءَ، فَأَنْبَتَتِ الْكَلأَ وَالْعُشْبَ الْكَثِيرَ، وَكَانَتْ مِنْهَا أَجَادِبُ أَمْسَكَتِ الْمَاءَ، فَنَفَعَ اللَّهُ بِهَا النَّاسَ، فَشَرِبُوا وَسَقَوْا وَزَرَعُوا، وَأَصَابَتْ مِنْهَا طَائِفَةً أُخْرَى، إِنَّمَا هِيَ قِيعَانٌ لاَ تُمْسِكُ مَاءً، وَلاَ تُنْبِتُ كَلأً، فَذَلِكَ مَثَلُ مَنْ فَقِهَ فِي دِينِ اللَّهِ وَنَفَعَهُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ، فَعَلِمَ وَعَلَّمَ، وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأْسًا، وَلَمْ يَقْبَلْ هُدَى اللَّهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ ‏"‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ إِسْحَاقُ وَكَانَ مِنْهَا طَائِفَةٌ قَيَّلَتِ الْمَاءَ‏.‏ قَاعٌ يَعْلُوهُ الْمَاءُ، وَالصَّفْصَفُ الْمُسْتَوِي مِنَ الأَرْضِ‏.‏


79. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் பசுமையான செடிகொடிகளையும் முளைவித்தன. மற்ற சில நிலங்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச்செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைவிக்கவுமில்லை.

இது தான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத்தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:

இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் அவற்றில் இன்னும் சில நிலங்களும் உள்ளன. அவை தண்ணீரை உறிஞ்சிக் கொள்கின்றன என்று இடம்பெற்றுள்ளது.


(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள கீஆன் என்பதன் பன்மை காஉ. என்பதாகும்.) காஉ என்பதற்கு தண்ணீர் தேங்காத பூமி என்று பொருள். ஸஃப் ஸஃப் என்பதற்கு சமநிலம் என்று பொருள்.

No comments:

Post a Comment