Wednesday, July 19, 2017

அத்தியாயம் : 3 கல்வியின் சிறப்பு ஹதீஸ்கள் 80 முதல் 96 வரை



                                                    அத்தியாயம் : 3 ( பகுதி 03 )

                                                                    كتاب العلم  

                                                              கல்வியின் சிறப்பு




(21)باب رَفْعِ الْعِلْمِ وَظُهُورِ الْجَهْلِ
பாடம் : 21

கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும்.

وَقَالَ رَبِيعَةُ لاَ يَنْبَغِي لأَحَدٍ عِنْدَهُ شَيْءٌ مِنَ الْعِلْمِ أَنْ يُضَيِّعَ نَفْسَهُ.

ரபீஆ பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் சிறிதளவேனும் கல்வியறிவு உள்ள ஒருவர் (அதைப் பயன்படுத்தாமல்) தம்மைப் பாழடித்திடுவது முறையல்ல என்று கூறியுள்ளார்கள்.

حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَثْبُتَ الْجَهْلُ، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا ‏"‏‏.‏

80. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கல்வியறிவு அகற்றப்பட்டுவிடுவதும், அறியாமை நிலைத்துவிடுவதும், மது (மலிவாக) அருந்தப்படுவதும், விபச்சாரம் (பரவலாய்) நடப்பதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ لأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا لاَ يُحَدِّثُكُمْ أَحَدٌ بَعْدِي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَقِلَّ الْعِلْمُ، وَيَظْهَرَ الْجَهْلُ، وَيَظْهَرَ الزِّنَا، وَتَكْثُرَ النِّسَاءُ وَيَقِلَّ الرِّجَالُ، حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ ‏"‏‏.‏

81. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்காத அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற செய்தி (நபிமொழி) ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கல்வியறிவு குறைந்து விடுவதும், அறியாமை வெளிப்படுவதும், விபச்சாரம் (பகிரங்கமாய்) நடப்பதும் ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்.

(22)باب فَضْلِ الْعِلْمِ
பாடம் : 22

கூடுதலான கல்வியாற்றல்.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ، فَشَرِبْتُ حَتَّى إِنِّي لأَرَى الرِّيَّ يَخْرُجُ فِي أَظْفَارِي، ثُمَّ أَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏"‏‏.‏ قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ الْعِلْمَ ‏"‏‏

82. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. (அதிலிருந்த பாலை) நான் (தாகம் தீர) அருந்தினேன். இறுதியில் எனது நகக்கண்கள் ஊடே (பால்) பொங்கிவரக் கண்டேன். பிறகு (நான் அருந்தியது போக இருந்த) மிச்சத்தை உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் இதற்கு (இந்தப் பாலுக்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க, அதற்கு அவர்கள் அறிவு என்று பதிலளித்தார்கள்.

(23)باب الْفُتْيَا وَهُوَ وَاقِفٌ عَلَى الدَّابَّةِ وَغَيْرِهَا
பாடம் : 23

வாகனப் பிராணிகள் முதலியவற்றின் மீது இருந்து கொண்டு தீர்ப்பு வழங்குவது.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَقَفَ فِي حَجَّةِ الْوَدَاعِ بِمِنًى لِلنَّاسِ يَسْأَلُونَهُ، فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ لَمْ أَشْعُرْ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ‏.‏ فَقَالَ ‏"‏ اذْبَحْ وَلاَ حَرَجَ ‏"‏‏.‏ فَجَاءَ آخَرُ فَقَالَ لَمْ أَشْعُرْ، فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ‏.‏ قَالَ ‏"‏ ارْمِ وَلاَ حَرَجَ ‏"‏‏.‏ فَمَا سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ شَىْءٍ قُدِّمَ وَلاَ أُخِّرَ إِلاَّ قَالَ افْعَلْ وَلاَ حَرَجَ‏.‏

83. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின் போது மினாவில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் மக்கள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் (சட்டம்) தெரியாமல் குர்பானி (பலி) கொடுப்பதற்கு முன்னால் என் தலைமுடியை மழித்துவிட்டேன் என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பரவாயில்லை; இப்போது குர்பானி கொடுத்துக் கொள்வீராக! என்றார்கள். மற்றொருவர் வந்து நான் தெரியாமல் கல் எறிவற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரவாயில்லை; இப்போது கல் எறிந்து கொள்வீராக! என்றார்கள். (அன்றைய தினம்) (பிற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில கிரியைகள் முற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில கிரியைகள் பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோதெல்லாம் பரவாயில்லை; (விடுபட்டதைச்) செய்யுங்கள்! என்றே சொன்னார்கள்.

(24)باب مَنْ أَجَابَ الْفُتْيَا بِإِشَارَةِ الْيَدِ وَالرَّأْسِ
பாடம் : 24

கையால் அல்லது தலையால் சைகை செய்து தீர்ப்பு வழங்குதல்.

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُئِلَ فِي حَجَّتِهِ فَقَالَ ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، فَأَوْمَأَ بِيَدِهِ قَالَ وَلاَ حَرَجَ‏.‏ قَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ‏.‏ فَأَوْمَأَ بِيَدِهِ وَلاَ حَرَجَ‏.‏

84. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் விடைபெற்றுக் கொண்ட) ஹஜ்ஜின் போது பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது ஒருவர் நான் கல்லெறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டேன் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பரவாயில்லை எனத் தமது கையால் சைகை செய்தார்கள். மற்றொருவர், குர்பானி கொடுப்பதற்கு முன் தலை முடியை மழித்துவிட்டேன் என்றார். அதற்கும் நபி அவர்கள் பரவாயில்லை எனத் தமது கையால் சைகை செய்தார்கள்.

حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ سَالِمٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ يُقْبَضُ الْعِلْمُ، وَيَظْهَرُ الْجَهْلُ وَالْفِتَنُ، وَيَكْثُرُ الْهَرْجُ ‏"‏‏.‏ قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْهَرْجُ فَقَالَ هَكَذَا بِيَدِهِ، فَحَرَّفَهَا، كَأَنَّهُ يُرِيدُ الْقَتْلَ‏.‏

85. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (உலக முடிவு நாளின் போது) கல்வி கைப்பற்றப்பட்டுவிடும். அறியாமையும் குழப்பங்களும் வெளிப்பட்டு (பரவி) விடும். கொந்தளிப்பு (ஹர்ஜ்) மிகுந்துவிடும் என்று கூறினார்கள். அப்போது கொந்தளிப்பு என்றால் என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்கப்பட்டது. நபியவர்கள் தமது கையால் இப்படி என்று கொலை செய்வதைப் போன்று பாவனை செய்துகாட்டினார்கள்.

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ أَتَيْتُ عَائِشَةَ وَهِيَ تُصَلِّي فَقُلْتُ مَا شَأْنُ النَّاسِ فَأَشَارَتْ إِلَى السَّمَاءِ، فَإِذَا النَّاسُ قِيَامٌ، فَقَالَتْ سُبْحَانَ اللَّهِ‏.‏ قُلْتُ آيَةٌ فَأَشَارَتْ بِرَأْسِهَا، أَىْ نَعَمْ، فَقُمْتُ حَتَّى تَجَلاَّنِي الْغَشْىُ، فَجَعَلْتُ أَصُبُّ عَلَى رَأْسِي الْمَاءَ، فَحَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ ‏ "‏ مَا مِنْ شَىْءٍ لَمْ أَكُنْ أُرِيتُهُ إِلاَّ رَأَيْتُهُ فِي مَقَامِي حَتَّى الْجَنَّةَ وَالنَّارَ، فَأُوحِيَ إِلَىَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي قُبُورِكُمْ، مِثْلَ ـ أَوْ قَرِيبًا لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ ـ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، يُقَالُ مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ فَأَمَّا الْمُؤْمِنُ ـ أَوِ الْمُوقِنُ لاَ أَدْرِي بِأَيِّهِمَا قَالَتْ أَسْمَاءُ ـ فَيَقُولُ هُوَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالْهُدَى، فَأَجَبْنَا وَاتَّبَعْنَا، هُوَ مُحَمَّدٌ‏.‏ ثَلاَثًا، فَيُقَالُ نَمْ صَالِحًا، قَدْ عَلِمْنَا إِنْ كُنْتَ لَمُوقِنًا بِهِ، وَأَمَّا الْمُنَافِقُ ـ أَوِ الْمُرْتَابُ لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ ـ فَيَقُولُ لاَ أَدْرِي، سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ ‏"‏‏.‏


86. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது (மக்களுடன்) ஆயிஷா (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? என்று கேட்டேன். (தொழுகையில் நின்ற) ஆயிஷா (ரலி) அவர்கள் வானை நோக்கி (த் தமது தலையால்) சைகை செய்தார்கள். (தொழுகையில் பேசக்கூடாது என்பதை உணர்த்த) சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள். அப்போது (இது மக்களைப் பாதிக்கும்) எதேனும் அடையாளமா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ஆம் என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்று கொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் கிறக்கமுற்றேன். (கிறக்கம் நீங்க) என் தலை மீது தண்ணீரைத் தெளிக்கலானேன். (தொழுகை முடிந்ததும்) நபி (ஸல்) அவர்கள் (தமது உரையில்) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் (இதோ) இடத்தில் (தொழுகையில் இருந்த போது) கண்டேன். சொர்க்கம், நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்). மேலும் எனக்கு (பின்வருமாறு) இறைவனின் தரப்பிலிருந்து (வஹீ) அறிவிக்கப்பட்டது: நீங்கள் உங்கள் மண்ணறைகளுக்குள் (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனைக்கு நிகரான அல்லது நெருக்கமான அளவிற்கு சோதிக்கப்படுவீர்கள்.

அப்போது (கப்றில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்? என்று (நபியாகிய என்னைப் பற்றிக்) கேட்கப்படும். அப்போது இறை நம்பிக்கையாளர் அல்லது உறுதி கொண்டவர் இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) ஆவார்கள்; அன்னார் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டுவந்தார்கள்; நாங்கள் (அன்னாரின் அழைப்பை) ஏற்றோம்; அவர்களைப் பின்பற்றினோம்; இவர் முஹம்மத் (ஸல்) அவர்கள்தாம் என்று மும்முறை கூறுவார். அப்போது (கேள்வி கேட்ட வானவர்களின் தரப்பிலிரந்து) (சுவனப்பேரின்பங்களைப் பெறத்) தகுதி பெற்றவராக நீர் (நிம்மதியாக) உறங்குவீராக! என்றும் நிச்சயமாகவே நீர் (இறைத்தூதரான) இவரைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே (உலகில்) இருந்தீர் என்று நாமறிவோம் என்றும் கூறப்படும். நயவஞ்சகனோ அல்லது சந்தேகப்பேர்வழியோ, எனக்கு எதுவும் தெரியாது; மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன். எனவே நானும் அது போன்று கூறினேன் என்பான்.

அறிவிப்பாளர் ஃபாத்திமா பின்த் முன்திர் (ரஹ்) கூறுகிறார்கள்:

(நிகரான அல்லது நெருக்கமான ஆகிய) இவற்றில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

(25) بَابُ تَحْرِيضِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدَ عَبْدِ الْقَيْسِ عَلَى أَنْ يَحْفَظُوا الإِيمَانَ وَالْعِلْمَ وَيُخْبِرُوا مَنْ وَرَاءَهُمْ

பாடம் : 25

இறை நம்பிக்கை (ஈமான்), மார்க்கக் கல்வி ஆகியவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும்படியும், (அவற்றை) அவர்களுக்கப்பால் (ஊரில்) இருப்பவர்களிடம் (சென்று) அறிவிக்கும்படியும் அப்துல்கைஸ் தூதுக் குழுவினரை நபி (ஸல்) அவர்கள் தூண்டியது.

وَقَالَ مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ قَالَ لَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ، فَعَلِّمُوهُمْ».


(அப்துல்கைஸ் தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்த) மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்சென்று அவர்களுக்கு (நான் கூறியவற்றைக்) கற்றுக்கொடுங்கள் என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ كُنْتُ أُتَرْجِمُ بَيْنَ ابْنِ عَبَّاسٍ وَبَيْنَ النَّاسِ فَقَالَ إِنَّ وَفْدَ عَبْدِ الْقَيْسِ أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ مَنِ الْوَفْدُ ـ أَوْ مَنِ الْقَوْمُ ‏"‏‏.‏ قَالُوا رَبِيعَةُ‏.‏ فَقَالَ ‏"‏ مَرْحَبًا بِالْقَوْمِ ـ أَوْ بِالْوَفْدِ ـ غَيْرَ خَزَايَا وَلاَ نَدَامَى ‏"‏‏.‏ قَالُوا إِنَّا نَأْتِيكَ مِنْ شُقَّةٍ بَعِيدَةٍ، وَبَيْنَنَا وَبَيْنَكَ هَذَا الْحَىُّ مِنْ كُفَّارِ مُضَرَ، وَلاَ نَسْتَطِيعُ أَنْ نَأْتِيَكَ إِلاَّ فِي شَهْرٍ حَرَامٍ فَمُرْنَا بِأَمْرٍ نُخْبِرْ بِهِ مَنْ وَرَاءَنَا، نَدْخُلُ بِهِ الْجَنَّةَ‏.‏ فَأَمَرَهُمْ بِأَرْبَعٍ، وَنَهَاهُمْ عَنْ أَرْبَعٍ أَمَرَهُمْ بِالإِيمَانِ بِاللَّهِ عَزَّ وَجَلَّ وَحْدَهُ‏.‏ قَالَ ‏"‏ هَلْ تَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ وَحْدَهُ ‏"‏‏.‏ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ‏.‏ قَالَ ‏"‏ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَصَوْمُ رَمَضَانَ، وَتُعْطُوا الْخُمُسَ مِنَ الْمَغْنَمِ ‏"‏‏.‏ وَنَهَاهُمْ عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ‏.‏ قَالَ شُعْبَةُ رُبَّمَا قَالَ النَّقِيرِ، وَرُبَّمَا قَالَ الْمُقَيَّرِ‏.‏ قَالَ ‏"‏ احْفَظُوهُ وَأَخْبِرُوهُ مَنْ وَرَاءَكُمْ ‏"‏‏.‏


87. அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மக்களுக்குமிடையே நான் (பார்சீ மொழியில்) மொழிபெயர்க்கக் கூடியவனாக இருந்தேன். (ஒருமுறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அப்துல்கைஸ் தூதுக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது இம்மக்கள் யார்? அல்லது இத்தூதுக் குழுவினர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், (இவர்கள்) ரபீஆ குடும்பத்தினர் என்றார்கள். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் இழிநிலை காணாத, வருத்தத்திற்குள்ளாகாத சமுதாயமே வருக! உங்கள் வரவு நலவரவாகுக! என்று (வாழ்த்துக்) கூறினார்கள். அத்தூதுக் குழுவினர் நாங்கள் வெகுதொலைவிலிருந்து உங்களிடம் வந்துள்ளோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே (எதிரிகளான) முளர் குலத்து இறை மறுப்பாளர்களின் இந்தக் குடும்பத்தினர் (நாம் சந்திக்க முடியாதபடி தடையாக) உள்ளனர். எனவே, (போர்நிறுத்தம் செய்யப்படும்) புனித மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் எங்களால் தங்களிடம் வர முடியவில்லை. எனவே, தெளிவான ஆணையொன்றைப் பிறப்பியுங்கள்! அதை நாங்கள் எங்களுக்குப் பின்னணியில் (இங்கே வராமல்) இருப்பவர்களுக்குத் தெரிவிப்போம். அ(தைச் செயல்படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் நான்கை செயல்படுத்துமாறு கட்டளையிட்டார்கள்; நான்கை (கைவிடுமாறு) அவர்களுக்குத் தடைவிதித்தார்கள். வல்லோன் அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, அல்லாஹ் ஒருவனையே நம்புதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது; தொழுகையை (உரியமுறையில்) நிலை நிறுத்துவது; ஸகாத் கொடுப்பது; ரமளான் மாதம் நோன்பு நோற்பது.

மேலும் போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை (அல்லாஹ்விற்காக) நீங்கள் வழங்கிட வேண்டும் என்று கூறினார்கள்.

(மது சேகரித்துவைக்கப் பயன்படுத்தப்பட்டுவரும்) சுரைக்காய் குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் (பழரசம் முதலிய பானங்கள் ஊற்றிவைக்கப் பயன்படுத்த) வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கிறேன். (இத்தடை பின்னர் நீக்கப்பட்டது.) இவற்றை நன்கு மனதில் பதியவைத்துக் கொண்டு (இங்கே வராமல்) உங்கள் பின்னணியில் (உங்களை அனுப்பி) இருப்போரிடம் சென்று அறிவித்து விடுங்கள் என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

பேரீச்சமரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும் மரப் பீப்பாய் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கலாம்.

(26)باب الرِّحْلَةِ فِي الْمَسْأَلَةِ النَّازِلَةِ وَتَعْلِيمِ أَهْلِهِ
பாடம் : 26

ஒரு சட்டப் பிரச்சனை(யின் தீர்வு)க்காகப் பயணம் மேற்கொண்டு செல்வதும் அதைத் தன் குடும்பத்தினருக்குக் கற்றுக்கொடுப்பதும்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لأَبِي إِهَابِ بْنِ عَزِيزٍ، فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ إِنِّي قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ بِهَا‏.‏ فَقَالَ لَهَا عُقْبَةُ مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي وَلاَ أَخْبَرْتِنِي‏.‏ فَرَكِبَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ فَسَأَلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ كَيْفَ وَقَدْ قِيلَ ‏"‏‏.‏ فَفَارَقَهَا عُقْبَةُ، وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ‏.‏


88. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறியதாவது:

நான் அபூஇஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்துகொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து நான், உக்பாவுக்கும் நீ மணந்து கொண்டுள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டியிருக்கிறேன் (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர்கள் ஆவீர்கள்) என்று கூறினார். நான் நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணமுடித்துக் கொண்டபோது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவில்லையே! என்று கேட்டேன்.

ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நீயும் உம் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்டுப் போன பிறகு எப்படி (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)? என்று கூறினார்கள். ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்துவிட்டேன். அவள் பெண்ணும் வேறொரு கணவனை மணந்து கொண்டாள்.

(27)باب التَّنَاوُبِ فِي الْعِلْمِ
பாடம் : 27

முறைவைத்துக் கற்றல்.

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ، قَالَ كُنْتُ أَنَا وَجَارٌ، لِي مِنَ الأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ، وَهْىَ مِنْ عَوَالِي الْمَدِينَةِ، وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا، فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ بِخَبَرِ ذَلِكَ الْيَوْمِ مِنَ الْوَحْىِ وَغَيْرِهِ، وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَ ذَلِكَ، فَنَزَلَ صَاحِبِي الأَنْصَارِيُّ يَوْمَ نَوْبَتِهِ، فَضَرَبَ بَابِي ضَرْبًا شَدِيدًا‏.‏ فَقَالَ أَثَمَّ هُوَ فَفَزِعْتُ فَخَرَجْتُ إِلَيْهِ فَقَالَ قَدْ حَدَثَ أَمْرٌ عَظِيمٌ‏.‏ قَالَ فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَإِذَا هِيَ تَبْكِي فَقُلْتُ طَلَّقَكُنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ لاَ أَدْرِي‏.‏ ثُمَّ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ وَأَنَا قَائِمٌ أَطَلَّقْتَ نِسَاءَكَ قَالَ ‏ "‏ لاَ ‏"‏‏.‏ فَقُلْتُ اللَّهُ أَكْبَرُ‏.‏


89. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நானும் அன்சாரிகளில் ஒருவரான என் அண்டை வீட்டுக்காரரும் பனூஉமய்யா பின் ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்தோம். அது மதீனாவின் மேடான கிராமப் பகதிகளில் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அன்னாரின் அவைக்கு) நாங்கள் (இருவரும்) முறை வைத்துச் சென்றுகொண்டிருந்தோம். அவர் ஒருநாள் செல்வார்; நான் ஒரு நாள் செல்வேன். நான் சென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து)விடுவேன். அது போன்று அவர் சென்றுவரும் போதும் அவ்வாறே செய்வார். தம்முடைய முறை வந்தபோது எனது (அந்த) அன்சாரி நண்பர் (சென்றுவிட்டு வந்து) என் வீட்டுக் கதவை மிக வேகமாகத் தட்டினார். அவர் (உமர்) அங்கே இருக்கிறாரா? என்றும் கேட்டார். நான் பதறிப்போய் அவரை நோக்கி (வீட்டிலிருந்து) வெளியே வந்தேன். அப்போது அவர் நபி (ஸல்) அவர்கள் தமது துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள் என்ற வதந்தியைக் கேள்விப்பட்டு ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டிருக்கிறது என்றார்.

உடனே நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். அங்கே அவர் அழுது கொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் மணவிலக்குச் செய்து விட்டார்களா? என்று நான் கேட்டேன். அதற்கு அவர் எனக்குத் தெரியவில்லை என்றார். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, தங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்து விட்டீர்களா? என்று நின்ற நிலையில் கேட்டேன். நபியவர்கள் இல்லை என்றார்கள். உடனே நான் அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்) என்று சொன்னேன்.

(28)باب الْغَضَبِ فِي الْمَوْعِظَةِ وَالتَّعْلِيمِ إِذَا رَأَى مَا يَكْرَهُ
பாடம் : 28

அறிவுரை கூறும் போதும் கல்வி கற்றுக்கொடுக்கும் போதும் தமக்குப் பிடிக்காத ஒன்றைக் காணும் நேரத்தில் சினம் கொள்ளுதல்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ، لاَ أَكَادُ أُدْرِكُ الصَّلاَةَ مِمَّا يُطَوِّلُ بِنَا فُلاَنٌ، فَمَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْ يَوْمِئِذٍ فَقَالَ ‏ "‏ أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ مُنَفِّرُونَ، فَمَنْ صَلَّى بِالنَّاسِ فَلْيُخَفِّفْ، فَإِنَّ فِيهِمُ الْمَرِيضَ وَالضَّعِيفَ وَذَا الْحَاجَةِ ‏"‏‏.‏


90. அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர்) அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது :

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! இன்னார் (இமாமாக நின்று தொழுகை நடத்தும் போது) தொழுகையை எங்களுக்கு நீட்டிக்கொண்டே போவதால் என்னால் பெரும்பாலும் (கூட்டுத்) தொழுகையில் சேர்ந்துகொள்ள முடிவதில்லை என்று (முறையிட்டுக்) கூறினார். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் உரையாற்றலானார்கள். முன் எப்போதும் அடைந்திராத அளவு கோபத்தை அன்றைய தின உரையில் நான் கண்டேன். (அவ்வுரையில்) மக்களே! நீங்கள் வெறுப்பூட்டுபவர்களாகவே உள்ளீர்கள். எவர் மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினாலும் அவர் சுருக்கமா(கவே தொழுவி)க்கட்டும். ஏனெனில் (தொழவந்த) மக்களில் நோயாளிகள், பலவீனமானவர்கள், (பல்வேறு) அலுவல் உடையோர் நிச்சயம் இருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ الْمَدِينِيُّ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَأَلَهُ رَجُلٌ عَنِ اللُّقَطَةِ فَقَالَ ‏"‏ اعْرِفْ وِكَاءَهَا ـ أَوْ قَالَ وِعَاءَهَا ـ وَعِفَاصَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً، ثُمَّ اسْتَمْتِعْ بِهَا، فَإِنْ جَاءَ رَبُّهَا فَأَدِّهَا إِلَيْهِ ‏"‏‏.‏ قَالَ فَضَالَّةُ الإِبِلِ فَغَضِبَ حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ ـ أَوْ قَالَ احْمَرَّ وَجْهُهُ ـ فَقَالَ ‏"‏ وَمَا لَكَ وَلَهَا مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا، تَرِدُ الْمَاءَ، وَتَرْعَى الشَّجَرَ، فَذَرْهَا حَتَّى يَلْقَاهَا رَبُّهَا ‏"‏‏.‏ قَالَ فَضَالَّةُ الْغَنَمِ قَالَ ‏"‏ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ ‏"‏‏.‏


91. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் (வந்து), பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொரு(ளின் சட்டங்க)ளைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதன் முடிச்சை அல்லது அதன் பையையும் அதன் உறையையும் (அதன் முழு விவரங்களை) நீ அறிந்துவைத்துக் கொள்! பிறகு ஓராண்டுக் காலம் அதனைப் பற்றி விளம்பரப்படுத்து! அதற்குப் பிறகு அதனை நீ பயன்படுத்திக் கொள்! அதன் உரிமையாளர் (முறைப்படி அதைக் கேட்டு) வந்துவிட்டால் அதை அவரிடம் கொடுத்து விடு! என்றார்கள். அப்படியானால் வழிதவறி வந்துவிட்ட ஒட்டகம் (பற்றிய சட்டம் என்ன)? என்று அம்மனிதர் கேட்டார். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவிற்கென்றால் அன்னாரின் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட்டன அல்லது அவர்களின் முகம் சிவந்துவிட்டது. பிறகு, அதைப் பற்றி உமக்கு என்ன (அக்கறை)? அதனுடன்தான் அதன் தண்ணீர்பையும் அதன் கால்குளம்புகளும் உள்ளனவே! அது (நீரருந்த தானாக) நீர் நிலைக்கச் செல்கிறது; மரத்தில் (இலை தழைகளை) மேய்ந்து கொள்கிறது. எனவே அதனை அதன் உரிமையாளரே பிடித்துக்கொள்ளும் வரை (அதன் போக்கில்) விட்டுவிடு! என்று கூறினார்கள். அப்படியானால் வழிதவறி வந்த ஆடு (குறித்து என்ன சொல்கிறீர்கள்)? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அது உனக்கு உரியது; அல்லது (உரிமையாளரோ மற்றவரோ அதனைப் பிடித்தால் அது உம்முடைய அந்த சகோதரருக்குரியது. அவ்வாறு யாருமே அதனைப் பிடித்துச் சொல்லாவிட்டால்) ஓநாய்க்கு உரியது என்று கூறினார்கள்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ أَشْيَاءَ كَرِهَهَا، فَلَمَّا أُكْثِرَ عَلَيْهِ غَضِبَ، ثُمَّ قَالَ لِلنَّاسِ ‏"‏ سَلُونِي عَمَّا شِئْتُمْ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ مَنْ أَبِي قَالَ ‏"‏ أَبُوكَ حُذَافَةُ ‏"‏‏.‏ فَقَامَ آخَرُ فَقَالَ مَنْ أَبِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ ‏"‏ أَبُوكَ سَالِمٌ مَوْلَى شَيْبَةَ ‏"‏‏.‏ فَلَمَّا رَأَى عُمَرُ مَا فِي وَجْهِهِ قَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نَتُوبُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ‏.‏


92. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுக்குப் பிடிக்காத பல விஷயங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. அவர்களிடம் (இது போன்ற) கேள்விகள் அதிகமாகக் கேட்கப்பட்டபோது (அதைக்கேட்டு) கோபப்பட்டார்கள். பின்னர் மக்களிடம் நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்! என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், என் தந்தை யார்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஹுதாஃபாதாம் உன் தந்தை என்று பதிலளித்தார்கள். உடனே மற்றொருவர் எழுந்து என் தந்தை யார், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க, உமது தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த சாலிம்தாம் என்றார்கள்.

(இம்மாதிரியான கேள்விகளால்) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட (கோபத்)தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மெய்யாகவே வலிவும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறோம் என்றார்கள்.

(29)باب مَنْ بَرَكَ عَلَى رُكْبَتَيْهِ عِنْدَ الإِمَامِ أَوِ الْمُحَدِّثِ
பாடம் : 29

தலைவர் அல்லது நபிமொழித்துறை அறிஞர் அருகில் மண்டியிட்டு அமர்தல்.

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ، فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ فَقَالَ مَنْ أَبِي فَقَالَ ‏"‏ أَبُوكَ حُذَافَةُ ‏"‏‏.‏ ثُمَّ أَكْثَرَ أَنْ يَقُولَ ‏"‏ سَلُونِي ‏"‏‏.‏ فَبَرَكَ عُمَرُ عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلاَمِ دِينًا، وَبِمُحَمَّدٍ صلى الله عليه وسلم نَبِيًّا، فَسَكَتَ‏.‏


93. அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வீட்டிலிருந்து) வெளியே வந்தபோது மக்கள் அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்படும் விதத்தில் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர். அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் எழுந்து, என் தந்தை யார்? என்று கேட்டார். ஹுதாஃபாதாம் உன் தந்தை என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு என்னிடம் கேளுங்கள்! என்று அடிக்கடி கூறினார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகமாற்றத்தைக் கண்ட) உடன் உமர் (ரலி) அவர்கள் (நபியருகில்) மண்டியிட்டு அமர்ந்து, நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டோம் என்று கூறினார்கள். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

(30)باب مَنْ أَعَادَ الْحَدِيثَ ثَلاَثًا لِيُفْهَمَ عَنْهُ
பாடம் : 30

தாம் சொல்வது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக ஒரு செய்தியை மும்முறை திருப்பிச் சொல்லுதல்.

فَقَالَ: «أَلاَ وَقَوْلُ الزُّورِ». فَمَا زَالَ يُكَرِّرُهَا.
وَقَالَ ابْنُ عُمَرَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ بَلَّغْتُ». ثَلاَثًا.

(ஒருமுறை பெரும்பாவங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை! பொய் சாட்சியும் அவற்றில் ஒன்றுதான் எனத் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜுப் பேருரையின் இறுதியில்) நான் எல்லாவற்றையும் (உங்களுக்கு) சமர்ப்பித்து விட்டேனா? என்று மூன்றுமுறை கேட்டார்கள்.

حَدَّثَنَا عَبْدَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا سَلَّمَ سَلَّمَ ثَلاَثًا، وَإِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا‏.‏


94. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சலாம் சொன்னால் மூன்றுமுறை சொல்வார்கள்; ஏதேனும் ஒரு வார்த்தையைப் பேசினால் அதனை மூன்றுமுறை (திரும்பச்) சொல்வார்கள்.

حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا حَتَّى تُفْهَمَ عَنْهُ، وَإِذَا أَتَى عَلَى قَوْمٍ فَسَلَّمَ عَلَيْهِمْ سَلَّمَ عَلَيْهِمْ ثَلاَثًا‏.‏


95. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு வார்த்தை பேசினால் தாம் கூறுவது நன்கு புரிந்து கொள்ளப்படவேண்டும் என்பதற்காக மும்முறை அதனைத் திரும்பத்திரும்பச் சொல்வார்கள். மக்களிடம் வந்தால் அவர்களுக்கு மும்முறை சலாம் சொல்வார்கள்.

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ تَخَلَّفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ سَافَرْنَاهُ فَأَدْرَكَنَا وَقَدْ أَرْهَقْنَا الصَّلاَةَ صَلاَةَ الْعَصْرِ وَنَحْنُ نَتَوَضَّأُ، فَجَعَلْنَا نَمْسَحُ عَلَى أَرْجُلِنَا، فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ ‏ "‏ وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ ‏"‏‏.‏ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا‏.‏


96. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் அல்லாஹ்வின் (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே (பிந்தி) வந்துகொண்டிருந்தார்கள். அஸ்ர் தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் (அவசர அவசரமாக) உளூ (அங்கசுத்தி) செய்து கொண்டிருக்கும்போது எங்களிடம் வந்துசேர்ந்தார்கள். அப்போது நாங்கள் (கால்களை முறைப்படி கழுவாமல்) எங்கள் கால்கள் மீது தண்ணீர் தொட்டுத் தடவி (மஸ்ஹு செய்து) கொள்ளலானோம். (அதைக்கண்ட) நபி (ஸல்) அவர்கள் குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான்! என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள்.



No comments:

Post a Comment