அத்தியாயம் : 3
كتاب العلم
கல்வியின் சிறப்பு
(1)بَابُ
فَضْلِ الْعِلْمِ
பாடம் : 1
கல்வியின் சிறப்பு
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {يَرْفَعِ اللَّهُ الَّذِينَ
آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا
تَعْمَلُونَ خَبِيرٌ}. وَقَوْلِهِ عَزَّ وَجَلَّ: {رَبِّ زِدْنِي عِلْمًا}.
ஈமான் கொண்டவர்களுக்கும் கல்விஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை
உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான் எனும் (58:11ஆவது) இறை வசனமும்.
வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் கூறுகின்றான்:
என் இறைவா! கல்விஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக! என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!
(20:114).
(2)باب مَنْ سُئِلَ
عِلْمًا وَهُوَ مُشْتَغِلٌ فِي حَدِيثِهِ فَأَتَمَّ الْحَدِيثَ ثُمَّ أَجَابَ
السَّائِلَ
பாடம் : 2
ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது
யாராவது ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேள்விகேட்டால், அவர் தம் பேச்சை முடித்துக்கொண்டு, பிறகு கேள்வி கேட்பவருக்கு
பதிலளிக்கலாம்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ حَدَّثَنَا
فُلَيْحٌ، ح وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي هِلاَلُ بْنُ
عَلِيٍّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا
النَّبِيُّ صلى الله عليه وسلم فِي مَجْلِسٍ يُحَدِّثُ الْقَوْمَ جَاءَهُ
أَعْرَابِيٌّ فَقَالَ مَتَى السَّاعَةُ فَمَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم يُحَدِّثُ، فَقَالَ بَعْضُ الْقَوْمِ سَمِعَ مَا قَالَ، فَكَرِهَ مَا قَالَ،
وَقَالَ بَعْضُهُمْ بَلْ لَمْ يَسْمَعْ، حَتَّى إِذَا قَضَى حَدِيثَهُ قَالَ
" أَيْنَ ـ أُرَاهُ ـ السَّائِلُ عَنِ السَّاعَةِ ". قَالَ هَا
أَنَا يَا رَسُولَ اللَّهِ. قَالَ " فَإِذَا ضُيِّعَتِ الأَمَانَةُ
فَانْتَظِرِ السَّاعَةَ ". قَالَ كَيْفَ إِضَاعَتُهَا قَالَ "
إِذَا وُسِّدَ الأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ ".
59. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் (மார்க்க விஷயமாகப்) பேசிக்கொண்டிருக்கும்
போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து,
மறுமை நாள் எப்போது? எனக்கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு பதிலளிக்காமல்) தமது
பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர், நபி(ஸல்) அவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; ஆயினும் அவர் கேட்ட கேள்வியை நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை
என்று கூறினர். மற்ற சிலர், நபியவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுறவில்லை
என்றனர். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துவிட்டு, மறுமை நாளைப் பற்றி (என்னிடம் கேள்வி) கேட்டவர் எங்கே? என்று கேட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்வின் தூதரே! இதோ நான்தான்
என்றார். நபி (ஸல்) அவர்கள், அமானிதம் (அடைக்கலம்) பாழ்படுத்தப்பட்டால்
நீர் மறுமை நாளை எதிர்பாரும்! என்று சொன்னார்கள். அதற்கவர், அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (மார்க்கம் மற்றும் அரசுசார்ந்த) அதிகாரங்கள் தகுதியற்றோரிடம்
ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்! என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
(3)باب
مَنْ رَفَعَ صَوْتَهُ بِالْعِلْمِ
பாடம் : 3
உரத்த குரலில் கல்விபோதிப்பது.
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، عَارِمُ بْنُ الْفَضْلِ
قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ،
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ تَخَلَّفَ عَنَّا النَّبِيُّ صلى الله
عليه وسلم فِي سَفْرَةٍ سَافَرْنَاهَا، فَأَدْرَكَنَا وَقَدْ أَرْهَقَتْنَا
الصَّلاَةُ وَنَحْنُ نَتَوَضَّأُ، فَجَعَلْنَا نَمْسَحُ عَلَى أَرْجُلِنَا،
فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ " وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ
". مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا.
60. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே (பிந்தி)
வந்து கொண்டிருந்தார்கள். (அஸ்ர்) தொழுகையின் நேரம் எங்களை அடைந்து விட்ட நிலையில்
நாங்கள் அங்கத்தூய்மை (உளூ) செய்து கொண்டிருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம்
வந்து சேர்ந்தார்கள்; அப்போது நாங்கள் (நேரத்தின் நெருக்கடியால்)
எங்கள் கால்களைத் தண்ணீர் தொட்டுத் தடவி (மஸ்ஹுச் செய்ய) ஆரம்பித்தோம். (அதைக் கண்டதும்)
நபி (ஸல்) அவர்கள் குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நாசம்தான் என்று இரண்டு
அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள்.
(4)باب قَوْلِ
الْمُحَدِّثِ حَدَّثَنَا أَوْ، أَخْبَرَنَا وَأَنْبَأَنَا
பாடம் : 4
وَقَالَ لَنَا الْحُمَيْدِيُّ كَانَ عِنْدَ ابْنِ
عُيَيْنَةَ حَدَّثَنَا وَأَخْبَرَنَا وَأَنْبَأَنَا وَسَمِعْتُ وَاحِدًا.
وَقَالَ ابْنُ مَسْعُودٍ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ.
وَقَالَ شَقِيقٌ عَنْ عَبْدِ اللَّهِ سَمِعْتُ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَةً.
وَقَالَ حُذَيْفَةُ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثَيْنِ.
وَقَالَ أَبُو الْعَالِيَةِ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ.
وَقَالَ أَنَسٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَرْوِيهِ عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ.
وَقَالَ أَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْوِيهِ عَنْ رَبِّكُمْ عَزَّ وَجَلَّ.
ஹதீஸ் துறை நிபுணர் ஹத்தஸனா, அஃக்பரனா, அன்பஅனா (எமக்கு அறிவித்தார்) என்று கூறுவது.
அபூபக்ர் பின் அப்தில்லாஹ் பின் ஸுபைர் அல்ஹுமைதீ (ரஹ்) அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்:
ஹத்தஸனா, அஃக்பரனா, அன்பஅனா, சமிஉத்து (நான் செவியுற்றேன்) என்ற
நான்கு வார்த்தைகளையும் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் ஒரே கருத்துடைய வார்த்தைகளாகவே
கருதினார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (ஒரு நபிமொழியை அறிவிக்கும் போது) உண்மையாளரும்
உண்மையுரைக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் எமக்கு அறிவித்தார்கள் (ஹத்தஸனா) என்று
சொன்னார்கள்.
ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் ஒரு வார்த்தையை செவியுற்றேன் (சமிஉத்து) என்று
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்
எமக்கு இரு ஹதீஸ்களை அறிவித்தார்கள் (ஹத்தஸனா).
அபுல் ஆலியா ருஃபைஉ பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தரப்பிலிருந்து அறிவித்த சில செய்திகளை இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் அன்னார் தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள் (யர்வீ அன் ரப்பிஹி) என்று
சொன்னார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் வல்லோனும் மாண்புடையோனுமாகிய
தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள் (யர்வீ அன் ரப்பிஹி அஸ்ஸ வஜல்ல) என்று கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் வல்லோனும் மாண்புடையோனுமாகிய
உங்கள் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள் (யர்வீ அன் ரப்பிக்கும் அஸ்ஸ வஜல்ல) என்ற வார்த்தையைப்
பயன்படுத்தி இருக்கிறார்கள்.
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ
جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ
يَسْقُطُ وَرَقُهَا، وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ، فَحَدِّثُونِي مَا هِيَ ".
فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَوَادِي. قَالَ عَبْدُ اللَّهِ وَوَقَعَ فِي
نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، فَاسْتَحْيَيْتُ ثُمَّ قَالُوا حَدِّثْنَا مَا هِيَ
يَا رَسُولَ اللَّهِ قَالَ " هِيَ النَّخْلَةُ ".
61. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு;
அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு
உவமையாகும். அது எந்த மரம் என்று சொல்லுங்கள்?
என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கேட்டார்கள். அப்போது நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச
மரம்தான் என்று நான் நினைத்தேன். ஆனால்,
(மூத்தவர்கள் அமைதியாய் இருக்கும் அந்த
அவையில் நான் எப்படிச் சொல்வதென) வெட்கப்பட்(டுக் கொண்டு மெளனமாக) இருந்துவிட்டேன்.
பின்னர் மக்கள் அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?
என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்ச மரம் என்று பதிலளித்தார்கள்.
(5)باب طَرْحِ
الإِمَامِ الْمَسْأَلَةَ عَلَى أَصْحَابِهِ لِيَخْتَبِرَ مَا عِنْدَهُمْ مِنَ
الْعِلْمِ
பாடம் : 5
மக்களின் அறிவுத் திறனைச்
சோதிப்பதற்காக தலைவர் மக்களிடமே கேள்வி கேட்பது.
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا
سُلَيْمَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ
النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ
يَسْقُطُ وَرَقُهَا، وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ، حَدِّثُونِي مَا هِيَ
". قَالَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَوَادِي. قَالَ عَبْدُ
اللَّهِ فَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، ثُمَّ قَالُوا حَدِّثْنَا مَا
هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " هِيَ النَّخْلَةُ ".
62. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு;
அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு
உவமையாகும். அது எந்த மரம் என்று சொல்லுங்கள்?
என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அப்போது நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. ஆனால், அது பேரீச்சமரம்தான் என்று என் மனதில் பட்டது. பின்னர் மக்கள்
அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள்,
அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க,
அது பேரீச்சமரம் என்று நபி (ஸல்) அவர்கள்
பதிலளித்தார்கள்.
(6)باب
مَا جَاءَ فِي الْعِلْمِ
பாடம் : 6
கல்வி (கற்பித்தல்) குறித்து
வந்துள்ளவை.
وَقَوْلِهِ تَعَالَى: {وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا}
الْقِرَاءَةُ وَالْعَرْضُ عَلَى الْمُحَدِّثِ.
وَرَأَى الْحَسَنُ وَالثَّوْرِيُّ وَمَالِكٌ
الْقِرَاءَةَ جَائِزَةً، وَاحْتَجَّ بَعْضُهُمْ فِي الْقِرَاءَةِ عَلَى الْعَالِمِ
بِحَدِيثِ ضِمَامِ بْنِ ثَعْلَبَةَ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ آللَّهُ أَمَرَكَ أَنْ نُصَلِّيَ الصَّلَوَاتِ قَالَ: «نَعَمْ».
قَالَ فَهَذِهِ قِرَاءَةٌ عَلَى النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَ ضِمَامٌ قَوْمَهُ بِذَلِكَ فَأَجَازُوهُ.
وَاحْتَجَّ مَالِكٌ بِالصَّكِّ يُقْرَأُ عَلَى الْقَوْمِ فَيَقُولُونَ أَشْهَدَنَا
فُلاَنٌ. وَيُقْرَأُ ذَلِكَ قِرَاءَةً عَلَيْهِمْ، وَيُقْرَأُ عَلَى الْمُقْرِئِ
فَيَقُولُ الْقَارِئُ أَقْرَأَنِي فُلاَنٌ. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ الْوَاسِطِيُّ عَنْ عَوْفٍ عَنِ الْحَسَنِ
قَالَ لاَ بَأْسَ بِالْقِرَاءَةِ عَلَى الْعَالِمِ. وَأَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ
يُوسُفَ الْفِرَبْرِيُّ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ
قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ سُفْيَانَ قَالَ إِذَا
قُرِئَ عَلَى الْمُحَدِّثِ فَلاَ بَأْسَ أَنْ يَقُولَ حَدَّثَنِي. قَالَ
وَسَمِعْتُ أَبَا عَاصِمٍ يَقُولُ عَنْ مَالِكٍ وَسُفْيَانَ الْقِرَاءَةُ عَلَى
الْعَالِمِ وَقِرَاءَتُهُ سَوَاءٌ.
[تحفة
18529، 18761 أ، 19246 أ].
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
என் இறைவா! கல்விஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக! என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!
(20:114).
ஹதீஸ் துறை அறிஞர் ஒருவரிடம் (பயிலும் மாணவர்கள் ஹதீஸ்களை) வாசித்துக்காட்டுவது; எடுத்துச்சொல்வது.
ஹஸன் அல்பஸரீ, சுஃப்யான் அஸ்ஸவ்ரீ, மாலிக் பின் அனஸ் (ரஹ்) ஆகியோர் இவ்வாறு வாசித்துக்காட்டுவதன்
மூலம் ஆசிரியரின் அங்கீகாரத்தைப் பெறுவதை அனுமதிக்கப்பட்ட முறையாகக் கருதுகின்றார்கள்.
ஹதீஸ் துறை அறிஞரிடம் வாசித்துக்காட்டுவது(ம் அதை அறிவிப்புச் செய்ய அவர் அங்கீகாரமளித்ததாகக்
கருதுவதும் செல்லும் என்பத)ற்கு பின்வரும் நபிமொழியை அவர்களில் சிலர் ஆதாரமாக எடுத்துக்
கொள்கின்றனர்:
ளிமாம் பின் ஸஅலபா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து) (ஐவேளைத்) தொழுது
வரவேண்டும் என அல்லாஹ் தங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறான்? எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! என்றார்கள்.
இங்கே நபி (ஸல்) அவர்களிடம் வாசித்துக் காட்டப்பட்டுள்ளது. (இது அசிரியரிடம் மாணவர்
வாசித்துக்காட்டும் முறையாகும்.) பின்னர் ளிமாம் (ரலி) அவர்கள் இதைத் தமது கூட்டத்தாருக்கு
அறிவித்ததும் அவர்கள் அனைவரும் அவ(ர் கூறியவ)ற்றை ஏற்றுக்கெண்டனர்.
மாலிக் (ரஹ்) அவர்கள் இதற்கு மற்றொரு சான்றை ஆதாரமாகக் கொள்கிறார்கள். அதாவது எழுதப்பட்ட
படிவம் மக்களிடம் வாசித்துக்காட்டப்படுகிறது. அதனை (முழுமையாகக்) கேட்டுவிட்டு அவர்கள்
இன்னார் எங்களுக்கு அங்கீகாரம் அளித்தார் எனக் கூறுகிறார்கள். மற்ற (சிலசமயம்) அவர்களிடம்
அது (மனனமாகவும்) சொல்லிக்காட்டப்படுகிறது. இன்னும் சிலசமயம் ஒருவர் திருக்குர்ஆன்
அறிஞரிடம் ஓதிக்காட்டிவிட்டு ஓதிய அவரே இன்னார் எனக்கு ஒதிக்காட்டினார் என்று (மக்களிடம்)
கூறுகிறார்கள். (நடைமுறையில் இவைகளெல்லாம் ஒருவர் மற்றவரிடம் கற்றார் என்பதாகவே எடுத்துக்
கொள்ளப்படுகிறது.)
அவ்ஃப் பின் அபீஜமீலா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு நபிமொழி அறிஞரிடம் (மாணவர்) வாசித்துக்காட்டி (அங்கீகாரம் பெறுவத)னால் தவறில்லை
என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஒருமாணவர்) நபிமொழித்துறை வல்லுநரிடம்
வாசித்துக்காட்டி (அங்கீகாரம் பெற்று) விட்டு,
(வாசித்துக்காட்டிய அம்மாணவர்) அவர்
எனக்கு (இதை) அறிவித்தார் என்று கூறுவது தவறில்லை என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள்
கூறினார்கள்.
ஒரு நபிமொழித்துறை அறிஞரிடம் (மாணவர்) வாசித்துக் காட்டு(வதன் மூலம் ஆசிரியரிடம்
அங்கீகாரம் பெறு)வதும் அந்த அறிஞர் (மாணவருக்கு) படித்துக் காட்டு(வதன் மூலம் அங்கீகாரம்
தரு)வதும் சமம்தான் என சுஃப்யான் (ரஹ்),
மாலிக் (ரஹ்) ஆகியோர் கூறியதாக அபூஆஸிம்
(ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதைக் கேட்டுள்ளேன்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ
حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ ـ هُوَ الْمَقْبُرِيُّ ـ عَنْ شَرِيكِ بْنِ
عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ
بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ،
دَخَلَ رَجُلٌ عَلَى جَمَلٍ فَأَنَاخَهُ فِي الْمَسْجِدِ، ثُمَّ عَقَلَهُ، ثُمَّ
قَالَ لَهُمْ أَيُّكُمْ مُحَمَّدٌ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مُتَّكِئٌ
بَيْنَ ظَهْرَانَيْهِمْ. فَقُلْنَا هَذَا الرَّجُلُ الأَبْيَضُ الْمُتَّكِئُ.
فَقَالَ لَهُ الرَّجُلُ ابْنَ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى
الله عليه وسلم " قَدْ أَجَبْتُكَ ". فَقَالَ الرَّجُلُ
لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنِّي سَائِلُكَ فَمُشَدِّدٌ عَلَيْكَ فِي
الْمَسْأَلَةِ فَلاَ تَجِدْ عَلَىَّ فِي نَفْسِكَ. فَقَالَ " سَلْ عَمَّا
بَدَا لَكَ ". فَقَالَ أَسْأَلُكَ بِرَبِّكَ وَرَبِّ مَنْ قَبْلَكَ،
آللَّهُ أَرْسَلَكَ إِلَى النَّاسِ كُلِّهِمْ فَقَالَ " اللَّهُمَّ نَعَمْ
". قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ، آللَّهُ أَمَرَكَ أَنْ نُصَلِّيَ
الصَّلَوَاتِ الْخَمْسَ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ قَالَ " اللَّهُمَّ
نَعَمْ ". قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ، آللَّهُ أَمَرَكَ أَنْ نَصُومَ
هَذَا الشَّهْرَ مِنَ السَّنَةِ قَالَ " اللَّهُمَّ نَعَمْ ".
قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ، آللَّهُ أَمَرَكَ أَنْ تَأْخُذَ هَذِهِ الصَّدَقَةَ
مِنْ أَغْنِيَائِنَا فَتَقْسِمَهَا عَلَى فُقَرَائِنَا فَقَالَ النَّبِيُّ صلى
الله عليه وسلم " اللَّهُمَّ نَعَمْ ". فَقَالَ الرَّجُلُ آمَنْتُ
بِمَا جِئْتَ بِهِ، وَأَنَا رَسُولُ مَنْ وَرَائِي مِنْ قَوْمِي، وَأَنَا ضِمَامُ
بْنُ ثَعْلَبَةَ أَخُو بَنِي سَعْدِ بْنِ بَكْرٍ. رَوَاهُ مُوسَى وَعَلِيُّ بْنُ
عَبْدِ الْحَمِيدِ عَنْ سُلَيْمَانَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى
الله عليه وسلم بِهَذَا.
63. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது
ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளி(யின் வளாகத்தி)ல் ஒட்டகத்தைப்படுக்கவைத்து அத(ன்
முன்னங்காலி)னை மடக்கிக்கட்டினார். பிறகு மக்களிடம் உங்களில் முஹம்மது அவர்கள் யார்? என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து
அமர்ந்திருந்தார்கள். இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளைநிற மனிதர்தாம் என்று
நாங்கள் சொன்னோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை அப்துல் முத்தலிபின் (மகனின்)
புதல்வரே! என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம்
நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்போகிறேன். சில கடினமான கேள்விகளையும் நான் கேட்கப்போகிறேன்.
அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக்கூடாது என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்
உம் மனதில் பட்டதைக் கேளும்! என்றார்கள்.
உடனே அம்மனிதர் உம்முடைய, உம் முன்னோருடைய இரட்சகன் மீது ஆணையாகக்
கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும்
தூதராக அனுப்பினானா? என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்
ஆம், அல்லாஹ் சாட்சியாக! என்றார்கள். அடுத்து அவர் அல்லாஹ்வின் பொருட்டால்
உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும் பகலிலுமாக (நாளொன்றுக்கு)
ஐவேளைத் தொழுகைளைத் தொழுது வரவேண்டுமென்று உமக்கு(ம் மக்களுக்கும்) கட்டளையிட்டிருக்கின்றானா? என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ஆம், அல்லாஹ் சாட்சியாக என்றார்கள். அவர் அல்லாஹ்வின் பொருட்டால்
உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வொரு ஆண்டிலும் (குறிப்பிட்ட)
இந்த மாதத்தில் நோன்பு நோற்கவேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம், அல்லாஹ் சாட்சியாக! என்றார்கள். அவர், அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் எங்கள் செல்வர்களிடமிருந்து இந்த (ஸகாத் எனும்)
தர்மத்தைப் பெற்று எங்கள் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம், அல்லாஹ் சாட்சியாக! என்றார்கள்.
(இவற்றைக் கேட்டுவிட்டு) அம்மனிதர் நீங்கள்
(இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன் என்று கூறிவிட்டு நான், எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன்; நான்தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் ளிமாம் பின்
ஸஅலபா என்றும் கூறினார்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
(7)باب مَا يُذْكَرُ
فِي الْمُنَاوَلَةِ وَكِتَابِ أَهْلِ الْعِلْمِ بِالْعِلْمِ إِلَى الْبُلْدَانِ
பாடம் : 7
ஆசிரியர் மாணவரிடம் ஒரு
நபிமொழிச் சுவடியை ஒப்படைப்பது , கல்வியை மார்க்க அறிஞர்கள் பல்வேறு ஊர்களுக்கு எழுதி அனுப்புவது
ஆகியவை தொடர்பாக வந்துள்ளவை.
وَقَالَ أَنَسٌ نَسَخَ عُثْمَانُ الْمَصَاحِفَ، فَبَعَثَ
بِهَا إِلَى الآفَاقِ. وَرَأَى عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَيَحْيَى بْنُ سَعِيدٍ
وَمَالِكٌ ذَلِكَ جَائِزًا. وَاحْتَجَّ بَعْضُ أَهْلِ الْحِجَازِ فِي
الْمُنَاوَلَةِ بِحَدِيثِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ
كَتَبَ لأَمِيرِ السَّرِيَّةِ كِتَابًا وَقَالَ: «لاَ تَقْرَأْهُ حَتَّى تَبْلُغَ
مَكَانَ كَذَا وَكَذَا». فَلَمَّا بَلَغَ ذَلِكَ الْمَكَانَ قَرَأَهُ عَلَى
النَّاسِ، وَأَخْبَرَهُمْ بِأَمْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
[تحفة
9783].
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
(கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் குர்ஆனைப்
பல பிரதிகளில் படியெடுத்து அவற்றை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவைத்தார்கள்.
இது அனுமதிக்கப்பட்ட முறையே என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), யஹ்யா பின் சயீத் (ரஹ்),
மாலிக் பின் அனஸ் (ரஹ்) ஆகியோர் கருதியுள்ளனர்.
நபிமொழிச் சுவடியை ஒப்படைக்கலாம் என்பதற்கு ஹிஜாஸ்வாசிகள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக்
கொண்டிருக்கிறார்கள்: ஒரு படைப்பிரிவிற்கு தளபதியாக நியமிக்கப்பட்ட ஒருவரிடம் நபி
(ஸல்) அவர்கள் ஒரு கடிதம் எழுதிக்கொடுத்து இன்ன இடத்தை நீர் அடையும் வரை இதனைப் படிக்கக்கூடாது
என்று சொல்லியனுப்பினார்கள். அதன்படி அவர் அந்த இடத்தை அடைந்ததும்தான் அதனை(த் தம்முடன்
வந்த மற்ற) மக்களுக்குப் படித்துக்காட்டி நபி (ஸல்) அவர்களின் கட்டளையை அவர்களுக்கு
அறிவித்தார்கள்.
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ
حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ
عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ
اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
بَعَثَ بِكِتَابِهِ رَجُلاً، وَأَمَرَهُ أَنْ يَدْفَعَهُ إِلَى عَظِيمِ
الْبَحْرَيْنِ، فَدَفَعَهُ عَظِيمُ الْبَحْرَيْنِ إِلَى كِسْرَى، فَلَمَّا
قَرَأَهُ مَزَّقَهُ. فَحَسِبْتُ أَنَّ ابْنَ الْمُسَيَّبِ قَالَ فَدَعَا
عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُمَزَّقُوا كُلَّ مُمَزَّقٍ.
64. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் கிஸ்ராவுக்கு) தாம் எழுதிய கடிதத்தை
ஒருமனிதர் மூலம் அனுப்பிவைத்தார்கள். அதனை பஹ்ரைனின் ஆளுநரிடம் கொடுக்க வேண்டும் என்று
கட்டளையிட்டார்கள். (அவ்வாறே அம்மனிதர் பஹ்ரைன் ஆளுநரிடம் ஒப்படைத்தார். அவர் அதை கிஸ்ரா
(குஸ்ரூ) இடம் ஒப்படைத்தார்.) அதனைக் கிஸ்ரா படித்ததும் (கோபப்பட்டு) அதை(த் துண்டு
துண்டாகக்) கிழித்துப் போட்டுவிட்டான்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட) அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கிஸ்ரா ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்படவேண்டுமென அவர்களுக்கெதிராகப்
பிரார்தித்தார்கள் என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ،
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَتَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم كِتَابًا ـ أَوْ
أَرَادَ أَنْ يَكْتُبَ ـ فَقِيلَ لَهُ إِنَّهُمْ لاَ يَقْرَءُونَ كِتَابًا إِلاَّ
مَخْتُومًا. فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ
اللَّهِ. كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ. فَقُلْتُ لِقَتَادَةَ
مَنْ قَالَ نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ قَالَ أَنَسٌ.
65. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரோம பைஸாந்திய அரசுக்கு இஸ்லாமிய அழைப்புவிடுத்து) கடிதம் ஒன்றை
எழுதச் சொன்னார்கள் அல்லது எழுதிட விரும்பினார்கள். அப்போது அவர்கள் (ரோமர்கள்) முத்திரையிடப்படாத
எந்தக் கடிதத்தையும் படிக்கமாட்டார்கள் என்று நபியவர்களிடம் சொல்லப்பட்டது. ஆகவே நபி
(ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டார்கள். அதில் முஹம்மதுர்
ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது) என்று (இலச்சினை) பொறிக்கப்பட்டிருந்தது.
இப்போதும் நான் அவர்களுடைய கரத்திலிருந்த மோதிரத்தின் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளது..
(இதன் அறிவிப்பவர்களில் ஒருவரான ஷுஅபா
கூறுகிறார்கள்:)
(எனக்கு இதனை அறிவித்த) கத்தாதா பின்
திஆமா (ரஹ்) அவர்களிடம், அ(ந்த மோதிரத்தில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
என்று பொறிக்கப்பட்டிருந்ததாக (தங்களிடம்) யார் கூறியது? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனஸ் (ரலி) அவர்கள்தாம் என்று
சொன்னார்கள்.
(8)باب مَنْ قَعَدَ
حَيْثُ يَنْتَهِي بِهِ الْمَجْلِسُ وَمَنْ رَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ
فَجَلَسَ فِيهَا.
பாடம் : 8
(கல்வி முதலியவற்றுக்காகக் குழுமியிருக்கும்) ஓர் அவையில் கடைசியில்
அமரலாம். வட்டமாக அமர்ந்து இருப்பவர்களின் மத்தியில் இடைவெளி கண்டால் அதிலும் அமரலாம்.
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ،
عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّ أَبَا مُرَّةَ،
مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ،
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ
وَالنَّاسُ مَعَهُ، إِذْ أَقْبَلَ ثَلاَثَةُ نَفَرٍ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَذَهَبَ وَاحِدٌ، قَالَ فَوَقَفَا عَلَى
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي
الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا، وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ، وَأَمَّا
الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم قَالَ " أَلاَ أُخْبِرُكُمْ عَنِ النَّفَرِ الثَّلاَثَةِ أَمَّا
أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ، فَآوَاهُ اللَّهُ، وَأَمَّا الآخَرُ
فَاسْتَحْيَا، فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ، وَأَمَّا الآخَرُ فَأَعْرَضَ،
فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ ".
66. அபூவாக்கித் (அல்ஹாரிஸ் பின் மாலிக்
அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்து
கொண்டிருந்தபோது மூன்றுபேர் வந்துகொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப்படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார்.
(பள்ளிக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீற்றிருந்த அவை)
முன்னால் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஒரு இடைவெளியைக்
கண்டபோது அதில் அமர்ந்து கொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:
இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார்.
அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு(க் கொண்டு கடைசியில்
உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக் கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச்
சென்றுவிட்டார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான்.
(9)باب قَوْلِ
النَّبِيِّ صلى الله عليه وسلم "رُبَّ مُبَلَّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ
"
பாடம் : 9
நேரில் கேட்டவரைவிடக் கேட்டவரிடம்
கேட்கும் எத்தனையோ பேர் நன்கு புரிந்து கொள்கிறார்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று.
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا بِشْرٌ، قَالَ
حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ
أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، ذَكَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَعَدَ عَلَى
بَعِيرِهِ، وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ ـ أَوْ بِزِمَامِهِ ـ قَالَ "
أَىُّ يَوْمٍ هَذَا ". فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ
سِوَى اسْمِهِ. قَالَ " أَلَيْسَ يَوْمَ النَّحْرِ ". قُلْنَا
بَلَى. قَالَ " فَأَىُّ شَهْرٍ هَذَا ". فَسَكَتْنَا حَتَّى
ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ. فَقَالَ " أَلَيْسَ
بِذِي الْحِجَّةِ ". قُلْنَا بَلَى. قَالَ " فَإِنَّ دِمَاءَكُمْ
وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا،
فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا. لِيُبَلِّغِ الشَّاهِدُ
الْغَائِبَ، فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ
مِنْهُ ".
67. அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி)
அவர்கள் கூறியதாவது:
(துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது
நபி (ஸல்) அவர்கள், இது எந்த நாள்? என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ
என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள்
அல்லவா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்றோம். அடுத்து இது எந்த மாதம்? என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ
என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் இது துல்ஹஜ் மாதமல்லவா? என்றார்கள். நாங்கள் ஆம் என்றோம். நபி (ஸல்) அவர்கள் உங்களது
புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனிதமிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம்
மரியதைகளும் உங்களுக்குப் புனித மானவையாகும் என்று கூறிவிட்டு, (இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில்கொள்ளும்
ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும் என்றார்கள்.
(10) بَابُ
الْعِلْمُ قَبْلَ الْقَوْلِ وَالْعَمَلِ
பாடம் : 10
சொல்வதற்கும் செயல்படுவதற்கும்
முன்னர் அறிந்து கொள்ள வேண்டும்.
لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {فَاعْلَمْ أَنَّهُ لاَ
إِلَهَ إِلاَّ اللَّهُ} فَبَدَأَ بِالْعِلْمِ، وَأَنَّ الْعُلَمَاءَ هُمْ وَرَثَةُ
الأَنْبِيَاءِ- وَرَّثُوا الْعِلْمَ- مَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ،
وَمَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ بِهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا
إِلَى
الْجَنَّةِ.
وَقَالَ جَلَّ ذِكْرُهُ: {إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ
عِبَادِهِ الْعُلَمَاءُ} وَقَالَ: {وَمَا يَعْقِلُهَا إِلاَّ الْعَالِمُونَ}،
{وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ
السَّعِيرِ}.
وَقَالَ: {هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ
وَالَّذِينَ لاَ يَعْلَمُونَ}.
وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا
الْعِلْمُ بِالتَّعَلُّمِ».
وَقَالَ أَبُو ذَرٍّ لَوْ وَضَعْتُمُ الصَّمْصَامَةَ
عَلَى هَذِهِ وَأَشَارَ إِلَى قَفَاهُ- ثُمَّ ظَنَنْتُ أَنِّي أُنْفِذُ كَلِمَةً
سَمِعْتُهَا مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ
تُجِيزُوا عَلَيَّ لأَنْفَذْتُهَا.
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {كُونُوا رَبَّانِيِّينَ}
حُكَمَاءَ فُقَهَاءَ. وَيُقَالُ الرَّبَّانِيُّ الَّذِي يُرَبِّي النَّاسَ
بِصِغَارِ الْعِلْمِ قَبْلَ كِبَارِهِ.
ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ்,
(நபியே!) நீர் அறிந்து கொள்வீராக: வணக்கத்திற்குரிய
இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை (47:19)
என்று கூறுகின்றான். இந்த வசனத்தில்
அறிந்து கொள்வதைப் பற்றி இறைவன் முதலில் குறிப்பிட்டுள்ளான்.
அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகளாவர். அவர்கள் அறிவைத் தான் வாரிசுச் சொத்தாக
விட்டுச் சென்றுள்ளார்கள். இந்த அறிவைப் பெற்றவரே நிறைவான பாக்கியம் பெற்றவராவர்.
கல்வியைத் தேடி ஒருவர் ஒருவழியில் சென்றால் அவருக்குச் சொர்க்கத்திற்குச் செல்லும்
வழியை அல்லாஹ் எளிதாக்குகிறான்.
புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள்தாம். (35:28)
அல்லாஹ் கூறுகின்றான்:
(உதாரணங்களாக நாம் குறிப்பிட்ட) இவற்றை
அறிஞர்களைத் தவிர (வேறெவரும்) புரிந்து கொள்ளமாட்டார்கள். (29:43)
அல்லாஹ் கூறுகின்றான்:
நாங்கள் (அவரது போதனையை செவிதாழ்த்திக்) கேட்டிருந்தாலோ அல்லது அவற்றைப் புரிந்து
கொண்டிருந்தாலோ (இன்று) நரகவாசிகளாய் நாங்கள் இருந்திருக்க மாட்டோம் என்று (நிராகரிப்பாளர்கள்
மறுமையில்) கூறுவார்கள். (67:10).
அல்லாஹ் (மற்றோர் வசனத்தில்), அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? (39:9) என்று கூறுகின்றான்.
ஒருவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை நாடினால் அவரை (மார்க்கத்தில்) விளக்கமுடையவராக
ஆக்கிவிடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: மார்க்க ஞானம் என்பது கற்றுக்கொள்வதின் மூலம்தான்
கிடைக்கும்.
அபூதர் (ரலி) அவர்கள் தமது பிடரியைச் சுட்டிக்காட்டி இதன் மீது நீங்கள் உருவிய
வாளை வைத்திருந்தாலும் நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியைச் சொல்ல
நினைத்துவிட்டால் என்னைக் கொல்வதற்குள் நான் அதைச் சொல்லிமுடித்து விடுவேன் என்றார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (மக்களே!) ரப்பானீகளாய் (அதாவது) விவேகம்
மிக்கவர்களாய் மார்க்கத்தின் சட்டதிட்டங்களைத் தெரிந்தவர்களாய், இருங்கள்! என்று கூறினார்கள்.
ரப்பானீ என்பவர் மக்களுக்குப் பெரிய விஷயங்களைச் சொல்வதற்கு முன்னால் சிறிய விஷயங்களைப்
படிப்படியாகப் பயிற்றுவிப்பவர் ஆவார் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment