Tuesday, July 25, 2017

மனித வாழ்க்கையில் ஏர்பட்ட முறைதவறிய நிலை




மனித வாழ்க்கையில் ஏர்பட்ட முறைதவறிய நிலை

ல்லாஹ் தன்னை வணங்குவதற்காகவே மனிதர்களை படைத்திருக்கிறான் மேலும் தன்னை வணங்குவதற்குத் தேவையான அனைத்து வாழ்வாதாரங்களையும் அவர்களுக்கு வழங்கியுள்ளான்.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ ﴿٥٦﴾ مَا أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍ وَمَا أُرِيدُ أَن يُطْعِمُونِ ﴿٥٧﴾ إِنَّ اللَّـهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ﴿٥٨﴾

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை. அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன்; உறுதியானவன்; ஆற்றல் உடையவன்.( 51:56-58)

மனித உள்ளங்கள் இயல்பாகவே அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தால் அவனே வணக்கத்திற்கு தகுதியானவன் என்று ஏற்றுக் கொள்ளும் . அவனை மட்டுமே வணங்கி அவனுக்கு எதையுமே இணையாக்காது . ஆனால் மனித ஜின்களிலுள்ள ஷைத்தான்கள் ஏமாற்றுவதற்காக அலங்காரமான கூற்றுக்களை சிலர் மற்ற சிலருக்கு அறிவிப்பதன் மூலம் அந்த உள்ளத்தை கெடுத்தும் மாற்றியும் விடுகின்றனர்.

ஆகவே அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவது மனித இயல்பிலேயே குடிகொண்டிருக்கிறது. மேலும் வணக்கவழிபாடுகளில் இணைவைத்தல் இடையில் ஏற்பட்டதாகும் என்பது தெளிவாகிறது.

فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا ۚ فِطْرَتَ اللَّـهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا ۚ لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّـهِ

(முஹம்மதே!) உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பை மாற்றியமைக்கக் கூடாது.( 30:30)

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَثَلِ الْبَهِيمَةِ تُنْتَجُ الْبَهِيمَةَ، هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَ ‏"‏‏.‏
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவே ஆக்கிவிடுகின்றனர்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல் : புஹாரி ( 1385)

ஆதம் ( அலை ) அவர்களின் சந்ததிகளின் அடிப்படையும் தவ்ஹீதாகத்தான் இருந்தது என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறியலாம். இந்த நிலை ஆதம் ( அலை ) அவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினரிடம் நீண்ட காலம் இருந்துவந்தது இது பற்றி அல்லாஹ் கூறுகிறான்

كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّـهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான்.(2:213)

வணக்கவழிபாட்டில் இணைவைத்தலும் சரியான கொள்கையில் முறை தவறிய நிலையும் நூஹ் ( அலை ) அவர்களின் சமூகத்திலேயே முதன் முதலில் தோன்றியது எனவே தான் அல்லாஹ் நூஹ் ( அலை ) அவர்களை முதல் தூதராக அனுப்பினான்.

إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ

நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச்செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச்செய்தி அறிவித்தோம்.( 4:163)

இப்னு அப்பாஸ் ( ரழி) அவர்கள் கூறினார்கள் : ஆதம் ( அலை) அவர்களுக்கும் நூஹ் ( அலை ) அவர்களுக்கும் மத்தியில் பத்து தலைமுறையினர் இருந்தனர் அவர்கள் அனைவரும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவர்களாக இருந்தார்கள்.

அறிஞர் இப்னுல் கய்யிம் அவர்கள் இகாஸத்துல் லஹ்ஃபான் என்ற நூலில் ( 2/102) கூறுகிறார்கள் : இப்னு அப்பாஸ் ( ரழி) அவர்களின் இந்தக் கூற்று மிகச் சரியானதாகும் இதனை உபைப் பின் கஅப் ( ரழி) அவர்களின் சூரத்துல் பகராவின் கிராத்தினைக் கொண்டு உறுதிப்படுத்தலாம்

كان الناش أمه واحدة فاختلفوا فبعث الله النبيين مبشرين ومدرين

உபைப் பின் க அப் ( ரழி ) அவர்களின் கிரா அத்தில் ( فاختلفوا ) என்ற வாசகம் கூடுதலாக உள்ளது. இதன் பொருள் கருத்து வேறுபாடு கொண்டார்கள் . உபைப் பின் க அப் ( ரழி ) அவர்களின் கிரா அத்திற்கு சூரா யூனுஸின் பத்தொன்பதாவது வசனம் சான்றாக உள்ளது.

وَمَا كَانَ النَّاسُ إِلَّا أُمَّةً وَاحِدَةً فَاخْتَلَفُوا ۚ

இந்த தகவல்களை வைத்து இப்னுல் கய்யிம் அவர்கள் மக்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாறுபட்டதே நபிமார்கள் அனுப்பப்படுவதற்கு காரணமாக இருந்தது என்று கூறுகிறார்கள். அரபுகளின் நிலையும் இப்படிதான் இருந்தது. அமர் பின் லுஹை அல்குஜாயின் வருகைக்கு முன்னர் வரை அரபுகள் இப்ராஹீம் ( அலை ) அவர்களின் மார்க்கத்திலேயே நிலைத்திருந்தனர். அவன் அரபுலகத்திற்கு வந்து இப்ராஹீம் ( அலை ) அவர்களின் தூய மார்க்கத்தை அப்படியே மாற்றி அமைத்து விட்டான்.

அரபு நாடுகளில் சிலை வழிபாட்டினை கொண்டு வந்து திணித்தான். குறிப்பாக ஹிஜாஸ் பகுதியில் சிலை வழிபாடு பிரத்தேகமான முறையில் அரங்கேறியது. அல்லாஹ்வை தவிர்த்து இந்த சிலைகளுக்கு வணக்கங்கள் செலுத்தப்பட்டன இவ்வாறாக ஷிர்க் புனித பூமியிலும் அதனை சுற்றிய இடங்களிலும் பரவியது.

இதே நிலை இறுதி நபியான முஹம்மத் நபி ஸல் அவர்கள் நபியாக அனுப்பப்படும் வரை தொடர்ந்தது. நபி ஸல் அவர்கள் அந்த மக்களை தவ்ஹீத் மற்றும் நபி இப்ராஹீம் அலை அவர்களின் மார்க்கத்தை பின்பற்றுவதின் பக்கம் அழைத்தார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக முழு முயற்சியை மேற்கொண்டார்கள்.

அதன் பலனாக தவ்ஹீத் கொள்கையும் நபி இப்ராஹீமின் மார்க்கமும் மீண்டும் உயிர் பெற்றது. அந்த சமூகம் வணங்கிவந்த சிலைகளை உடைத்தார்கள். அல்லாஹ் நபி அவர்களின் மூலம் சன்மார்க்கத்தை பரிபூரணமாக்கினான். மேலும் அகிலத்தாரின் மீது தனது அருட்கொடையை முழுமையாக்கினான்.

இந்தச் சமுதாயத்தில் சிறப்பித்து கூறப்பட்ட ஆரம்பத் தலைமுறையினர் இந்த வழிமுறையை பின்பற்றியே வாழ்ந்து சென்றனர். பின்னர் வந்த தலை முறையினரிடம் அறியாமை பரவியது. மற்ற மதங்களின் காலச்சாரங்கள் இஸ்லாம் மார்க்கத்தில் ஊடுருவின வழிகேட்டின் பக்கம் அழைக்கும் அழைப்பாளர்களாலும் அவ்லியாக்கள் மற்றும் நல்லடியார்களை கண்ணியப்படுத்துகிறோம் அவர்களை நேசிக்கிறோம் என்ற பெயரில் அவர்களின் கப்றுகள் கட்டிடங்களாக கட்டபட்டதனாலும் இந்த சமுதாயத்திலுள்ள அதிகமானவர்களிடம் வணக்கவழிபாடுகளில் இணைவைத்தல் திரும்பி வந்தது.

அல்லாஹ்வைத் தவிர்த்து வணங்குவதற்காக சிலைகள் உருவாக்கப்பட்டன அங்கு பிரார்த்தித்தல் நிர்பந்த நிலையில் உதவிக்கு அழைத்தல் அறுத்து பலியிடுதல் மற்றும் நேர்ச்சை போன்ற வணக்க வழிபாடுகளின் மூலம் அல்லாஹ்வை தவிர்த்து வணங்கப்படுகின்றவையாக அந்த கப்றுகள் ஆக்கப்பட்டன. இவ்வாறு தாங்கள் செய்த இணைவைப்பிற்கு வஸீலா தேடுதல் அன்பை வெளிப்படுத்துதல் என்ற பெயர் வைத்தனர்.

ஏனெனில் அவர்களின் பார்வையில் இந்த காரியங்கள் அந்த நல்லடியார்களை வணங்குவதாக இருக்கவில்லை இதே கருத்தினைத்தான் ஆரம்ப கால இணைவைப்பாளர்களும் கொண்டிருந்தார்கள் என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் ,

مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّـهِ زُلْفَىٰ

"அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்).( 39:3)

மக்களில் முற்காலத்தில் , தற்காலத்திலும் இவ்வாறான இணைவைப்பவர்களில் அதிகமானோர் அல்லாஹ்வை மட்டுமே படைத்து ஆளுபவனாக ஏற்கும் தவ்ஹீதுர் ருபூபிய்யாவை ஏற்றிருக்கின்றனர் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற உலூஹிய்யாவில் அவனுக்கு இணைவைக்கின்றனர் .

وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّـهِ إِلَّا وَهُم مُّشْرِكُونَ ﴿١٠٦﴾

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.( 12:106)

பிர் அவ்ன் , நாத்திகர்கள் மற்றும் தற்காலத்தில் வாழும் கம்யூனிஸ்டுகள் போன்ற சொற்பமானவர்களே அல்லாஹ்வை படைத்தாள்பவனாக ஏற்கும் தவ்ஹீதுர் ருபூபிய்யாவை மறுக்கின்றனர். இவர்கள் கூட தங்களின் ஆணவத்தின் காரணமாகவே தான் அல்லாஹ்வை படைத்து பரிபாலிப்பவனாக ஏற்க மறுக்கின்றார்களே தவிர தங்களின் உள்ளத்தில் அல்லாஹ்வை உறுதியாக நம்புகின்றனர்.

   وَجَحَدُوْا بِهَا وَاسْتَيْقَنَـتْهَاۤ اَنْفُسُهُمْ ظُلْمًا وَّعُلُوًّا‌

அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர்.( 27:14)


ஒவ்வொரு படைப்புக்குப் பின்னும் ஒரு படைப்பாளன் இருப்பது அவசியம் என்பதை அவர்கள் தங்களின் அறிவைக்கொண்டு நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர். நுணுக்கமாக மற்றும் கட்டுக்கோப்பாக இந்த பிரபஞ்சத்தை இயக்குவதற்கு ஆற்றலுடையவன் , அதனை நேர்த்தியாக நிர்வாகம் செய்பவன் ஒருவன் இருந்தே ஆக வேண்டும் என்பதை யாராலும் மறுக்க முடியாது . இதற்குப் பின்பும் எவர் இதனை மறுக்கின்றாரோ அவர் தனது அறிவை இழந்தவராக இருக்க வேண்டும் ; அல்லது விதண்டாவாதத்தால் தனது அறிவை பயன்படுத்தாதவராக இருக்க வேண்டும் இந்த நிலையில் உள்ளவர்களின் வாதங்கள் ஏற்கப்படாது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..,

No comments:

Post a Comment