Monday, July 24, 2017

கிதாபுத் தவ்ஹீத் - முன்னுரை பகுதி



                                                                       كتاب التوحيد
                                                                   கிதாபுத் தவ்ஹீத்




( தமிழ்மொழிபெயர்ப்பு : ஹசன் அலீ உமரி அவர்கள் அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவானாக )

மொழி ஆக்கம் செய்தவர் உடைய பல கருத்துகளில் நாம் மாற்று கருத்து  கொண்டு இருந்தாலும் ( உதாரணமாக , சூனியம், கண்ணேறு, அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தும் திருமறை உடைய போதனைகளில் நேரடி கருத்து முரண்பட்ட செய்திகள், ஜகாத் வருடம் வருடம் ஒரே பொருளுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு ) இவைகளில் உண்டு., இருப்பினும் இந்த புத்தகத்தில் 100 க்கு 95 அதவீதம் மக்கள் பயன்பெறும் செய்திகள் அடங்கி இருப்பதினால் இங்கு பதிந்தோம் மேலும் நாகரீங்கம் கருதி மொழியாக்கம் செய்தவருடைய பெயரையும் நாம் இருட்டடிப்பு செய்யவில்லை

மேலும் கிதாபுத் தவ்ஹீத் நூல் ஆசிரியர் இந்த நூலினை இலவச பதிப்பிடாக கொடுத்ததால் இந்த தளத்தில் பதியப்படுகிறது மேலும் இதன் மூலம் பல விஷயங்கள் மக்கள் அறிந்து கொள்ள இலகுவாக இருக்கும் என்று நம்புகிறோம்.,

நூலாசிரியர் முன்னுரை

الحمد الله رب العاالمين والصلام علي نبيه الصادق الأمين نبينا محمد وعلي أله وصحبه أجمعين..وبعد..

இந்நூலில் தவ்ஹீது பற்றிய கல்வி உள்ளது. இதில் நான் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் வாக்கியங்களை சுருக்கி எளிய நடையில் அமைத்துள்ளேன் மேலும் நமக்கு முன்சென்ற புகழ்பெற்ற மார்க்க அறிஞர்கள் குறிப்பாக ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா , அல்லாமா இப்னுல் கய்யிம், முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹப் மற்றும் அவர்களின் மாணவர்கள் ஆகிய அறிஞர்களின் நூல்களைத் தழுவியே இந்நூலை எழுதியுள்ளேன்.

இஸ்லாமிய மார்க்கத்தில் அகீதா ( இஸ்லாமிய கொள்கை ) தொடர்பான கல்வியே அடிப்படையான கல்வி என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்காது எனவே இந்த அடிப்படையான கல்வியை கற்பதிலும் கற்பிப்பதிலும் அதனை செயல்படுத்துவதிலும் மிகக் கவனம் தேவை. ஏனெனில் செயல்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்கப்படுவதற்கும் செயல்படுபவருக்கும் பலனாக அமைவதற்கும் அகீதா ( கொள்கை ) சரியாக இருப்பது மிக அவசியமானதாகும்.

குறிப்பாக நாம் வாழும் இக்காலத்தில் பல வழிகேடான போக்குகள் நிறைந்திருக்கின்றன. நாத்திகம் என்ற வழிகேடு, தஸ உஃப் என்ற வழிக்கேடு கப்றுகள் மற்றும் உருவங்களை வழிபடுதல் என்ற வழிகேடு மற்றும் நபி ஸல் அவர்களின் நேர்வழிக்கு மாற்றமான பித் அத் என்ற வழிகேடு இந்த வழிகேடுகள் அனைத்தும் கடும் விபரீதத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றன.

அல்குர் ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படியிலுள்ள சரியான கொள்கையையும் அதனடிப்படையில் வாழ்ந்து சென்ற ஸலஃபுகளீன் வழியையும் ஆயுதமாக கொள்ளாத வரையில் ஒரு முஸ்லிம் இவ்வழிகேடுகளிலிருந்து தப்புவது சாத்தியமற்றதாகும் . எனவே சரியான அகீதாவை கொண்டு மட்டுமே இவ்வழிகேடுகளிலிருந்து தப்ப முடியும்.

முஸ்லிம்களுக்கு சரியான கொள்கையை கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே இஸ்லாமிய அடிப்படை ஆதாரங்களீலிருந்து தகவல்களை திரட்டி கிதாபுத் தவ்ஹீத் எனும் இ ந் நூலை எழுதியுள்ளேன்!

وصاي الله وسلم علي نبينا محمد واله وصحبه...........

இப்படிக்கு
ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல்ஃபவ்ஸான்

முதல் பாடம்

மனித வாழ்க்கையில் ஏற்பட்ட முறைதவறிய நிலை இறை நிராகரிப்பு , நாத்திகம் , இணைவத்தல் மற்றும் நயவஞ்சகத்தனம் பற்றிய கண்ணோட்டம்.

கீழ்வரும் அத்தியாயங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கியுள்ளன.

முதல் அத்தியாயம் :       மனித வாழ்க்கையில் ஏற்பட்ட முறைதவறிய நிலை
இரண்டாம் அத்தியாயம் :   இணைவைத்தால் – விளக்கம் – வகைகள்
மூன்றாம் அத்தியாயம் :   இறை நிராகரிப்பு – விளக்கம் – வகைகள்
நான்காம் அத்தியாயம் :   நயவஞ்சகத்தனம் – விளக்கம் – வகைகள்

ஜந்தாம் அத்தியாயம் :   அறியாமை – பாவங்கள் – வழிகேடு – திரும்புதல் 

ஆகியவைகளின் வகைகள் மற்றும் சட்டங்கள் பற்றிய தெளிவு.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..,

**Some text edited ( Only for author intr 31/07/2017 20:54saudi time)

No comments:

Post a Comment