அத்தியாயம் : 5 ( பகுதி 02 )
كتاب الغسل
குளியல்
பாடம் : 11
குளிக்கும் போது வலக் கையில் தண்ணீர் அள்ளி இடக் கையின் மீது
ஊற்றுவது.
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا
أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ
كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ بِنْتِ
الْحَارِثِ، قَالَتْ وَضَعْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غُسْلاً
وَسَتَرْتُهُ، فَصَبَّ عَلَى يَدِهِ، فَغَسَلَهَا مَرَّةً أَوْ مَرَّتَيْنِ ـ
قَالَ سُلَيْمَانُ لاَ أَدْرِي أَذَكَرَ الثَّالِثَةَ أَمْ لاَ ـ ثُمَّ أَفْرَغَ
بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ، ثُمَّ دَلَكَ يَدَهُ بِالأَرْضِ
أَوْ بِالْحَائِطِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ
وَيَدَيْهِ، وَغَسَلَ رَأْسَهُ، ثُمَّ صَبَّ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى
فَغَسَلَ قَدَمَيْهِ، فَنَاوَلْتُهُ خِرْقَةً، فَقَالَ بِيَدِهِ هَكَذَا، وَلَمْ
يُرِدْهَا.
266 மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் வைத்து அவர்களுக்குத்
திரையிட்டேன். அப்போது அவர்கள் தம்கையில் தண்ணீர் ஊற்றி அதனை ஒரு முறை அல்லது இரு முறை
கழுவினார்கள்
அறிவிப்பாளர் சாலிம் பின் அபில் ஜஅத் (ரஹ்) அவர்கள் மூன்று முறை என்று சொன்னார்களா
அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை என சுலைமான் (பின் மிஹ்ரான் அல்அஃமஷ் -
ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். -
பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் வலக் கையால் (நீரள்ளி) இடக் கையின் மீது ஊற்றி தமது
மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள், பிறகு தமது (இடக்) கையை பூமியில் அல்லது
சுவற்றில் தேய்த்துக் கழுவினார்கள். பிறகு வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச்
சிந்தி)னார்கள்; முகத்தையும் (மூட்டு வரை) இரண்டு கைகளையும்
கழுவினார்கள்; தலையையும் கழுவினார்கள்; பிறகு உடம்புக்கு தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து
நின்று தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். அப்போது (துடைக்க) அவர்களுக்கு ஒரு துண்டைக்
கொடுத்தேன். அப்போது வேண்டாம் என்பது போல் தமது கையினால் சைகை செய்தார்கள்.
(12)باب إِذَا جَامَعَ
ثُمَّ عَادَ، وَمَنْ دَارَ عَلَى نِسَائِهِ فِي غُسْلٍ وَاحِدٍ
பாடம் : 12
ஒரு முறை தாம்பத்தியஉறவு கொண்ட பின் மீண்டும் தாம்பத்திய உறவு
கொள்வதும், (பலதார மணம் புரிந்தவர்)
தம் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொண்டபின் ஒரேயொரு முறை குளிப்பதும்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا
ابْنُ أَبِي عَدِيٍّ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ
مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، قَالَ ذَكَرْتُهُ لِعَائِشَةَ
فَقَالَتْ يَرْحَمُ اللَّهُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ، كُنْتُ أُطَيِّبُ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم، فَيَطُوفُ عَلَى نِسَائِهِ، ثُمَّ يُصْبِحُ مُحْرِمًا
يَنْضَخُ طِيبًا.
267 முஹம்மத் பின் முன்தஷிர் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:
அ(ப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், நான் வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் கட்டியவனாக
இருக்க விரும்பவில்லை எனக் கூறிய)து பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் சொன்னேன். அப்போது
ஆயிஷா (ரலி) அவர்கள், அபூ அப்திர்ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை
புரிவானாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசுவேன். அவர்கள் தம்
துணைவியர் அனைவரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு)விட்டு வருவார்கள். பிறகு காலையில்
நறுமணம் கமழக் கமழ இஹ்ராம் கட்டியிருப்பார்கள் என்று கூறினார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا
مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ حَدَّثَنَا
أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدُورُ عَلَى
نِسَائِهِ فِي السَّاعَةِ الْوَاحِدَةِ مِنَ اللَّيْلِ وَالنَّهَارِ، وَهُنَّ
إِحْدَى عَشْرَةَ. قَالَ قُلْتُ لأَنَسٍ أَوَكَانَ يُطِيقُهُ قَالَ كُنَّا
نَتَحَدَّثُ أَنَّهُ أُعْطِيَ قُوَّةَ ثَلاَثِينَ.
وَقَالَ سَعِيدٌ عَنْ قَتَادَةَ إِنَّ أَنَسًا
حَدَّثَهُمْ تِسْعُ نِسْوَةٍ.
268 கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்,
நபி (ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தம் துணைவியர்
அனைவரிடமும் சென்றுவிட்டு வந்து விடு வார்கள். (அப்போது) அவர்களுக்கு பதினோரு துணைவியர்
இருந்தனர் என்று கூறினார்கள். உடனே நான் அதற்கு நபி (ஸல்) அவர்கள் சக்தி பெற்றிருந்தார்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது
என்று நாங்கள் பேசிக் கொள்வோம் என்று கூறினார்கள்.
கத்தாதா (ரஹ்) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ்
வந்துள்ளது. அதில் (அப்போது) நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தார்கள்
என்று இடம்பெற்றுள்ளது.
(13)باب
غَسْلِ الْمَذْىِ وَالْوُضُوءِ مِنْهُ
பாடம் : 13
இச்சைக் கசிவு நீரைக் (மதீ) கழுவுவதும் அது வெளியேறியதற்காக
அங்க சுத்தி (உளூ) செய்வதும்.
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا
زَائِدَةُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ،
قَالَ كُنْتُ رَجُلاً مَذَّاءً فَأَمَرْتُ رَجُلاً أَنْ يَسْأَلَ النَّبِيَّ صلى
الله عليه وسلم لِمَكَانِ ابْنَتِهِ فَسَأَلَ فَقَالَ " تَوَضَّأْ
وَاغْسِلْ ذَكَرَكَ ".
269 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இச்சைக் கசிவு நீர் (மதீ) அதிகமாக வெளியேறும் ஆடவனாக நான் இருந்தேன். நபி (ஸல்)
அவர்களின் புதல்வி (ஃபாத்திமா என் மண பந்தத்தில்) இருந்ததால் இது பற்றிக் கேட்குமாறு
(வேறு) ஒருவரை நான் பணித்தேன். அவர் (அது குறித்துக்) கேட்ட போது, (அவ்வாறு இச்சைக் கசிவு நீர் வெளியேறினால்) உளூ செய்து கொள்வீராக!
(குளிக்க வேண்டியதில்லை. ஆனால்,) பிறவி உறுப்பைக் கழுவிக் கொள்வீராக
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(14)باب مَنْ تَطَيَّبَ
ثُمَّ اغْتَسَلَ وَبَقِيَ أَثَرُ الطِّيبِ
பாடம் : 14
வாசனைத் திரவியம் பூசிய ஒருவரிடம் குளித்த பின்னரும்கூட நறுமணம்
நீடித்துக் கொண்டிருப்பது.
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا أَبُو
عَوَانَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ،
قَالَ سَأَلْتُ عَائِشَةَ فَذَكَرْتُ لَهَا قَوْلَ ابْنِ عُمَرَ مَا أُحِبُّ أَنْ
أُصْبِحَ، مُحْرِمًا أَنْضَخُ طِيبًا. فَقَالَتْ عَائِشَةُ أَنَا طَيَّبْتُ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ طَافَ فِي نِسَائِهِ ثُمَّ أَصْبَحَ
مُحْرِمًا.
270 முஹம்மத் பின் முன்தஷிர் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், நான் வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக்
காலையில் இஹ்ராம் கட்டியவனாக இருப்பதை விரும்புவதில்லை எனக் கூறியதைக் குறிப்பிட்டு
ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேள்வி கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (இரவில்) வாசனைத்
திரவியங்கள் பூசினேன். அவர்கள் தம் துணைவியர் அனைவரிடமும் சென்றுவிட்டுப் பின்னர் காலையில்
இஹ்ராம் கட்டியவர்களாக இருப்பார்கள் என்று கூறினார்கள்.
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ
حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ،
قَالَتْ كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي مَفْرِقِ النَّبِيِّ صلى
الله عليه وسلم وَهْوَ مُحْرِمٌ.
271 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் தலைவகிட்டில் (அவர்கள் இரவில் பூசியிருந்த) வாசனைத் திரவியத்தின்
மினுமினுப்பை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம்
அணிந்தே இருந்தார்கள்.
(15)باب تَخْلِيلِ
الشَّعَرِ حَتَّى إِذَا ظَنَّ أَنَّهُ قَدْ أَرْوَى بَشَرَتَهُ أَفَاضَ عَلَيْهِ
பாடம் : 15
தலை முடியைக் கோதுவதும் தலையின் சருமம் நன்றாக நனைந்து விட்டதாகக்
தெரிந்த பின்னர் தலையில் தண்ணீரை ஊற்றுவதும்.
حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ
اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ
قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا اغْتَسَلَ
مِنَ الجَنَابَةِ، غَسَلَ يَدَيْهِ، وَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، ثُمَّ
اغْتَسَلَ، ثُمَّ يُخَلِّلُ بِيَدِهِ شَعَرَهُ، حَتَّى إِذَا ظَنَّ أَنَّهُ قَدْ
أَرْوَى بَشَرَتَهُ، أَفَاضَ عَلَيْهِ المَاءَ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ
سَائِرَ جَسَدِهِ»
272 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக குளிக்கத் தலைப் பட்டால்
(முதலில்) தம்மிரு (முன்)கை களையும் கழுவுவார்கள்: தொழுகைக்காக செய்வது போன்று உளூவும்
செய்வார்கள். பிறகே குளிப்பார்கள். (ஈரக்)கையால் தலை முடியைக் கோதிவிடுவார்கள். தலையின்
சருமம் நன்றாக நனைந்து விட்டதாகத் தெரியவந்ததும் தம் (தலை) மீது மூன்று முறை தண்ணீர்
ஊற்றுவார்கள். பின்னர் உடலின் இதர பாகங்களைக் கழுவுவார்கள்.
وَقَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، نَغْرِفُ مِنْهُ جَمِيعًا»
273 ஆயிஷா (ரலி) கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். நாங்கள் இருவரும்
சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீர் அள்ளுவோம்.
(16) بَابُ مَنْ
تَوَضَّأَ فِي الْجَنَابَةِ ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ، وَلَمْ يُعِدْ، غَسْلَ
مَوَاضِعِ الْوُضُوءِ مَرَّةً أُخْرَى
பாடம் : 16
பெருந்துடக்கின் (கடமையான) குளிப்பை நிறைவேற்றுவதற்காக உளூச்
செய்து குளித்த பின்னர் உளூச் செய்த உறுப்புகளை மீண்டும் கழுவாமலிருப்பது.
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ أَخْبَرَنَا
الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمٍ، عَنْ
كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، قَالَتْ
وَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَضُوءًا لِجَنَابَةٍ فَأَكْفَأَ
بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ مَرَّتَيْنِ، أَوْ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ فَرْجَهُ،
ثُمَّ ضَرَبَ يَدَهُ بِالأَرْضِ ـ أَوِ الْحَائِطِ ـ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا،
ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى
رَأْسِهِ الْمَاءَ، ثُمَّ غَسَلَ جَسَدَهُ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ رِجْلَيْهِ.
قَالَتْ فَأَتَيْتُهُ بِخِرْقَةٍ، فَلَمْ يُرِدْهَا، فَجَعَلَ يَنْفُضُ
بِيَدِهِ.
274 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பெருந்துடக்கி(ன் கடமையான குளிப்பி)ற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர்
(வாங்கி) வைத்துக் கொண்டு தமது வலக் கையால் (தண்ணீரை அள்ளி) தமது இடக் கையின் மீது
இரண்டு முறை அல்லது மூன்று முறை ஊற்றி (க் கழுவி)னார்கள். பிறகு மர்மஸ்தானத்தைக் கழுவினார்கள்.
பிறகு தமது கையை தரையில் அல்லது சுவற்றில் தேய்த்து இரண்டு முறை அல்லது மூன்று முறை
(தண்ணீர் விட்டுக்) கழுவினார்கள். பிறகு வாய்கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி (ச் சிந்தி)னார்கள். மேலும் தமது
முகத்தையும் (மூட்டு வரை) கைகளையும் கழுவினார்கள். பிறகு உடலின் மற்ற பகுதிகளைக் கழுவினார்கள்.
பிறகு சற்று நகர்ந்து நின்று தமது இரு கால்களையும் கழுவினார்கள். நான் (துடைப்பதற்காக)
அவர்களிடம் துண்டு ஒன்றைக் கொடுத்தேன். ஆனால் அதை அவர்கள் விரும்பாமல் தமது கையால்
தண்ணீரை (வழித்து) உதறலானார்கள்.
(17)باب إِذَا ذَكَرَ
فِي الْمَسْجِدِ أَنَّهُ جُنُبٌ يَخْرُجُ كَمَا هُوَ وَلاَ يَتَيَمَّمُ
பாடம் : 17
தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டது பற்றி பள்ளிவாசலில் வைத்து ஒருவருக்கு
நினைவுக்கு வந்தால் அவர் அப்படியே பள்ளியிலிருந்து வெளியேறிவிட வேண்டும். (அதற்கு முன்)
தயம்மும் செய்ய வேண்டிய தில்லை.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا
عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي
سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ، وَعُدِّلَتِ
الصُّفُوفُ قِيَامًا، فَخَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
فَلَمَّا قَامَ فِي مُصَلاَّهُ ذَكَرَ أَنَّهُ جُنُبٌ فَقَالَ لَنَا : "
مَكَانَكُمْ ". ثُمَّ رَجَعَ فَاغْتَسَلَ، ثُمَّ خَرَجَ إِلَيْنَا
وَرَأْسُهُ يَقْطُرُ، فَكَبَّرَ فَصَلَّيْنَا مَعَهُ. تَابَعَهُ عَبْدُ
الأَعْلَى عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ. وَرَوَاهُ الأَوْزَاعِيُّ عَنِ
الزُّهْرِيِّ.
275 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டு, தொழுகை அணிகள் சரி செய்யப்பட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். தாம் தொழும் தளத்தில் அவர்கள் போய் நின்றபோது
தாம் பெருந்துடக்குடனிருப்பது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே எங்களிடம், உங்கள் இடத்திலேயே நில்லுங்கள் என்று கூறிவிட்டு (தமது வீட்டிற்குத்)
திரும்பிச் சென்று குளித்தார்கள். பிறகு தலையிலிருந்து தண்ணீர் சொட்ட சொட்ட எங்களிடம்
வந்தார்கள். தக்பீர் சொல்லி தொழுகை நடத்தினார்கள்; அவர்களுடன் நாங்களும் தொழுதோம்.
இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(18)باب نَفْضِ
الْيَدَيْنِ مِنَ الْغُسْلِ عَنِ الْجَنَابَةِ
பாடம் : 18
பெருந்துடக்கிற்காகக் குளித்த பின்னர் இரு கைகளையும் உதறுவது.
حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا أَبُو
حَمْزَةَ، قَالَ سَمِعْتُ الأَعْمَشَ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ
عَبَّاسٍ، قَالَ قَالَتْ مَيْمُونَةُ وَضَعْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم
غُسْلاً، فَسَتَرْتُهُ بِثَوْبٍ، وَصَبَّ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا، ثُمَّ صَبَّ
بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ، فَضَرَبَ بِيَدِهِ الأَرْضَ
فَمَسَحَهَا، ثُمَّ غَسَلَهَا فَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ
وَذِرَاعَيْهِ، ثُمَّ صَبَّ عَلَى رَأْسِهِ، وَأَفَاضَ عَلَى جَسَدِهِ، ثُمَّ
تَنَحَّى فَغَسَلَ قَدَمَيْهِ، فَنَاوَلْتُهُ ثَوْبًا فَلَمْ يَأْخُذْهُ،
فَانْطَلَقَ وَهْوَ يَنْفُضُ يَدَيْهِ.
276 மைமூனா(ரலி) கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் வைத்து ஒரு ஆடையில் அவர்களுக்குத்
திரையிட்டேன். அவர்கள் (முதலில்) தமது கைகளின் மீது தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள்.
பிறகு தமது வலக் கையால் (தண்ணீர் அள்ளி) இடக் கரத்தில் தண்ணீர் ஊற்றி தமது மர்மஸ்தானத்தைக்
கழுவினார்கள்; வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி (ச் சிந்தி)னார்கள். மேலும் தமது
முகத்தையும் (மூட்டு வரை) இரு கைகளையும் கழுவினார்கள்: பிறகு தமது தலையில் தண்ணீர்
ஊற்றினார்கள்: தமது உடம்பிற்கும் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று
தமது பாதங்களைக் கழுவினார்கள். (குளித்த) உடன் அவர்களிடம் நான் (துடைப்பதற்கு) ஒரு
துணியைக் கொடுத்தேன். ஆனால் அதை அவர்கள் வாங்கிக் கொள்ளவல்லை; தம் கைகளை உதறிக் கொண்டே சென்றுவிட்டார்கள்.
(19)باب مَنْ بَدَأَ
بِشِقِّ رَأْسِهِ الأَيْمَنِ فِي الْغُسْلِ
பாடம் : 19
குளிக்கும் போது தலையின் வலப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தல்.
حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ
شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنَّا إِذَا أَصَابَتْ إِحْدَانَا جَنَابَةٌ،
أَخَذَتْ بِيَدَيْهَا ثَلاَثًا فَوْقَ رَأْسِهَا، ثُمَّ تَأْخُذُ بِيَدِهَا عَلَى
شِقِّهَا الأَيْمَنِ، وَبِيَدِهَا الأُخْرَى عَلَى شِقِّهَا الأَيْسَرِ.
277 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவி யரானன எங்களில் ஒருவருக்கு பெருந்துடக்கு ஏற்பட்டால்
இரு கைகளிலும் தண்ணீர் அள்ளி ஊற்றிக் குளிப்போம். பின்னர் கையால் தண்ணீர் அள்ளி (தலை
முதல் கால் வரை) வலப் பக்கம் ஊற்றுவோம். மற்றொரு கையினால் தண்ணீர் அள்ளி இடப் பக்கம்
ஊற்றுவோம்.
(20)باب مَنِ اغْتَسَلَ
عُرْيَانًا وَحْدَهُ فِي الْخَلْوَةِ، وَمَنْ تَسَتَّرَ فَالتَّسَتُّرُ أَفْضَلُ
பாடம் : 20
அறைக்குள் ஒருவர், தனியாகக் குளிக்கும் போது ஆடையின்றி குளிக்கலாம்; மறைத்துக் கொண்டு குளிப்பது காலச் சிறந்தது.
وَقَالَ بَهْزٌ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنِ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا
مِنْهُ مِنَ النَّاسِ».
ஒருவர் மனிதர்களைக் கண்டு வெட்கப்படுவதைவிட, அல்லாஹ்விடம் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன் என
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா பின் ஹைதா (ரலி) அறிவித்துள் ளார்கள்.
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا
عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي
هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كَانَتْ بَنُو
إِسْرَائِيلَ يَغْتَسِلُونَ عُرَاةً، يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ، وَكَانَ
مُوسَى يَغْتَسِلُ وَحْدَهُ، فَقَالُوا وَاللَّهِ مَا يَمْنَعُ مُوسَى أَنْ
يَغْتَسِلَ مَعَنَا إِلاَّ أَنَّهُ آدَرُ، فَذَهَبَ مَرَّةً يَغْتَسِلُ، فَوَضَعَ
ثَوْبَهُ عَلَى حَجَرٍ، فَفَرَّ الْحَجَرُ بِثَوْبِهِ، فَخَرَجَ مُوسَى فِي
إِثْرِهِ يَقُولُ ثَوْبِي يَا حَجَرُ. حَتَّى نَظَرَتْ بَنُو إِسْرَائِيلَ إِلَى
مُوسَى، فَقَالُوا وَاللَّهِ مَا بِمُوسَى مِنْ بَأْسٍ. وَأَخَذَ ثَوْبَهُ،
فَطَفِقَ بِالْحَجَرِ ضَرْبًا ". فَقَالَ أَبُو هُرَيْرَةَ وَاللَّهِ
إِنَّهُ لَنَدَبٌ بِالْحَجَرِ سِتَّةٌ أَوْ سَبْعَةٌ ضَرْبًا بِالْحَجَرِ.
278 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே வெறும் மேனியுடன்
குளிப்பது வழக்கம். மூசா (அலை) அவர்கள் தனியாகவே குளிப்பார்கள். இதனால் அல்லாஹ்வின்
மீதானையாக! மூசா குடலிறக்க நோயாளியாய் இருப்பதனால்தான் அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை
என பனூ இஸ்ராயீல் சமூகத்தினர் (குறை) கூறினார்கள்.
ஒரு முறை மூசா (அலை) அவர்கள் குளிக்கப் போனார்கள். அப்போது அவர்கள் தமது ஆடையை(க்
கழற்றி) ஒரு கல்லின் மீது வைத்தார்கள். அந்தக் கல் அவர்களுடைய துணியுடன் ஓடியது. மூசா
(அலை) அவர்கள் அதனைப் பின்தொடர்ந்து,
கல்லே எனது துணி! கல்லே எனது துணி!
என்று குரல் எழுப்பி(யபடி ஓடி)னார்கள். (ஆடையில்லா கோலத்துடன் பனூ இஸ்ராயீல் சமுதாயம்
குளித்துக் கொண்டிருந்த பகுதிக்கு அவர்கள் வந்து சேர்ந்த போது) பனூ இஸ்ராயீல் சமுதாயத்தினர்
மூசா (அலை) அவர்களை (வெறும் மேனியுடன்) பார்த்து விட்டு, அல்லாஹ்வின் மீதாணையாக ! மூசாவிற்கு எந்தக் கோளாறுமில்லை என்று
கூறினர்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வின் மீதானையாக! மூசா (அலை) அவர்கள் (தமது கையிலிருந்த தடியால்) கல்லின்
மீது அடித்த காரணத்தால் ஆறு அல்லது ஏழு தழும்புகள் அந்தக் கல்லில் பதிந்து விட்டன.
وَعَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه
وسلم قَالَ " بَيْنَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا فَخَرَّ عَلَيْهِ
جَرَادٌ مِنْ ذَهَبٍ، فَجَعَلَ أَيُّوبُ يَحْتَثِي فِي ثَوْبِهِ، فَنَادَاهُ
رَبُّهُ يَا أَيُّوبُ، أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ عَمَّا تَرَى قَالَ بَلَى
وَعِزَّتِكَ وَلَكِنْ لاَ غِنَى بِي عَنْ بَرَكَتِكَ ". وَرَوَاهُ
إِبْرَاهِيمُ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ صَفْوَانَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَا
أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا ".
279 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அய்யூப் (அலை) அவர்கள் வெறும் மேனியுடன் குளித்துக் கொண்டிருந்த போது தங்க வெட்டுக்கிளி
ஒன்று அவர்கள் மீது விழுந்தது. உடனே அய்யூப் (அலை) அவர்கள் அதை தம் துணியால் பிடிக்கப்போனார்கள்.
அப்போது அவர்களின் இறைவன் அவர்களை அழைத்து,
அய்யூபே! நீங்கள் பார்க்கின்ற இந்த(ச்
செல்வ) நிலை உங்களுக்குத் தேவையில்லை என்ற நிலையில் நான் உங்களை (தன்னிறைவுடையவராக)
வைத்திருக்கவில்லையா? என்று கேட்டான். அதற்கு ஆம், உன் வலிமையின் மீதாணையாக! (உண்மைதான்.) ஆயினும் உன் (செல்வ)
மேம்பாடு (பரக்கத்) எனக்குத் தேவைப்படு கின்றதே! என்று அய்யூப் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது. மற்றோர் அறிவிப்பாளர்தொடர்
வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
No comments:
Post a Comment