அத்தியாயம் : 5 ( பகுதி 03 )
كتاب الغسل
குளியல்
(21)باب التَّسَتُّرِ فِي الْغُسْلِ عِنْدَ النَّاسِ
பாடம் : 21
மக்களிடையே குளிக்கும் போது திரையிட்டு மறைத்துக் கொள்ளுதல்.
٢٨٠حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى
عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ
أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ،
تَقُولُ ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ،
فَوَجَدْتُهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ تَسْتُرُهُ فَقَالَ " مَنْ هَذِهِ
". فَقُلْتُ أَنَا أُمُّ هَانِئٍ.
280 உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் சென்றேன்.
(வெற்றிகிட்டிய அந்த நாளில்) நபி (ஸல்) அவர்களை, (அவர் களுடைய புதல்வி) ஃபாத்திமா திரையிட்டு
மறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன்.
(அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன்.) அப்போது அவர்கள் யாரம்மா இவர்? எனக் கேட் டார்கள். நான் அபூதாலிபின் புதல்வி உம்மூ ஹானீ என்று பதிலளித்தேன்.
٢٨١حَدَّثَنَا
عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ
الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ
عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، قَالَتْ سَتَرْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم
وَهُوَ يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ، فَغَسَلَ يَدَيْهِ ثُمَّ صَبَّ بِيَمِينِهِ
عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ، وَمَا أَصَابَهُ، ثُمَّ مَسَحَ بِيَدِهِ
عَلَى الْحَائِطِ أَوِ الأَرْضِ، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، غَيْرَ
رِجْلَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى جَسَدِهِ الْمَاءَ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ
قَدَمَيْهِ. تَابَعَهُ أَبُو عَوَانَةَ وَابْنُ فُضَيْلٍ فِي السَّتْرِ.
281 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கினால் (கடமையானக் குளியலைக்) குளித்துக் கொண்டி
ருக்கம் போது அவர்களுக்கு நான் திரையிட்டேன். அவர்கள் (முதலில்) தம்மிரு கைகளையும்
(மணிக்கட்டுகள் வரைக்) கழுவினார்கள். பிறகு தமது வலக் கையினால் (தண்ணீர் அள்ளி) இடக்
கையின் மீது ஊற்றி தமது மர்மஸ்தானத்தையும் அதில் பட்டிருந்த (இந்திரியத்)தையும் கழுவினார்கள்.
பிறகு (அந்தக்)கையை சுவரின் மீதோ அல்லது தரையின் மீதோ தேய்த்தார்கள். பிறகு இரு கால்களைத்
தவிர மற்ற உளூவின் உறுப்புகளுக்கு) தொழுகைக்காகச் செய்வது போன்று உளூ செய்தார்கள்.
பிறகு தம் உடம்பிற்குத் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சிறிது நகர்ந்து தம்மிரு பாதங்களையும்
கழுவினார்கள்.
குளிக்கும் போது திரையிட்டுக் கொள்வது தொடர்பாக அபூஅவானா (ரஹ்), இப்னு புளைல் (ரஹ்)
ஆகியோர் அஃமஷ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பிலும் இடம் பெற்றுள்ளது.
(22)باب إِذَا احْتَلَمَتِ الْمَرْأَةُ
பாடம் : 22
பெண்களுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால்...
٢٨٢حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ
عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ
سَلَمَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ
امْرَأَةُ أَبِي طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا
رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، هَلْ عَلَى
الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا هِيَ احْتَلَمَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم " نَعَمْ إِذَا رَأَتِ الْمَاءَ ".
282 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதல்ஹா (ரலி) அவர்களின் மனைவி உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கூற
அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது
குளியல் கடமையா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; (விழித்தெழும் போது தன் மீது) அவள் (மதன) நீரைக் கண்டால் (குளியல் அவள் மீது கடமைதான்)
என்று பதிலளித்தார்கள்.
(23)باب عَرَقِ الْجُنُبِ
وَأَنَّ الْمُسْلِمَ لاَ يَنْجُسُ
பாடம்: 23
பெருந்துடக்குடையவரின் வியர்வையும், (பெருந்துடக்கினால்) ஒரு
முஸ்லிம் அசுத்தமாகி விடுவதில்லை என்பதும்.
٢٨٣حَدَّثَنَا
عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا
حُمَيْدٌ، قَالَ حَدَّثَنَا بَكْرٌ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَقِيَهُ فِي بَعْضِ طَرِيقِ الْمَدِينَةِ
وَهْوَ جُنُبٌ، فَانْخَنَسْتُ مِنْهُ، فَذَهَبَ فَاغْتَسَلَ، ثُمَّ جَاءَ فَقَالَ
" أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ ". قَالَ كُنْتُ جُنُبًا،
فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ وَأَنَا عَلَى غَيْرِ طَهَارَةٍ. فَقَالَ "
سُبْحَانَ اللَّهِ، إِنَّ الْمُؤْمِنَ لاَ يَنْجُسُ ".
283 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பெருந்துடக்கு ஏற்பட்டவனாய் (குளியல் கடமையான நிலையில்) நான் மதீனாவின் ஒரு சாலையில்
நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். உடனே
நான் அவர்களிடமிருந்து (நழுவிச்) சென்று மறைந்து கொண்டேன். உடனே நான் (வீட்டிற்குச்)
சென்று குளித்து விட்டு வந்தேன். (இவ்வளவு நேரம்) எங்கிருந்தாய், அபூஹுரைரா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
நான் பெருந்துடக்குடைவனாய் இருந்தேன். சுத்தமில்லாமல் தங்கள் அருகே அமர்வதை நான் வெறுத்தேன்
என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள்,
சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) ஒரு
முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்மாகி விட மாட்டார் என்று கூறினார்கள்.
(24)باب الْجُنُبُ
يَخْرُجُ وَيَمْشِي فِي السُّوقِ وَغَيْرِهِ
பாடம் : 24
பெருந்துடக்கு ஏற்பட்டவர் (குளிக்காமல் வீட்டிலிருந்து) வெளியேறலாம்; கடைவீதி முதலிய இடங்களில் நடக்கலாம்.
وَقَالَ عَطَاءٌ يَحْتَجِمُ الْجُنُبُ وَيُقَلِّمُ
أَظْفَارَهُ، وَيَحْلِقُ رَأْسَهُ، وَإِنْ لَمْ يَتَوَضَّأْ.
பெருந்துடக்கு ஏற்பட்டவர் உளூ செய்யாமல் குருதி உறிஞ்சி எடுக்கலாம்; தமது நகங்களை வெட்டிக் கொள்ளலாம்; தலைமுடி மழித்துக் கொள்ளலாம் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
٢٨٤حَدَّثَنَا
عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ
حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، حَدَّثَهُمْ
أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَطُوفُ عَلَى نِسَائِهِ فِي
اللَّيْلَةِ الْوَاحِدَةِ، وَلَهُ يَوْمَئِذٍ تِسْعُ نِسْوَةٍ.
284 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்று வருவார்கள். அன்று
அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர்.
٢٨٥حَدَّثَنَا
عَيَّاشٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ بَكْرٍ،
عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ لَقِيَنِي رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم وَأَنَا جُنُبٌ، فَأَخَذَ بِيَدِي، فَمَشَيْتُ مَعَهُ حَتَّى
قَعَدَ فَانْسَلَلْتُ، فَأَتَيْتُ الرَّحْلَ، فَاغْتَسَلْتُ ثُمَّ جِئْتُ وَهْوَ
قَاعِدٌ فَقَالَ " أَيْنَ كُنْتَ يَا أَبَا هِرٍّ " فَقُلْتُ
لَهُ. فَقَالَ " سُبْحَانَ اللَّهِ يَا أَبَا هِرٍّ إِنَّ الْمُؤْمِنَ
لاَ يَنْجُسُ ".
285 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பெருந்துடக்குடனிருந்த என்னை (மதீனாவின் ஒரு சாலையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் சந்தித்து, என்னுடைய கையைப் பிடித்தார்கள். அவர்களுடன்
நான் நடந்தேன். அவர்கள் அமர்ந்த உடன் நான் (அங்கிருந்து) நழுவிச் சென்று வீட்டிற்குப்
போய் குளித்து விட்டு வந்தேன். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டி ருந்தார்கள்.
(என்னைக் கண்டதும்) எங்கே இருந்தாய்?
என்று கேட்டார்கள். நான் (எனது நிலையை)
அவர்களிடம் சொன்னேன். அப்போது, சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) அபூஹிர்!
ஓர் இறை நம்பிக்கையாளர் (பெருந்துடக்கினால்) அசுத்தமாகி விட மாட்டார் என்று சொன்னார்கள்.
(25)باب كَيْنُونَةِ
الْجُنُبِ فِي الْبَيْتِ إِذَا تَوَضَّأَ قَبْلَ أَنْ يَغْتَسِلَ
பாடம் : 25
பெருந்துடக்கு ஏற்பட்டவர் (கடமையான) குளியலை நிறைவேற்றாமல் உளூசெய்து
கொண்டு வீட்டில் தங்கியிருத்தல்.
٢٨٦حَدَّثَنَا
أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، وَشَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي
سَلَمَةَ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم
يَرْقُدُ وَهْوَ جُنُبٌ قَالَتْ نَعَمْ وَيَتَوَضَّأُ.
286 அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு
(குளியல் கடமையாகி) இருக்கும் நிலையில் உறங்குவார்களா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ஆம்; ஆயினும் (உறங்கும் முன்) உளூ செய்து
கொள்வார்கள் என்று பதிலளித்தார்கள்.
(26)باب
نَوْمِ الْجُنُبِ
பாடம் : 26
குளியல் கடமையானவர் உறங்குவது.
٢٨٧حَدَّثَنَا
قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ
عُمَرَ بْنَ الْخَطَّابِ، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَيَرْقُدُ
أَحَدُنَا وَهْوَ جُنُبٌ قَالَ " نَعَمْ إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَرْقُدْ
وَهُوَ جُنُبٌ ".
287 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், எங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக (பெருந்துடக்குடன்) இருக்கும்
நிலையில் உறங்கலாமா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; உங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக (பெருந்துடக்குடன்) இருந்தாலும் அவர் உளூ
செய்து விட்டு உறங்கலாம் என்று பதிலளித்தார்கள்.
(27)باب
الْجُنُبِ يَتَوَضَّأُ ثُمَّ يَنَامُ
பாடம் : 27
குளியல் கடமையானவர் (உறங்க நாடினால்) உளூ செய்து விட்டு உறங்கலாம்.
٢٨٨حَدَّثَنَا
يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ
أَبِي جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُرْوَةَ، عَنْ
عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ
يَنَامَ وَهْوَ جُنُبٌ، غَسَلَ فَرْجَهُ، وَتَوَضَّأَ لِلصَّلاَةِ.
288 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குளியல் கடமையாகி (பெருந்துடக்குடன்) இருக்கும் நிலையில் உறங்க
நினைத்தால் தமது மர்மஸ்தானத்தைக் கழுவிட்டு தொழுகைக்குரிய உளூ செய்வார்கள். (அதன் பின்னர்
உறங்குவார்கள்.)
٢٨٩حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ
عَبْدِ اللَّهِ، قَالَ اسْتَفْتَى عُمَرُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيَنَامُ
أَحَدُنَا وَهْوَ جُنُبٌ قَالَ " نَعَمْ، إِذَا تَوَضَّأَ ".
289 அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள்,
எங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக
இருக்கும் நிலையில் (குளிக்காமல்) உறங்கலாமா?
என கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்; உளூ செய்து விட்டு (உறங்கலாம்.) என்று
பதிலளித்தார்கள்.
٢٩٠حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ
بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ ذَكَرَ عُمَرُ
بْنُ الْخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ تُصِيبُهُ
الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
" تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ ثُمَّ نَمْ ".
290 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விடுவது
பற்றிக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ செய்யுங்கள்; உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள் என்றார்கள்.
(28)باب
إِذَا الْتَقَى الْخِتَانَانِ
பாடம் : 28
ஆண்-பெண் பாலுறுப்புகள் சந்தித்து விட்டால்...
٢٩١حَدَّثَنَا
مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، ح وَحَدَّثَنَا أَبُو
نُعَيْمٍ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي رَافِعٍ،
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا
جَلَسَ بَيْنَ شُعَبِهَا الأَرْبَعِ ثُمَّ جَهَدَهَا، فَقَدْ وَجَبَ الْغَسْلُ
". تَابَعَهُ عَمْرُو بْنُ مَرْزُوقٍ عَنْ شُعْبَةَ مِثْلَهُ. وَقَالَ
مُوسَى حَدَّثَنَا أَبَانُ قَالَ حَدَّثَنَا قَتَادَةُ أَخْبَرَنَا الْحَسَنُ
مِثْلَهُ.
291 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் மனைவியின் (இருகை இருகால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து
உள்ளீடு செய்து விட்டாரானால் அவர் மீது குளியல் கடமையாகிவிடுகிறது. (விந்து வெளியாகா
விட்டாலும் சரியே!)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதே ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
(29)باب غَسْلِ مَا
يُصِيبُ مِنْ فَرْجِ الْمَرْأَةِ
பாடம் : 29
பாலுறவின் போது பெண்ணுறுப்பிலிருந்து பட்ட ஈரக் கசிவை கழுவுவது.
٢٩٢حَدَّثَنَا
أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، قَالَ يَحْيَى
وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنَّ
زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عُثْمَانَ بْنَ
عَفَّانَ فَقَالَ أَرَأَيْتَ إِذَا جَامَعَ الرَّجُلُ امْرَأَتَهُ فَلَمْ يُمْنِ.
قَالَ عُثْمَانُ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، وَيَغْسِلُ
ذَكَرَهُ. قَالَ عُثْمَانُ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم. فَسَأَلْتُ عَنْ ذَلِكَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَالزُّبَيْرَ بْنَ
الْعَوَّامِ وَطَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ وَأُبَىَّ بْنَ كَعْبٍ ـ رضى الله
عنهم ـ فَأَمَرُوهُ بِذَلِكَ. قَالَ يَحْيَى وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ أَنَّ
عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ أَخْبَرَهُ أَنَّ أَبَا أَيُّوبَ أَخْبَرَهُ أَنَّهُ
سَمِعَ ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
292 ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம், ஒருவர் தம் மனைவியுடன் உறவு கொண்டு விந்தை வெளியேற்றாமலிருந்தால் (அவர் மீது குளியல்
கடமையாகுமா), கூறுங்கள்? என்றேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், அவர் தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள்ள வேண்டும்; தமது பிறப்புறுப்பைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
பிறகு இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன். இது குறித்து
அலீ பின் அபீதாலிப் (ரலி), ஸுபைர் பின் அவ்வாம் (ரலி), தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோரிடம் நான் கேட்ட போதும் அவர்கள்
அனைவரும் இவ்வாறே செய்யும் படி பணித்தார்கள் என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடமி ருந்து அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் செவியேற்றதாக உர்வா பின்
ஸுபைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
٢٩٣حَدَّثَنَا
مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ أَخْبَرَنِي
أَبِي قَالَ، أَخْبَرَنِي أَبُو أَيُّوبَ، قَالَ أَخْبَرَنِي أُبَىُّ بْنُ كَعْبٍ،
أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِذَا جَامَعَ الرَّجُلُ الْمَرْأَةَ فَلَمْ
يُنْزِلْ قَالَ " يَغْسِلُ مَا مَسَّ الْمَرْأَةَ مِنْهُ، ثُمَّ
يَتَوَضَّأُ وَيُصَلِّي ".
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ الْغَسْلُ أَحْوَطُ، وَذَاكَ
الآخِرُ، وَإِنَّمَا بَيَّنَّا لاِخْتِلاَفِهِمْ.
293 உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தம் மனைவியுடன்
தாம்பத்திய உறவு கொண்டார்; ஆனால் விந்தை வெளியேற்றவில்லை (இந்நிலையில்
அவர் மீது குளியல் கடமையாகுமா?) என்று கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள், மனைவியிடமிருந்து (கசிந்து) தம் மீது பட்ட இடங்களைக் கழுவிக்
கொள்ள வேண்டும். பிறகு அங்கசுத்தி (உளூ) செய்து கொண்டு தொழலாம் என்று சொன்னார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:
(பாலுறுப்புகள் சந்தித்து விட்டால்)
குளியல்தான் (மார்க்கத்தில்) பேணுதலான நடவடிக்கை யாகும். இந்த ஹதீஸ் கடைசிக் கட்டளையாகும்.
இதில் கருத்து வேறுபாடு உள்ளதால்தான் இந்த ஹதீஸை நாம் இங்கு குறிப்பிட்டோம்.
No comments:
Post a Comment