அத்தியாயம் : 8
كتاب الصلاة
தொழுகை
(11)باب الصَّلاَةِ بِغَيْرِ رِدَاءٍ
பாடம்
: 11
மேலாடையின்றித்
தொழுவது.
٣٧٠حَدَّثَنَا
عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي
الْمَوَالِي، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ دَخَلْتُ عَلَى جَابِرِ
بْنِ عَبْدِ اللَّهِ وَهُوَ يُصَلِّي فِي ثَوْبٍ مُلْتَحِفًا بِهِ وَرِدَاؤُهُ
مَوْضُوعٌ، فَلَمَّا انْصَرَفَ قُلْنَا يَا أَبَا عَبْدِ اللَّهِ تُصَلِّي
وَرِدَاؤُكَ مَوْضُوعٌ قَالَ نَعَمْ، أَحْبَبْتُ أَنْ يَرَانِي الْجُهَّالُ
مِثْلُكُمْ، رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي هَكَذَا.
370 முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ்
(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் ஒரே ஆடையை தம்மீது சுற்றியபடி தொழுது கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்களுடைய மேலாடை (துணி மாட்டும் கொளுகியில் மாட்டி) வைக்கப்பட்டிருந்தது.
தொழுது முடித்ததும் அவர்களிடம் அபூஅப்தில்லாஹ்! உங்களது மேலாடையை (மாட்டி) வைத்து விட்டு
(ஒரே ஆடையில்) தொழுகின்றீரே? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள், ஆம்; உங்களைப் போன்ற விவரம் புரியாதவர்கள்
என்னைப் பார்க்க வேண்டுமென்றே நான் விரும்பினேன். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுவதை
நான் கண்டிருக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.
(12)باب مَا يُذْكَرُ فِي الْفَخِذِ
பாடம்
: 12
தொடை (மறைக்க
வேண்டிய பகுதியா? என்பது) பற்றிய குறிப்பு.
وَيُرْوَى عَنِ ابْنِ عَبَّاسٍ وَجَرْهَدٍ وَمُحَمَّدِ
بْنِ جَحْشٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْفَخِذُ
عَوْرَةٌ».
وَقَالَ أَنَسٌ حَسَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ عَنْ فَخِذِهِ. وَحَدِيثُ أَنَسٍ أَسْنَدُ، وَحَدِيثُ جَرْهَدٍ
أَحْوَطُ حَتَّى يُخْرَجَ مِنِ اخْتِلاَفِهِمْ.
وَقَالَ أَبُو مُوسَى غَطَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ رُكْبَتَيْهِ حِينَ دَخَلَ عُثْمَانُ.
وَقَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ أَنْزَلَ اللَّهُ عَلَى
رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفَخِذُهُ عَلَى فَخِذِي فَثَقُلَتْ
عَلَيَّ حَتَّى خِفْتُ أَنْ تُرَضَّ فَخِذِي.
தொடை மறைக்க வேண்டிய பகுதியாகும்.
என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி), ஜர்ஹத் (ரலி), முஹம்மத் பின் (அப்தில்லாஹ் பின்) ஜஹ்ஷ்
(ரலி) ஆகியோர் வாயிலாக அறிவிக்கப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் தமது
தொடைப் பகுதியை திறந்தார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதில் அனஸ் (ரலி) அவர்களின்
அறிவிப்பே வலுவான அறிவிப்பாளர்தொடருடையதாகும்.
ஜர்ஹத் (ரலி) அவர்களின்
அறிவிப்பு(ப் பிரகாரம் செயல்படுவதே) மார்க்கத்தை (கவனித்து)ப் பேணுவதாகும். இவ்வாறு
கூறுவதன் மூலமே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம்..
அபூமூசா (ரலி) அவர்கள்
கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த
தோட்டத்திற்குள் உஸ்மான் (ரலி) அவர்கள் நுழைந்த போது நபி (ஸல்) அவர்கள் (திறந்திருந்த)
தமது முழங்கால்களை மூடிக் கொண்டார்கள்.
ஸைத் பின் ஸாபித் (ரலி)
அவர்கள் கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களின் தொடை எனது தொடை மீதிருக்க, அவர்கள் மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். அப்போது எனது தொடை நசுங்கிப்
போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு அவர்களின் தொடை என் மீது கனத்து (அழுத்தத்
தொடங்கி) விட்டது.
٣٧١حَدَّثَنَا
يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ،
قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم غَزَا خَيْبَرَ، فَصَلَّيْنَا عِنْدَهَا صَلاَةَ
الْغَدَاةِ بِغَلَسٍ، فَرَكِبَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم وَرَكِبَ أَبُو
طَلْحَةَ، وَأَنَا رَدِيفُ أَبِي طَلْحَةَ، فَأَجْرَى نَبِيُّ اللَّهِ صلى الله
عليه وسلم فِي زُقَاقِ خَيْبَرَ، وَإِنَّ رُكْبَتِي لَتَمَسُّ فَخِذَ نَبِيِّ
اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ حَسَرَ الإِزَارَ عَنْ فَخِذِهِ حَتَّى إِنِّي
أَنْظُرُ إِلَى بَيَاضِ فَخِذِ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم، فَلَمَّا
دَخَلَ الْقَرْيَةَ قَالَ " اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا
إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ ".
قَالَهَا ثَلاَثًا. قَالَ وَخَرَجَ الْقَوْمُ إِلَى أَعْمَالِهِمْ فَقَالُوا
مُحَمَّدٌ ـ قَالَ عَبْدُ الْعَزِيزِ وَقَالَ بَعْضُ أَصْحَابِنَا ـ
وَالْخَمِيسُ. يَعْنِي الْجَيْشَ، قَالَ فَأَصَبْنَاهَا عَنْوَةً، فَجُمِعَ
السَّبْىُ، فَجَاءَ دِحْيَةُ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ، أَعْطِنِي جَارِيَةً
مِنَ السَّبْىِ. قَالَ " اذْهَبْ فَخُذْ جَارِيَةً ". فَأَخَذَ
صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ، فَجَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم
فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ، أَعْطَيْتَ دِحْيَةَ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ
سَيِّدَةَ قُرَيْظَةَ وَالنَّضِيرِ، لاَ تَصْلُحُ إِلاَّ لَكَ. قَالَ "
ادْعُوهُ بِهَا ". فَجَاءَ بِهَا، فَلَمَّا نَظَرَ إِلَيْهَا النَّبِيُّ
صلى الله عليه وسلم قَالَ " خُذْ جَارِيَةً مِنَ السَّبْىِ غَيْرَهَا
". قَالَ فَأَعْتَقَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَتَزَوَّجَهَا.
فَقَالَ لَهُ ثَابِتٌ يَا أَبَا حَمْزَةَ، مَا أَصْدَقَهَا قَالَ نَفْسَهَا،
أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا، حَتَّى إِذَا كَانَ بِالطَّرِيقِ جَهَّزَتْهَا لَهُ
أُمُّ سُلَيْمٍ فَأَهْدَتْهَا لَهُ مِنَ اللَّيْلِ، فَأَصْبَحَ النَّبِيُّ صلى
الله عليه وسلم عَرُوسًا فَقَالَ " مَنْ كَانَ عِنْدَهُ شَىْءٌ فَلْيَجِئْ
بِهِ ". وَبَسَطَ نِطَعًا، فَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالتَّمْرِ،
وَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالسَّمْنِ ـ قَالَ وَأَحْسِبُهُ قَدْ ذَكَرَ
السَّوِيقَ ـ قَالَ فَحَاسُوا حَيْسًا، فَكَانَتْ وَلِيمَةَ رَسُولِ اللَّهِ صلى
الله عليه وسلم.
371 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
கைபர் மீது (ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு) போர் தொடுத்தார்கள். (அந்தப் போரின் போது) கைபருக்கு அருகில் (அதன்
புறநகரில்) நாங்கள் (கடைசி இரவின்) இருட்டிலேயே வைகறைத் தொழுகையைத் தொழுதோம். பிறகு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தில் ஏறி) பயணமானார்கள். அபூதல்ஹா (ரலி)
அவர்களும் (தமது வாகனத்தில் ஏறி) பயணமானார்கள். நான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப்
பின்னால் அமர்ந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் சாலையில் (தமது
வாகனத்தைச்) செலுத்தினார்கள். அப்போது எனது முழங்கால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்
தொடையில் உராய்ந்து கொண்டிருந்தது. பின்னர் அவர்கள் தமது தொடையிலிருந்த வேட்டியை விலக்கினார்கள்.
எந்த அளவிற்கென்றால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொடையின் வெண்மையைப் பார்த்தேன்.
(பிறகு) அந்த நகருக்குள் அவர்கள் பிரவேசித்த போது, அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்
கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட)
இறங்கு வோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும் என்று
மூன்று முறை கூறினார்கள். அந்த ஊர் மக்கள் தங்களது அலுவல்களுக்காப் புறப்ட்டு வந்த
போது (எங்களைக் கண்டதும்), முஹம்மது (வந்து விட்டார்.) என்று கூறினர்.
-(இதன் அறிவிப்பாளர்களில்
ஒருவரான) அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: எமது நண்பர் களில்
சிலர் (முஹம்மதும், அவரது ஐந்து அணிகள் கொண்ட) படையும் (வருகின்ற னர்) என்று அறிவித்தனர்.-
பிறகு (கைபர் வாசிகளை
ஒடுக்கி) அதை நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தோம். போர்க் கைதிகளைத்
திரட்டப்பட்ட போது திஹ்யா (அல்கல்பீ- ரலி) அவர்கள் வந்து, அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப்
பெண்ணை எனக்குத் தாருங்கள்! என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் சென்று ஓர் அடிமைப்பெண்ணைப்
பெற்றுக் கொள்ளுங்கள்! என்று சொன்னார்கள். அவ்வாறே திஹ்யா (ரலி) அவர்கள் சென்று ஸஃபிய்யா
பின்த் ஹுயை எனும் பெண்மணியைப் பெற்றுக் கொண்டார்கள். இந்நிலையில் ஒருவர் நபி (ஸல்)
அவர்களிடம்) வந்து, அல்லாஹ்வின் தூதரே குறைழா, நளீர் குலத்தாரின் தலைவியான ஸஃபிய்யா பின் ஹுயை அவர்களை திஹ்யா அவர்களுக்கு வழங்கிவிட்டீர்களே!
ஸஃபிய்யா, உங்களுக்கல்லாமல் வேறெவருக்கும் தகுதியாக
மாட்டார் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், அவரையும் அப்பெண்ணையும் அழைத்து வாருங்கள்! என்றார்கள். ஸஃபிய்யா அவர்களுடன் திஹ்யா
(ரலி) அவர்கள் வந்தார்கள். ஸஃபிய்யா அவர்களைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் திஹ்யா (ரலி)
அவர்களிடம், கைதிகளில் இவரல்லாத மற்றோர்
அடிமைப்பெண்ணை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.
(இந்த ஹதீஸை அறிவிக்கின்ற)
அனஸ் (ரலி) அவர்களிடம் ஸாபித் (அல்புனானீ -ரஹ்) அவர்கள், அபூஹம்ஸா! நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா
(ரலி) அவர்களுக்கு மணக் கொடையாக (மஹ்ர்) என்ன கொடுத்தார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், அவரையே மணக் கொடையாக ஆக்கினார்கள்; அதாவது) அவரை விடுதலை செய்வதையே மணக்
கொடையாக ஆக்கி அவரை மணந்து கொண்டார்கள் என்று பதிலளித்தார்கள். நாங்கள் (கைபரிலிருந்து
திரும்பி வரும்) வழியில் (சத்துஸ் ஸஹ்பா எனுமிடத்தில்) இருந்த போது (புது மணப்பெண்)
ஸஃபிய்யா (ரலி) அவர்களை (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக
(அலங்கார) ஆயத்தம் செய்து அன்னாரிடம் ஒப்படைத்தார்கள். புது மாப்பிள்ளையாக காலையில்
எழுந்த நபி (ஸல்) அவர்கள், எவரிடமேனும் ஏதேனும் (உணவுப்) பொருள் இருப்பின் அதை (எம்மிடம்) கொண்டு வாருங்கள்.
அப்போது (அங்கிருந்த நபித்தோழர்களில்) ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வரலானார்.
மற்றொருவர் நெய்யைக் கொண்டுவரலானார்.
-(இதன் அறிவிப்பாளர்களில்
ஒருவரான) அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அனஸ் (ரலி) அவர்கள், (மற்றொருவர்) மாவு ( கொண்டு வரலானார்
என்பது) பற்றிக் குறிப்பிட்டதாகவே நான் கருதுகிறேன்.-
அவற்றையெல்லாம் ஒன்றாகக்
கலந்து ஹைஸ் எனும் ஒருவகை பலகாரத்தை தயார் செய்தனர். அதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களின் வலீமா மண விருந்தாக அமைந்தது.
(13)باب فِي كَمْ تُصَلِّي الْمَرْأَةُ فِي الثِّيَابِ
பாடம்
: 13
ஒரு பெண்
எத்தனை ஆடைகளை அணிந்து தொழ வேண்டும்?
وَقَالَ عِكْرِمَةُ لَوْ وَارَتْ جَسَدَهَا فِي ثَوْبٍ
لأَجَزْتُهُ.
இக்ரிமா (ரஹ்) அவர்கள், ஒரு பெண் ஒரே ஆடையில் தன் உடல் முழுவதையும்
மறைத்துக் கொண்டாலும் போதுமானதாகும். என்று கூறினார்கள்.
٣٧٢حَدَّثَنَا
أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ
أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم يُصَلِّي الْفَجْرَ، فَيَشْهَدُ مَعَهُ نِسَاءٌ مِنَ
الْمُؤْمِنَاتِ مُتَلَفِّعَاتٍ فِي مُرُوطِهِنَّ ثُمَّ يَرْجِعْنَ إِلَى
بُيُوتِهِنَّ مَا يَعْرِفُهُنَّ أَحَدٌ.
372 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள் அப்போது இறை நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களது
ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்)
கலந்து கொள்வார்கள். பின்னர் தங்களது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வார்கள். அவர்களை
(யார் யார் என்று) எவரும் அறிய மாட்டார்கள்.
(14)باب إِذَا صَلَّى فِي ثَوْبٍ لَهُ أَعْلاَمٌ وَنَظَرَ
إِلَى عَلَمِهَا
பாடம்
: 14
வேலைப்பாடு
மிக்க ஆடையணிந்து தொழும் போது அதன் வேலைப்பாடு கவனத்தை ஈர்த்தால் (என்ன செய்வது?)
٣٧٣حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ
حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى
الله عليه وسلم صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ، فَنَظَرَ إِلَى
أَعْلاَمِهَا نَظْرَةً، فَلَمَّا انْصَرَفَ قَالَ " اذْهَبُوا بِخَمِيصَتِي
هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ وَائْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمٍ،
فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلاَتِي ". وَقَالَ هِشَامُ بْنُ
عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
" كُنْتُ أَنْظُرُ إِلَى عَلَمِهَا وَأَنَا فِي الصَّلاَةِ فَأَخَافُ أَنْ
تَفْتِنَنِي ".
373 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு
மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி அடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். (தொழுது கொண்டிருக்கும்
போது) அதன் வேலைப்பாடுகளை ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும், எனது இந்த கறுப்புக் கம்பளி ஆடையை
(இதை எனக்கு அன்பளித்த.) அபூஜஹ்மிடம் கொடுத்து விட்டு, அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற)
அன்பிஜான் (நகர எளிய) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று
முன்னர் எனது தொழுகையிலிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டது என்று சொன்னார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து
வரும் மற்றோர் அறிவிப்பில், நான் தொழுது கொண்டிருக்கும் போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு
இருந்தேன். அது என்னைக் குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக
இடம் பெற்றுள்ளது.
(15)بَابُ إِنْ صَلَّى فِي ثَوْبٍ مُصَلَّبٍ أَوْ تَصَاوِيرَ
هَلْ تَفْسُدُ صَلاَتُهُ وَمَا يُنْهَى عَنْ ذَلِكَ
பாடம்
: 15
சிலுவை
பொறிக்கப்பட்ட அல்லது (உயிரினங்களின்) உருவப் படம் வரையப்பட்ட ஆடையுடன் தொழுதால் தொழுகை
பாழாகிவிடுமா? என்பது பற்றியும், இவற்றுக்கு வந்துள்ள
தடை பற்றியும்.
٣٧٤حَدَّثَنَا
أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ،
قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، كَانَ قِرَامٌ
لِعَائِشَةَ سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه
وسلم " أَمِيطِي عَنَّا قِرَامَكِ هَذَا، فَإِنَّهُ لاَ تَزَالُ تَصَاوِيرُهُ
تَعْرِضُ فِي صَلاَتِي ".
374 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்களிடம்
உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த
அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி (ஸல்) அவர்கள், இந்த திரைச் சீலையை நம்மிடமி ருந்து
அகற்றிவிடு! ஏனெனில், இதிலுள்ள உருவப் படங்கள் என் தொழுகையில் (என்னிடம்) குறுக்கிட்டுக் கொண்டேயிருக்
கின்றன என்று சொன்னார்கள்.
(16)باب مَنْ صَلَّى فِي فَرُّوجِ حَرِيرٍ ثُمَّ نَزَعَهُ
பாடம்
: 16
ஒருவர்
நீண்ட பட்டு உடுப்பை அணிந்து தொழுது விட்டுப் பின்னர் அதைக் கழற்றி விடுவது.
٣٧٥حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ
أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ أُهْدِيَ إِلَى النَّبِيِّ
صلى الله عليه وسلم فَرُّوجُ حَرِيرٍ، فَلَبِسَهُ فَصَلَّى فِيهِ، ثُمَّ انْصَرَفَ
فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا كَالْكَارِهِ لَهُ وَقَالَ " لاَ يَنْبَغِي
هَذَا لِلْمُتَّقِينَ ".
375 உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஆண்கள் பட்டு அணிவது தடை செய்யப்படுவதற்கு முன்பு) நபி (ஸல்) அவர்களுக்கு (ஃபர்ரூஜ்
எனும்) நீளமான பட்டு உடுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து
கொண்டார்கள். பிறகு அதை அணிந்தபடியே (மஃக்ரிப் தொழுகை) தொழுதார்கள். பிறகு (தொழுது
விட்டுத்) திரும்பியதும், அதை வெறுப்பவர்கள் போன்று கடுமையாக (உருவிக்) கழற்றினார்கள். பிறகு, இது இறையச்சமுடையவர்களுக்கு உகந்ததன்று
எனக் கூறினார்கள்.
(17)باب الصَّلاَةِ فِي الثَّوْبِ الأَحْمَرِ
பாடம்
: 17
சிவப்பு
நிற ஆடையணிந்து தொழுவது (செல்லும்).
٣٧٦حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ حَدَّثَنِي عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ
عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم فِي قُبَّةٍ حَمْرَاءَ مِنْ أَدَمٍ، وَرَأَيْتُ بِلاَلاً أَخَذَ
وَضُوءَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرَأَيْتُ النَّاسَ يَبْتَدِرُونَ
ذَاكَ الْوَضُوءَ، فَمَنْ أَصَابَ مِنْهُ شَيْئًا تَمَسَّحَ بِهِ، وَمَنْ لَمْ
يُصِبْ مِنْهُ شَيْئًا أَخَذَ مِنْ بَلَلِ يَدِ صَاحِبِهِ، ثُمَّ رَأَيْتُ
بِلاَلاً أَخَذَ عَنَزَةً فَرَكَزَهَا، وَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم
فِي حُلَّةٍ حَمْرَاءَ مُشَمِّرًا، صَلَّى إِلَى الْعَنَزَةِ بِالنَّاسِ
رَكْعَتَيْنِ، وَرَأَيْتُ النَّاسَ وَالدَّوَابَّ يَمُرُّونَ مِنْ بَيْنِ يَدَىِ
الْعَنَزَةِ.
376 அபூஜுஹைஃபா (வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ-ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜின் போது அப்தஹ் எனுமிடத்தில்) தோ-னாலான சிவப்பு நிற கூடாரமொன்றில் (தங்கியிருந்த)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
உளூ (அங்கசுத்தி) செய்து விட்டு எஞ்சிய தண்ணீரை பிலால் (ரலி) அவர்கள் எடுத்துவருவதைக்
கண்டேன். மேலும்யும், அந்த எஞ்சியத் தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக் கொள்வதையும் நான் பார்த்தேன்.
அந்தத் தண்ணீரில் சிறிது கிடைத்த ஒருவர் அதைத் (தமது உடம்பில்) தடவிக் கொண்டார்.
பிறகு பிலால் (ரலி) அவர்கள்
ஒரு (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்றை எடுத்து வந்து அதை ஊன்றுவதை நான் கண்டேன்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேலங்கியை (தமது கணைக்கால்கள் தெரியுமளவிற்கு) உயர்த்திப்பிடித்தபடி
வெளியில் வந்து (தடுப்பாக வைக்கப் பட்டிருந்த) அந்த கைத்தடியை நோக்கி மக்களுடன் இரண்டு
ரக்அத்கள் தொழுதார்கள். அந்த கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் கால் நடைகளும் கடந்து
செல்வதையும் நான் பார்த்தேன்.
(18)باب الصَّلاَةِ فِي السُّطُوحِ وَالْمِنْبَرِ
وَالْخَشَبِ
பாடம்
: 18
மாடியிலும்
மேடையிலும் மரப்பலகையிலும் தொழுவது.
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَلَمْ يَرَ الْحَسَنُ
بَأْسًا أَنْ يُصَلَّى عَلَى الْجَمْدِ وَالْقَنَاطِرِ، وَإِنْ جَرَى تَحْتَهَا
بَوْلٌ أَوْ فَوْقَهَا أَوْ أَمَامَهَا، إِذَا كَانَ بَيْنَهُمَا سُتْرَةٌ.
وَصَلَّى أَبُو هُرَيْرَةَ عَلَى ظَهْرِ الْمَسْجِدِ
بِصَلاَةِ الإِمَامِ.
وَصَلَّى ابْنُ عُمَرَ عَلَى الثَّلْجِ.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய
நான்) கூறுகின்றேன்:
பனிக்கட்டியின் மீதும்
பாலத்தின் மீதும் தொழுவது தவறில்லை; அதற்குக் கீழே அல்லது மேலே அல்லது முன்பக்கத்தில்
மூத்திரம் (போன்றவை) இருந்தாலும் சரியே! ஆனால், தொழுபவருக்கும் அந்த பாலத்திற்கும்
இடையில் (அசுத்தம் சேராதபடி) தடுப்பு ஏதேனும் இருக்க வேண்டும் என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்)
அவர்கள் கருதினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
இமாமைப் பின்தொடர்ந்து பள்ளிவாசலின் கூரை (மாடி)யில் நின்று தொழுதார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள்
பனிக் கட்டியின் மேல் நின்று தொழுதார்கள்.
٣٧٧حَدَّثَنَا
عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا أَبُو
حَازِمٍ، قَالَ سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ مِنْ أَىِّ شَىْءٍ الْمِنْبَرُ
فَقَالَ مَا بَقِيَ بِالنَّاسِ أَعْلَمُ مِنِّي هُوَ مِنْ أَثْلِ الْغَابَةِ،
عَمِلَهُ فُلاَنٌ مَوْلَى فُلاَنَةَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم،
وَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ عُمِلَ، وَوُضِعَ،
فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ كَبَّرَ وَقَامَ النَّاسُ خَلْفَهُ، فَقَرَأَ وَرَكَعَ
وَرَكَعَ النَّاسُ خَلْفَهُ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ رَجَعَ الْقَهْقَرَى،
فَسَجَدَ عَلَى الأَرْضِ، ثُمَّ عَادَ إِلَى الْمِنْبَرِ، ثُمَّ قَرَأَ ثُمَّ
رَكَعَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ رَجَعَ الْقَهْقَرَى حَتَّى سَجَدَ
بِالأَرْضِ، فَهَذَا شَأْنُهُ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ عَلِيُّ بْنُ
عَبْدِ اللَّهِ سَأَلَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ـ رَحِمَهُ اللَّهُ ـ عَنْ هَذَا
الْحَدِيثِ، قَالَ فَإِنَّمَا أَرَدْتُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ
أَعْلَى مِنَ النَّاسِ، فَلاَ بَأْسَ أَنْ يَكُونَ الإِمَامُ أَعْلَى مِنَ
النَّاسِ بِهَذَا الْحَدِيثِ. قَالَ فَقُلْتُ إِنَّ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ
كَانَ يُسْأَلُ عَنْ هَذَا كَثِيرًا فَلَمْ تَسْمَعْهُ مِنْهُ قَالَ لاَ.
377 அபூஹாஸிம் (சலமா பின் தீனார்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மக்களில் சிலர்) சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் பயன் படுத்திய)
அந்த சொற்பொழிவு மேடை (மிம்பர்) எதனால் செய்யப்பட்டது? என்று வினவினர். அதற்கு சஹ்ல் (ரலி)
அவர்கள், மக்களில் என்னைவிட (இது பற்றி) நன்கு
தெரிந்தவர்கள் எவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. அது ஒரு வகை சவுக்கு மரத்தினால்
செய்யப்பட்டதாகும்; அதை இன்ன பெண்மணியின் அடிமையான இன்னாரே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக செய்(து
கொடுத்)தார்.
அது செய்யப்பட்டு (உரிய
இடத்தில்) வைக்கப்பட்ட போது அதன் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏறி) நின்று
கிப்லாவை முன்னோக்கித் (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) சொன்னார்கள். மக்களும் அன்னாருக்குப்
பின்னால் (தொழுகையில்) நின்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குர்ஆன்
வசனங்களை) ஓதிவிட்டு, ருகூஉச் செய்தார்கள். மக்களும் அவர்களுக்குப் பின்னால் ருகூஉச் செய்தனர். பிறகு
நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி (நிமிர்ந்து நின்றுவிட்டு)ப் பிறகு (முதுகைத் திருப்பாமல்)
பின்வாட்டில் நகர்ந்து தரையில் (இறங்கி) சஜ்தா செய்தார்கள். பிறகு திரும்பவும் மேடைக்குச்
சென்று ஓதினார்கள். பிறகு ருகூஉ செய்தார்கள். அதன் பின்னர் தலையை உயர்த்தி (நிமிர்ந்து
நின்று விட்டு)ப் பிறகு (முதுகைத் திருப்பாமல்) பின்வாட்டில் நகர்ந்து வந்து தரையின்
மீது சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். இது தான் நடந்த நிகழ்ச்சியாகும்.
அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய
நான்) கூறுகின்றேன்.
அலீ பின் அப்தில்லாஹ்
அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் அஹ்மத் பின்
ஹம்பல் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் பற்றிக் கூறுகையில், (தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள், (பின் பற்றித் தொழுத) மக்களைவிட உயரமான
இடத்தில் (நின்று கொண்டு) இருந்தார்கள் என்பது பற்றிய இந்த ஹதீஸின் கருத்திலிருந்து
மக்களைவிட உயரமான இடத்தில் இமாம் இருப்பதில் தவறில்லையென்றே நான் கருதுகின்றேன் என்றார்கள்.
அப்போது நான் (இது சம்பந்தமாக) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் ஏராளமாகக் கேட்கப்படுகிறதாமே!
அவரிடமிருந்து இந்த ஹதீஸை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அஹ்மது பின்
ஹம்பல் (ரஹ்) அவர்கள், இல்லை (நான் அவரிடமிருந்து இந்த ஹதீஸை செவியுறவில்லை) என்று பதிலளித்தார்கள்.
٣٧٨حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ
أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم سَقَطَ عَنْ فَرَسِهِ، فَجُحِشَتْ سَاقُهُ أَوْ
كَتِفُهُ، وَآلَى مِنْ نِسَائِهِ شَهْرًا، فَجَلَسَ فِي مَشْرُبَةٍ لَهُ،
دَرَجَتُهَا مِنْ جُذُوعٍ، فَأَتَاهُ أَصْحَابُهُ يَعُودُونَهُ، فَصَلَّى بِهِمْ
جَالِسًا، وَهُمْ قِيَامٌ فَلَمَّا سَلَّمَ قَالَ " إِنَّمَا جُعِلَ
الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ
فَارْكَعُوا، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا
قِيَامًا ". وَنَزَلَ لِتِسْعٍ وَعِشْرِينَ فَقَالُوا يَا رَسُولَ
اللَّهِ إِنَّكَ آلَيْتَ شَهْرًا فَقَالَ " إِنَّ الشَّهْرَ تِسْعٌ
وَعِشْرُونَ ".
378 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணம் செய்து கொண்டிருந்த போது) தமது
குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களது கணைக் கால் அல்லது தோள்பட்டை
கிழிந்து விட்டது. மேலும் (இந்தக் காலகட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களை
ஒரு மாத காலத்திற்கு நெருங்க மாட்டேன் என்றும் சத்தியம் செய்திருந்தார்கள். அப்போது
அவர்கள் தமக்குரிய மாடி அறையொன்றில் ஏறி அமர்ந்தார்கள். அதனுடைய ஏணி பேரீச்சங்கட்டையினால்
அமைந்திருந்தது. ஆகவே அவர்களுடைய தோழர்கள் அவர்களிடம் உடல்நலம் விசாரிக்க வந்த போது
(அந்த அறைக்குள் ளேயே) அவர்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள்; நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து
(தொழுகையை) முடித்த போது, பின்பற்றப்படுவதற்காக இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர்
சொல்லுங்கள்; அவர் ருகூஉ செய்தால் ருகூஉ செய்யுங்கள்; அவர் சஜ்தாச் செய்தால் நீங்களும் சஜ்தா
செய்யுங்கள்; அவர் நின்றவராகத் தொழுதால் நீங்களும் நின்றவராகத் தொழுங்கள் என்று சொன்னார்கள்.
(அந்த அறையிலிருந்து) அவர்கள் இருபத்தொன்பதாம் நாள் இறங்கிவந்தார்கள். அப்போது மக்கள், ஒரு மாதகாலம் தங்கள் மனைவிமார்களை நெருங்க
மாட்டேன் என தாங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்)
அவர்கள், இந்த மாதத்திற்கு இருத்தொன்பது நாட்கள்தாம்
என்று கூறினார்கள்.
(19)باب إِذَا أَصَابَ ثَوْبُ الْمُصَلِّي امْرَأَتَهُ إِذَا
سَجَدَ
பாடம்
: 19
சஜ்தா செய்யும்
போது தொழுது கொண்டிருப்பவரின் ஆடை அவருடைய மனைவியின் மேல் பட்டுவிட்டால் (அவருடைய தொழுகை
பாழாகிவிடுமா?)
٣٧٩حَدَّثَنَا
مُسَدَّدٌ، عَنْ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ مَيْمُونَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ
صلى الله عليه وسلم يُصَلِّي وَأَنَا حِذَاءَهُ وَأَنَا حَائِضٌ وَرُبَّمَا
أَصَابَنِي ثَوْبُهُ إِذَا سَجَدَ. قَالَتْ وَكَانَ يُصَلِّي عَلَى
الْخُمْرَةِ.
379 மைமூனா (ரலி) அவர்கள்
கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களுக்கு எதிரில் நான் படுத்துக் கொண்டிருப்பேன்.
அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது
சில நேரங்களில் அவர்களது ஆடை என் மீது படும். நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சங் கீற்றினால்
வேயப்பட்ட) தொழுகை விரிப்பில் தொழுவார்கள்.
(20)باب الصَّلاَةِ عَلَى الْحَصِيرِ
பாடம்
: 20
பாயில்
தொழுதல்.
وَصَلَّى جَابِرٌ وَأَبُو سَعِيدٍ فِي السَّفِينَةِ
قَائِمًا.
وَقَالَ الْحَسَنُ تُصَلِّي قَائِمًا مَا لَمْ تَشُقَّ
عَلَى أَصْحَابِكَ، تَدُورُ مَعَهَا وَإِلاَّ فَقَاعِدًا.
ஜாபிர் பின் அப்தில்லாஹ்
(ரலி), அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர்
கப்பலில் நின்ற வண்ணம் தொழுதார்கள்.
(நீ கப்பலில் செல்லும்
போது) உன் சகாக்களுக்கு சிரமம் ஏற்படாமலிருக்குமானால் நின்ற நிலையில் கப்பல் செல்லும்
திசையிலேயே தொழுது கொள்; அவர்களுக்கு சிரமம் ஏற்படுமாயின் உட்கார்ந்து தொழு! என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்)
அவர்கள் கூறியுள்ளார்கள்.
٣٨٠حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ
بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ، مُلَيْكَةَ
دَعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ، فَأَكَلَ
مِنْهُ ثُمَّ قَالَ " قُومُوا فَلأُصَلِّ لَكُمْ ". قَالَ أَنَسٌ
فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ
بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَصَفَفْتُ وَالْيَتِيمَ
وَرَاءَهُ، وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ.
380 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் (தாய்வழிப்) பாட்டி
முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண)
அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில்
சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப்
பின்னர், எழுங்கள்! உங்களுக்காக நான் (உபரியானத்
தொழுகையை) தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய பாயொன்றை
(எடுப்பதற்காக அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்துப் போய்விட்டி ருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே
நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி
எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு (தமது இல்லம் நோக்கித்)
திரும்பிச் சென்றார்கள்.
No comments:
Post a Comment