Friday, August 11, 2017

அத்தியாயம் : 8 தொழுகை ஹதீஸ்கள் 381 முதல் 398 வரை



                                                                   அத்தியாயம் : 8

                                                                        كتاب الصلاة

                                                                      தொழுகை



(21)باب الصَّلاَةِ عَلَى الْخُمْرَةِ
பாடம் : 21

பேரீச்சங்கீற்றினால் வேயப்பட்ட தொழுகை விரிப்பில் தொழுவது.

٣٨١حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ مَيْمُونَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى الْخُمْرَةِ‏.‏

381 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பேரீச்சங் கீற்றினால் வேயப்பட்ட தொழுகை விரிப்பின் மீது தொழுவார்கள்.

(22)باب الصَّلاَةِ عَلَى الْفِرَاشِ
பாடம் : 22

படுக்கை விரிப்பில் தொழுவது.

وَصَلَّى أَنَسٌ عَلَى فِرَاشِهِ.

وَقَالَ أَنَسٌ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَسْجُدُ أَحَدُنَا عَلَى ثَوْبِهِ.


அனஸ் (ரலி) அவர்கள் தமது படுக்கை விரிப்பின் மீது தொழுதார்கள்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும் போது எங்களில் சிலர் தமது ஆடையின் மீதே சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

٣٨٢حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرِجْلاَىَ فِي قِبْلَتِهِ، فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَىَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا‏.‏ قَالَتْ وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ‏.‏

382 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்புறமாக (படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அப்போது எனது கால்கள் அவர்களது கிப்லாவில் (அவர்கள் சஜ்தா செய்யுமிடத்தில்) இருந்து கொண்டிருக்கும். அவர்கள் சஜ்தாவிற்கு வரும் போது என்னை தமது விரலால் தொட்டுணர்த்துவார்கள். உடனே நான் எனது கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்குச் சென்றுவிட்டால் (மறுபடியும்) நான் கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை.

٣٨٣حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي وَهْىَ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى فِرَاشِ أَهْلِهِ، اعْتِرَاضَ الْجَنَازَةِ‏.‏

383 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான் படுத்திருக்கும்) எனது படுக்கை விரிப்பில் தொழுவார்கள். அப்போது அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையே ஜனாஸாவைப் போன்று குறுக்கே படுத்திருப்பேன்.

٣٨٤حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ عِرَاكٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي وَعَائِشَةُ مُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى الْفِرَاشِ الَّذِي يَنَامَانِ عَلَيْهِ‏.‏


384 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தாமும் தம் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களும் உறங்கும் படுக்கை விரிப்பில் (இரவில்) தொழுவார்கள். அப்போது (என் சிறிய தாயாரான) ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் (அவர்கள் சஜ்தா செய்யும்) கிப்லா திசைக்கும் இடையே குறுக்கே படுத்திருப்பார்கள்.

(23)باب السُّجُودِ عَلَى الثَّوْبِ فِي شِدَّةِ الْحَرِّ
பாடம் : 23

கடுமையான வெப்பநேரத்தில் (தாம் அணிந்திருக்கும்) துணியின் மீது சிரவணக்கம் செய்வது.

وَقَالَ الْحَسَنُ كَانَ الْقَوْمُ يَسْجُدُونَ عَلَى الْعِمَامَةِ وَالْقَلَنْسُوَةِ وَيَدَاهُ فِي كُمِّهِ.


நபித்தோழர்கள் (தாம் அணிந்திருக்கும்) தலைப்பாகையின் (ஓர் ஓரத்தின்) மீதும் தொப்பியின் மீதும் (வெயில் நேரத்தில்) சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்; இருகைகளையும் (நிலத்தில் ஊன்றும் போது) சட்டைக் கைக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள் என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

٣٨٥حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ حَدَّثَنِي غَالِبٌ الْقَطَّانُ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَضَعُ أَحَدُنَا طَرَفَ الثَّوْبِ مِنْ شِدَّةِ الْحَرِّ فِي مَكَانِ السُّجُودِ‏.‏

385 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (நண்பகல் நேரத்தில்) தொழும் போது எங்களில் சிலர் கடுமையான வெப்பம் காரணமாக ஆடையின் ஒரு பகுதியை சிரவணக்கம் (சஜ்தா) செய்யுமிடத்தில் வைத்துக் கொள்வார்கள்.

(24)باب الصَّلاَةِ فِي النِّعَالِ
பாடம் : 24

செருப்பணிந்து தொழுதல்.

٣٨٦حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنَا أَبُو مَسْلَمَةَ، سَعِيدُ بْنُ يَزِيدَ الأَزْدِيُّ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي نَعْلَيْهِ قَالَ نَعَمْ‏.‏

386 சயீத் பின் யஸீத் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுவார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள்.

(25)باب الصَّلاَةِ فِي الْخِفَافِ
பாடம் : 25

காலுறைகள் அணிந்து தொழுதல்.

٣٨٧حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ، يُحَدِّثُ عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ رَأَيْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ بَالَ ثُمَّ تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ قَامَ فَصَلَّى، فَسُئِلَ فَقَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم صَنَعَ مِثْلَ هَذَا‏.‏ قَالَ إِبْرَاهِيمُ فَكَانَ يُعْجِبُهُمْ، لأَنَّ جَرِيرًا كَانَ مِنْ آخِرِ مَنْ أَسْلَمَ‏.‏


387 ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் உளூ செய்தார்கள்; (கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக ஈரக்கையால் தடவி) தமது காலுறைகள் மீது மஸ்ஹுச் செய்தார்கள் பிறகு (காலுறை களுடனேயே) எழுந்து தொழுவதை நான் கண்டேன். அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(காலுறைகளின் மீது மஸ்ஹுச் செய்து தொழலாம் என்ற கருத்துடைய அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர்கள் முதலான) மக்களுக்கு ஜரீர் (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் மகிழ்ச்சியளிப்பதாய் அமைந்தது. ஏனெனில் ஜரீர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கடைசியாக இஸ்லாத்தைத் தழுவியவர் ஆவார்.




٣٨٨حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ وَضَّأْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَمَسَحَ عَلَى خُفَّيْهِ وَصَلَّى‏.



388 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் ஊற்றினேன். (அவர்கள் உளூவின் இறுதியில், தமது கால்களைக் கழுவாமல்) தமது காலுறைகள் மீது (ஈரக் கையால்) தடவி (மஸ்ஹு செய்து)விட்டு (காலுறைகளுடனேயே) தொழுதார்கள்.

(26)باب إِذَا لَمْ يُتِمَّ السُّجُودَ
பாடம் : 26

(தொழுகையின் ஓர் அங்கமான) சிரவணக்கத்தை முழுமையாகச் செய்யாவிட்டால் (ஏற்படும் விளைவு).

٣٨٩أَخْبَرَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا مَهْدِيٌّ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، رَأَى رَجُلاً لاَ يُتِمُّ رُكُوعَهُ وَلاَ سُجُودَهُ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لَهُ حُذَيْفَةُ مَا صَلَّيْتَ ـ قَالَ وَأَحْسِبُهُ قَالَ ـ لَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ سُنَّةِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم‏.‏

389 அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தமது (தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் முழுமையாகச் செய்யாத ஒருவரைக் கண்ட ஹுதைஃபா (பின் அல்யமான்-ரலி) அவர்கள், அவர் தொழுது முடித்த போது நீர் (உரியமுறையில்) தொழவில்லை என்று கூறினார்கள்.

மேலும் அவர்கள், (இதே நிலையில்) நீர் இறந்து விட்டால் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழி முறைக்கு மாற்றம் செய்தவராகவே இறக்கின்றீர் என்று சொன்னதாகவும் நான் எண்ணுகிறேன்.

(27)باب يُبْدِي ضَبْعَيْهِ وَيُجَافِي فِي السُّجُودِ
பாடம் : 27

சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது இரு புஜங்களையும் (விலாவோடு சேர்க்காமல் அவற்றை) இடைவெளிவிட்டு வைக்க வேண்டும்.

٣٩٠أَخْبَرَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ جَعْفَرٍ، عَنِ ابْنِ هُرْمُزَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا صَلَّى فَرَّجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ‏.‏ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ نَحْوَهُ‏.‏

390 அப்துல்லாஹ்பின் மாலிக் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழும் போது (சிரவணக்கத்தில்) அவர்களின் இரு அக்குள் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கை (புஜங்)களையும் விரி(த்துவை)ப்பார்கள்.

இதே கருத்தில் அமைந்த இன்னொரு ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(28)باب فَضْلِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ
பாடம் : 28

(இறையில்லம் கஅபாவின் திசையான) கிப்லாவை முன்னோக்குவதன் சிறப்பு.

يَسْتَقْبِلُ بِأَطْرَافِ رِجْلَيْهِ. قَالَ أَبُو حُمَيْدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

(சிரவணக்கம் செய்யும் போது) ஒருவர் தமது இருகால் (விரல்)களின் நுனிகளை கிப்லாவை முன்னோக்கி வைக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறை பற்றி அறிவிக்கையில் அபூஹுமைத் (ரலி) அவர்கள் இதைக் கூறினார்கள்.

٣٩١حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ الْمَهْدِيِّ، قَالَ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ سَعْدٍ، عَنْ مَيْمُونِ بْنِ سِيَاهٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ صَلَّى صَلاَتَنَا، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا، فَذَلِكَ الْمُسْلِمُ الَّذِي لَهُ ذِمَّةُ اللَّهِ وَذِمَّةُ رَسُولِهِ، فَلاَ تُخْفِرُوا اللَّهَ فِي ذِمَّتِهِ ‏"‏‏.‏


391 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாம் தொழுவது போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர்தாம் முஸ்லிம். அத்தகையவருக்கு அல்லாஹ்வின் பொறுப்பும் (காப்புறுதியும்) அவனுடைய தூதரின் பொறுப்பும் (காப்புறுதியும்) உண்டு. எனவே (இப்படிப்பட்டவர் மீது) அல்லாஹ் ஏற்றுக்கெண்டிருக்கும் பொறுப்பி(னைப் பாழாக்கும் விஷயத்தி)ல் அல்லாஹ்வுக்கு(ம் அவனுடைய தூதருக்கும்) வஞ்சனை செய்து விடாதீர்கள்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


٣٩٢حَدَّثَنَا نُعَيْمٌ، قَالَ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ‏.‏ فَإِذَا قَالُوهَا وَصَلَّوْا صَلاَتَنَا، وَاسْتَقْبَلُوا قِبْلَتَنَا، وَذَبَحُوا ذَبِيحَتَنَا، فَقَدْ حَرُمَتْ عَلَيْنَا دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ إِلاَّ بِحَقِّهَا، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ ‏"‏‏.‏

392. 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை' என்று மக்கள் (சான்று) கூறும் வரை அவர்களோடு போராட வேண்டுமென்று நான் ஏவப்பட்டுள்ளேன். அந்த (லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற) கலிமாவை அவர்கள் கூறி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால், தக்க காரணமின்றி அவர்களின் உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.



٣٩٣قَالَ ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ وَقَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ قَالَ سَأَلَ مَيْمُونُ بْنُ سِيَاهٍ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ يَا أَبَا حَمْزَةَ، مَا يُحَرِّمُ دَمَ الْعَبْدِ وَمَالَهُ فَقَالَ مَنْ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَصَلَّى صَلاَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا، فَهُوَ الْمُسْلِمُ، لَهُ مَا لِلْمُسْلِمِ، وَعَلَيْهِ مَا عَلَى الْمُسْلِمِ‏.‏

393. 'ஹம்ஸாவின் தந்தையே! ஓர் அடியானுடைய உயிருக்கும் பொருளுக்கும் சேதம் ஏற்படுத்துவதைத் தடை செய்வது எது?' என நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று சான்று கூறி, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நாம் அறுத்தவற்றை சாப்பிட்டு வருகிறவர் முஸ்லிம். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய உரிமைகள் அவருக்கும் உண்டு. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் (குற்றம் புரிவதால்) என்ன தண்டனை உண்டோ அது அவருக்கும் உண்டு' என்று அனஸ்(ரலி) கூறினார்' என மைமூன் இப்னு ஸியாஹ் அறிவித்தார்.

(29)باب قِبْلَةِ أَهْلِ الْمَدِينَةِ وَأَهْلِ الشَّأْمِ وَالْمَشْرِقِ
பாடம் : 29

மதீனா வாசிகள், ஷாம்வாசிகள், கிழக்கில் வசிப்பவர்கள் ஆகியோரின் தொழும்திசை (கிப்லா).

لَيْسَ فِي الْمَشْرِقِ وَلاَ فِي الْمَغْرِبِ قِبْلَةٌ، لِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا».


கிழக்கிலோ மேற்கிலோ (மதீனா வாசிகளுக்கும் ஷாம் வாசிகளுக்கும்) கிப்லா இல்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், (மதீனாவாசிகளிடம்), மலஜலம் கழிக்கும் போது கிப்லா (கஅபா) திசையை முன்னோக்காதீர்கள். அப்போது கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ, திரும்பிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்கள்.


٣٩٤حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا أَتَيْتُمُ الْغَائِطَ فَلاَ تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ وَلاَ تَسْتَدْبِرُوهَا، وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا ‏"‏‏.‏ قَالَ أَبُو أَيُّوبَ فَقَدِمْنَا الشَّأْمَ فَوَجَدْنَا مَرَاحِيضَ بُنِيَتْ قِبَلَ الْقِبْلَةِ، فَنَنْحَرِفُ وَنَسْتَغْفِرُ اللَّهَ تَعَالَى‏.‏ وَعَنِ الزُّهْرِيِّ عَنْ عَطَاءٍ قَالَ سَمِعْتُ أَبَا أَيُّوبَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ‏.‏

394. 'நீங்கள் மலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்பக்கமாகவோ பின்பக்கமோ ஆக்கி உட்காராதீர்கள். கிழக்குத் திசையையோ மேற்குத் திசையையோ முன்னோக்குங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ அய்யூபுல் அன்சாரி(ரலி) அறிவித்துவிட்டுத் தொடர்ந்து, 'நாங்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்கே கிப்லாவுக்கு எதிரில் அமரும் விதத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். அதைவிட்டு நாங்கள் திரும்பி அமர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் தேடினோம்' எனக் கூறினார்.

(30)بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى}
பாடம் : 30

இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக (கிப்லாவாக) வைத்துக் கொள்ளுங்கள் எனும் (2:125ஆவது) இறைவசனத் தொடர்.


٣٩٥حَدَّثَنَا الحُمَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: سَأَلْنَا ابْنَ عُمَرَ عَنْ رَجُلٍ طَافَ بِالْبَيْتِ العُمْرَةَ، وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، أَيَأْتِي امْرَأَتَهُ؟ فَقَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، وَصَلَّى خَلْفَ المَقَامِ رَكْعَتَيْنِ، وَطَافَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ»، وَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ

395. 'உம்ராவிற்காக (இஹ்ராம் அணிந்து) வந்த ஒருவர் கஅபாவைச் சுற்றி வந்தார். ஸஃபா, மர்வாவிற்கிடையில் 'ஸயீ' செய்யவில்லை. இவர் தன்னுடைய மனைவியிடம் உடலுறவு கொள்ளலாமா?' என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டதற்கு, 'நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது ஏழு முறை கஅபாவை வலம்வந்தார்கள். மகாம் இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். ஸஃபா, மர்வாவிற்கிடையில் 'ஸயீ' செய்தார்கள். உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது' என இப்னு உமர்(ரலி) கூறினார்' என அம்ர் இப்னு தீனார் அறிவித்தார்.


وَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَقَالَ: «لاَ يَقْرَبَنَّهَا حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ»٣٩٦


396. 'ஜாபிர் இப்னு அப்தில்லா(ரலி) அவர்களிடம் இது பற்றிக் நாங்கள் கேட்டதற்கு, 'ஸஃபா, மர்வாவிற்கிடையில் 'ஸயீ' செய்து முடிக்கும் வரை தங்களின் மனைவியை நெருங்கக் கூடாது' என்று கூறினார்கள்' என அம்ர் இப்னு தினார் என்பவர் அறிவித்தார்.


٣٩٧حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سَيْفٍ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، قَالَ أُتِيَ ابْنُ عُمَرَ فَقِيلَ لَهُ هَذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ الْكَعْبَةَ‏.‏ فَقَالَ ابْنُ عُمَرَ فَأَقْبَلْتُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ خَرَجَ، وَأَجِدُ بِلاَلاً قَائِمًا بَيْنَ الْبَابَيْنِ، فَسَأَلْتُ بِلاَلاً فَقُلْتُ أَصَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْكَعْبَةِ قَالَ نَعَمْ رَكْعَتَيْنِ بَيْنَ السَّارِيَتَيْنِ اللَّتَيْنِ عَلَى يَسَارِهِ إِذَا دَخَلْتَ، ثُمَّ خَرَجَ فَصَلَّى فِي وَجْهِ الْكَعْبَةِ رَكْعَتَيْنِ‏.‏

397. 'சிலர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வந்து, 'இதோ இறைத்தூதர் கஅபாவில் நுழைந்துவிட்டார்கள்' என்று கூறினார்கள். இப்னு உமர் முன்னோக்கி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள். அப்போது பிலால்(ரலி) இரண்டு வாசல்களுக்கிடையில் நின்றிருந்தார். 'கஅபாவின் உள்ளே நபி(ஸல்) அவர்கள் தொழுதார்களா?' என அவரிடம் கேட்டதற்கு, 'ஆம்' என்று சொல்லிவிட்டு, 'நீர் கஅபாவின் உள்ளே நுழையும்போது இடப்பக்கம் இருக்கிற இரண்டு தூண்களுக்கிடையில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் வெளியே வந்து கஅபாவின் வாசலுக்கு முன்பாக நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்' என்று பிலால்(ரலி) கூறினார்' என முஜாஹித் அறிவித்தார்.

٣٩٨حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ لَمَّا دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْبَيْتَ دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا، وَلَمْ يُصَلِّ حَتَّى خَرَجَ مِنْهُ، فَلَمَّا خَرَجَ رَكَعَ رَكْعَتَيْنِ فِي قُبُلِ الْكَعْبَةِ وَقَالَ ‏ "‏ هَذِهِ الْقِبْلَةُ ‏"‏‏.

398. 'நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் உள்ளே நுழைந்ததும் அதன் எல்லா ஓரங்களிலும் நின்று பிரார்த்தித்தார்கள். அதிலிருந்து வெளியாகும் வரை அவர்கள் தொழவில்லை. வெளியே வந்தபின்பு கஅபாவின் முன்பாக நின்று இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு 'இதுதான் கிப்லா' என்று கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.


No comments:

Post a Comment